Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04

அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04

அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும்
அறிமுகம் செய்துள்ள நிலையில்…

அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) போன்ற பழங்கால கிரேக்க மற்றும் இந்திய நாஸ்தீக அத்வைதிகளின் கோட்பாடுகளை இஸ்லாமாக முஃஅவைப்பதன் மூலம் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை திரிகயிப்மதோடு அகௌரவப்படுத்தியும் வாழ்கின்றனர்.

மற்றொரு பிரிவினர் அஸ்மா ஸிஃபாத்தில் வழிகெட்ட அஷ்அரிய்யாக்களாகும்.

  • இவர்கள் தம்மை சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களாக உலகுக்கு இன்று வரை அறிமுகம் செய்து வருகின்றனர்.
  • இவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைப் படியோ, நபித்தோழர்களின் வழிமுறைகளின் வழியிலோ, சிறந்த இமாம்களின் வழியிலோ செல்வதில்லை.

மாற்றமாக ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் பின்னால் வந்த அஸ்மா ஸிஃபாத்தில் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி என்ற அறிஞரின் தடுமாற்ற காலமாக பதியப்பட்டுள்ள குல்லாபியாக்களின் நிலைப்பாட்டை போதிப்பதன் மூலம் இந்த உலகில் அல்லாஹ் தனக்குரியதாக அறிவித்துள்ள பூரணமான, ஒரு முஸ்லிம் அவசியம் நிலைப்படுத்தி, நம்பிக்கை கொள்ள வேண்டிய அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகளை அனைத்து குறைபாடுகளும் உள்ள மனிதப் பண்புகளுக்கு ஒப்பிட்டு, அவற்றைக் கொண்டு அல்லாஹ்வுக்கு மனித உருவத்தையும் கற்பனை செய்து விட்டு பின்னர் அப்படி வரமுடியாது என இவர்களாகவே முடிவு செய்து, வழிகெட்டதன் மூலம் இம்மையில் அல்லாஹ் என்பவன் யார் எனத் தெரியாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا» ( أخرجه البخاري برقم/ ٧٤٣٥ )

நிச்சயமாக உங்கள் இரட்சகனை நீங்கள் கண்களால் காண்பீர்கள் ( புகாரி/ 7435)

«إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ ( البخاري) 

இந்த நிலாவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படாதது போன்று நிச்சயமாக நீங்கள் உங்கள் இரட்சகனைக் கண்களால் அல்லாஹ்வைக் காண்பீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறிய செய்தி புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மறுமை நாளில் அல்லாஹ்வை முழு நிலைவை போன்று காண்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அந்நாளில் அல்லாஹ் தன்னை தனது படைப்புக்களிடம் காண்பிக்கின்ற போது வெட்கித் தலைகுனியும் நிலை வேறு.

அவ்வாறு தனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துவது நடந்தே தீரும். அந்த நிகழ்வை நிகழ்த்துபவன் புதிதாகத் தோன்றிய அல்லாஹ்வையா குறிக்கும் ? என்ற கேள்விக்கு நவீன அஷ்அரிய்யா வழிகேடர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றனர்? இது அல்லாஹ்வை கௌரவப்படுத்துவதாக அமையுமா?

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

  • எதுவும், யாரும் இல்லாத நிலையில் அவனது அர்ஷின் மீதிருந்தவனாக,
  • இப்போதும் அவனது படைப்புகளுக்கு ஒப்பில்லாது இருப்பவனாக,
  • மறுமை நாளிலும் அதன் மீதிருந்தவாறு எட்டு வானவர்களால் சுமக்கப்படுபவனாக நம்பிக்கை கொள்வது போன்று அவனை தனித்தவனாக,
  • அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக,
  • ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக,
  • மனைவி, மக்கள், இணை துணை அற்றவனாக,
  • இவ்வுலகில் மனித படைப்புக்கள் அவர்களின் கண்ணால் நேரடியாகப் பார்க்க முடியாதவனாக,
  • மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக,
  • சுவனத்தில் அவனது அடியார்களோடு அவன் தனது மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து யதார்த்தமான அழகான தனது திரையை நீக்கி தன்னை அவர்களுக்கு காண்பிப்பவனாக,
  • மறுமையில் காஃபிர்களும் அவன் ஒருவன் இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக,
  • மறுமை நாளில் அடியார்கள் தொடர்பான தீர்ப்புக்களை தன்னந்தனியே நின்று முடித்து வைப்பவனாக

எனப் இன்னும் பல நிரப்பமான, முழுமையான குறைகள் அற்ற, பண்புகளைக் கொண்டு அல்லாஹ் வர்ணிக்கப்படுகின்றான்.

فتعالى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ (116) وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ (المؤمنون: ١١٦- ١١٧) 

சத்தியமான அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான். அவனை அன்றி உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் யாரும் இல்லை. (அவன்) மகத்தான அர்ஷின் அதிபதி. யார் அல்லாஹ்வோடு வேறு கடவுளை அழைக்கிறானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது கணக்கு வழக்கு அல்லாஹ்விடமே உண்டு. நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள். (அல்முஃமினூன் – 116, 117)

அந்த அல்லாஹ்வை நபித்தோழர்களுக்குப் பின்னால் தோன்றிய வழிகெட்ட அபூ மன்சூர் அல்- ஹல்லாஜ், அபூதாலிப் அல்மக்கி (மக்கு), நாஸ்திகன் இப்னு அரபி போன்ற அரபி மொழி வழிகேடர்களின் இறையிற் கோட்பாடுகளை காப்பி செய்து அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காது, அல்லாஹ்வும் அவனது தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த விளக்கங்களுக்கு மாற்றமான நாஸ்தீக, இறைமறுப்பு சார்ந்த விளக்கங்கள் தந்து அழியக்கூடிய அற்பமான, பலவீனமான, மண்ணோடு மண்ணாக மக்கி, உண்மையான அல்லாஹ்வின் நாட்டத்தால் மீண்டும் எழுப்பபட்டு விசாரிக்கப்பட உள்ள அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பிட்டு

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  • நீரும் அவனே,
  • சிவனும் அவனே,
  • முருகனும் அவனே,
  • புத்தரும் அவனே,

போன்ற வழிகெட்ட இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி , முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் அத்வைதிகள் வழிகெடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் அசத்தியவாதிகளையும் இலக்காகக் கொண்டு அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பது, உயய்ந்த அவனது பண்புகள் பற்றிய அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் சான்றுகளின் சான்றுகளில் இருப்பதை சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் நிலைப்படுத்தியது போன்று அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடாது, பொருளை சிதைக்காது நாம் நம்பிக்கை கொள்வதன் மூலம் மறுமையில் அந்த இரட்சகனைச் சந்திக்க விரும்பினால் அவனும் நம்மைச் சந்திக்க விரும்புவான் என இடம் பெறும் நபி மொழிக்குரியவர்களாக நம்மை ஆக்குவானாக! ஆமீன்…

காத்தான்குடி வழிகேடன் அப்துர் ரவூஃப் பேச்சினை செவிமடுக்க Click Here…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *