Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » நோவினையை உணரும் தோல் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-40 [சூறா அந்நிஸா–17]

நோவினையை உணரும் தோல் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-40 [சூறா அந்நிஸா–17]

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏

“நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகத்தில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.” (4:56)

நரகவாதிகள் நரகத்தில் சுட்டெரிக்கப் படுவார்கள். அவர்களது தோல்கள் கருகிய பின்னர் மீண்டும் அவர்களது தோல்கள் பழைய நிலைக்கு மீட்டப்படும். இதற்கான காரணத்தை அல்லாஹ் கூறும் போது அவர்கள் வேதனையை உணர்வதற்காக புதிய தோல்கள் மாற்றப்படுவதாகக் கூறுகின்றான்.

இந்த வசனத்தின் மூலம் வேதனையை உணரும் நரம்புகள் தோலில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த உண்மை அண்மைக்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும். மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவனது மூளையை மரத்துப் போகச் செய்வதில்லை. அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் ஊசி மூலம் மருந்தை ஏற்றி அந்தப் பகுதித் தோலை மரத்துப் போகச் செய்கின்றனர். பின்னர் அவரது தோல் வெட்டப்படுகின்றது. ஆனால், நோயாளிகளுக்கு எந்த நோவும் ஏற்படுவதில்லை. நோவை உணரும் நரம்புகள் மரத்துப் போவதால் மூளைக்கு வலி (நோவு) செல்வது தடுக்கப்படுகின்றது. இந்த உண்மையை அல்குர்ஆன் அன்றே அழகாகச் செல்லிவிட்டது என்றால் குர்ஆன் மனிதப் படைப்பல்ல’ அதற்கும் அப்பாற்பட்டு மனிதனைப் படைத்தவனுக்குத் தானே இந்த உண்மை தெரியும்.

1400 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் அநாதையாகப் பிறந்து வளர்ந்த படிக்காத ஒருவரால் இதை ஒரு போதும் அறிந்திருக்க முடியாது. குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது ஒரு நல்ல சான்றுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *