Featured Posts
Home » இஸ்லாம் » ரமளான் வசந்தம் (01)

ரமளான் வசந்தம் (01)

புனித குர்ஆனை சைத் பின் ஸாபித் த‌லைமையில் முதன் முதலில் ஒன்று சேர்த்தவர் நமது முதல் கலீஃபாவே.

رضي الله عنه وعن أصحاب نبيه صلى الله عليه وسلم.

சுன்னா வழி நடக்கும் முஸ்லிம்களின் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் நமது பாசமிகு இறைத் தூதரின் வஃபாத்தின் பின்னால் ஸஹாபா பெருமக்களால் முதல் கலீஃபாவாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

கலீஃபாவின் காலத்தின் நடைபெற்ற யமாமா போரில் பல ஹாபிழ்கள் ஷஹீதானார்கள்.

மீதமானோர் ஷஹீதாகி விட்டால் மணனம் செய்த குர்ஆனிய வசனங்களும் காணாமல் போய்விடும் என்பதை அஞ்சிய கலீஃபா அவர்கள் இஸ்திகாரா செய்து முக்கிய பணியாக குர்ஆனை

அன்ஸாரிய இளைஞர்களில் ஒருவரும், மதீனா முஃப்திகளில் ஒருவரும், வஹி எழுதியவர்களில் ஒருவருமான
زيد بن ثابت بن الضحاك الأنصاري رضي الله عنه
சைத் பின் ஸாபித் பின் அழ்ழஹ்ஹாக் அல்அன்ஸாரீ (ரழி) அவர்களின் நேரடித் தலைமையில்ஒன்று சேர்ப்பது தொடர்பாக உமர் ரழியோடு ஆலோசனை நடத்தி இறுதியில் அந்த கருத்தை அவர்களும் சரி கண்டதும் சைத் ரழியை அழைத்த கலீஃபா அவர்கள் மிகப் பெரிய பணியை சுமத்திடும் முன் உமர் (ரழி) அவர்களும் அங்கு அமர்ந்திருந்த வேளை,

فَقالَ أبو بَكْرٍ: إنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، ولَا نَتَّهِمُكَ، كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ. فَوَاللَّهِ لو كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ ما كانَ أثْقَلَ عَلَيَّ ممَّا أمَرَنِي به مِن جَمْعِ القُرْآنِ،

👉சைத்! நீ புத்தி கூர்மையான ஒரு இளைஞன். உன்னை நாம் சந்தேகமாக பார்க்கவும் மாட்டோம். பார்ப்பதுமில்லை.

👉நீ இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியை(வஹியை) எழுதுபவனாக இருந்தாய். எனவே நீ குர்ஆனிய வசனங்களை (எழுதியவர்வர்களிடம் தேடி) ஒன்று அதனை (ஒரு -முஸ்ஹஃப்- ஏட்டில்) சேர்ப்பாயாக! எனக் கூறியதை கேட்டு அதிர்ந்து போது சைத் ரழி அவர்கள்:

👉அல்லாஹ்வின் மீ்து சத்தியமாக மலைகளில் ஒரு மலையைத்தான் நான் நகர்த்த அவர்கள் என்னை வேண்டிக் கொண்டாலும் செய்வேன். அதை விட குர்ஆனை ஒன்று சேர்ப்பது எனக்கு மிகவும் பாரமான ஒன்றாக இருந்தது எனக் கூறி விட்டு அவ்விருவரிடமும்:

قُلتُ: كيفَ تَفْعَلَانِ شيئًا لَمْ يَفْعَلْهُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم؟ فَقالَ أبو بَكْرٍ: هو واللَّهِ خَيْرٌ، فَلَمْ أزَلْ أُرَاجِعُهُ حتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ له صَدْرَ أبِي بَكْرٍ وعُمَرَ،

👉அல்லாஹ்வின் தூதர் அவர்கள் செய்யாத ஒரு காரியத்தை நீங்கள் இருவரும் எப்படி செய்வீர்கள்? எனக் கேட்டதோடு, கலீஃபா அவர்களை மீண்டும் மீண்டும் நான் வேண்டியக் கொள்ளவே
👉 கலீஃபா அவர்கள் அது நல்ல பணிதான் நீ ஒன்று சேர் எனக் கூறினார்கள்.
👉பின்னர், அபூபக்கர், உமர் (ரழி) ஆகிய இருவரின் இதயங்களை விரிவு படுத்தியதைப் போல அல்லாஹ் இது விஷயமாக எனது இதயத்தையும் விரிவுபடுத்தினான் எனக் குறிப்பிடும் சைத் ,(ரழி) அவர்கள்:

فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أجْمَعُهُ مِنَ الرِّقَاعِ والأكْتَافِ، والعُسُبِ وصُدُورِ الرِّجَالِ،

தோல்கள், (நீளமான) எலும்புகள், ஈச்சம் ஓலைகள், மனித உள்ளங்களில் இருந்து என அனைத்து சாதனங்களில் இருந்தும் குர்ஆனைத் தேடி ஒன்று சேர்க்கும் பணியைத் தொடர்ந்தேன்.

حتَّى وجَدْتُ مِن سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مع خُزَيْمَةَ الأنْصَارِيِّ لَمْ أجِدْهُما مع أحَدٍ غيرِهِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إلى آخِرِهِمَا، وكَانَتِ الصُّحُفُ الَّتي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أبِي بَكْرٍ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بنْتِ عُمَرَ.

👉இறுதியில் “
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்கள் (மீதுள்ள நன்மைகள் மீதே) அவர் பெரிதும் ஆசைப்படுகின்றார்; இன்னும், அவர் முஃமின்களோடு மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்” என்ற அத்தவ்பா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்கள் குஸைமா பின் ஸாபித் அல்அன்ஸாரியிடம் காணப்பட்டன. அவை அவரல்லாத வேறு யாரிடமும் இருக்கவில்லை, அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்டவைகள் பல ஏடுகளைக் கொண்டதாக கலீபாவின் நேரடி கண்காணிப்பிலும் அவர்களின் வஃபாத்தின் பின்னால் உமர் ரழி இடமும் பின்னர், ஹஃப்ஸா ரழியிடமும் அவை காணப்பட்டன எனக் குறிப்பிடுகின்றார்கள்.

الراوي : زيد بن ثابت | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم: 4679 |

அறிவிப்பாளர்: சைத் பின் ஸாபித் ரழி , நூல் புகாரி.

தெளிவு

(1) இறைத் தூதர் காலத்தில் இல்லாததை செய்தார்களே. அது பித்ஆ தானே எனக் குறுக்கால் சிலர் கூறுவர்.

தெளிவு : ஒன்று சேர்க்காமல் பல எழுத்து சாதனங்களில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களையே முஸ்ஹஃப் வடிவத்தில் ஒன்று சேர்த்தார்களே அன்றி, குர்ஆனைப் புதிதாக உண்டாக்கவில்லை. அத்துடன், இது பித்ஆ சார்ந்த பணியும் கிடையாது.

(2) நாம் ஓதும் குர்ஆனிய வசனங்களில் ஒரு எழுத்துக் கூட விடுபடாமல் மிகத் துல்லியமாக சேர்க்கப்பட்டவையாகும். அவற்றில் அஹ்லுல் பைத்தினரின் பெயர்கள், அலி ரழியின் பெயர்கள் விடுபட்டன, திட்டமிட்ட வகையில் நீக்கப்பட்டன என்பதெல்லாம் அபாண்டமான? பொய்யான ஷீஆ மதச் சார்பான கற்பனை வாதமாகும் .

(3) முஸ்லிம் தலைவர் ஒருவரிடம் தனது பொறுப்புக்கள் யாவை? அவற்றில் தன்னால் சுமக்க முடியாதவைகளை சுமக்கத் தகுதி பெற்றவர் யார்? என்ற அறிவுப் பின்புலம் இருப்பது முக்கியமானதாகும்.

(05) அல்குர்ஆனை சிதைந்தோ , சிதறியோ விடாது முதன் முதலில் முதலாவதாக ஏடுகளில் ஒன்று நமது சேர்த்தவர் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் அவர்களே!

(04) அன்ஸாரிகளில் ஒருவரான சைத் (ரழி) அவர்கள் மதீனாவில் அதி சிறந்த அறிஞர், ஃபத்வா மார்க்க தீர்ப்பு தகுதி பெற்ற முக்கிய ஆறு ஸஹாபாக்களில் தலை சிறந்த முஃப்திகளில் ஒரு முஃப்தியும் , அதி திறமையான இளமையான அறிஞருமாகும்.

ஆஹா! இவ்வளவு அழகாகவே இந்த புனித குர்ஆனைத் தந்து விட்டு மரணித்து விட்டாரே அந்த சைத் (ரழி).

உண்மையில் இறைப் பாக்கியம் பெற்ற இந்த சைத் (ரழி) அவர்களை குர்ஆனை ஓதும் போதெல்லாம் நினைக்கும் போது கண்கள் குளமாகின்றன .

அந்த சைத் (ரழி) எத்தனை கோடி நன்மைகளைத்தான் அதை இறக்கி வைத்த அர்ஷின் இரட்சகனிடம் பெற்றாரோ! யா அல்லாஹ்!

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *