Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 4.

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 4.

முஸ்லிகள் – இஸ்லாம்தான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க வல்ல மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்லிடவேண்டும்.

இந்த நிலையில் “இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்” எத்துணை பொருள் செறிந்த, காலத்திற்கேற்ற முழக்கம் என்பதை உணர்ந்தேன்.

அம்பேத்கர் “மதமாற்றம் தான் தீண்டாமைக்குத் தீர்வு” எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர் இஸ்லாத்திற்கு வந்திருக்கவேண்டும். அப்போது இருந்தவர்கள் இஸ்லாத்தைச் சரிவர அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றே எனக்குப் படுகின்றது.

நான்: “இல்லை” (நான் குறுக்கிட்டேன்.)

“அம்பேத்கருக்கு அழைப்பே விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஹைதராபாத் நிஜாம் அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கும் அவர்களோடு இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்திட முன் வருவதாகச் சொன்னார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பிக்க முன் வந்த போது, அதற்கான இடத்தை அவர் பெறுவதில் முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்தார்கள்.

தலித் மக்களை மட்டுமே கொண்ட அந்தக் கல்விக் கூடத்தில் பாடங்கள் பயிற்றுவிக்க உயர்ஜாதி ஆசிரியர்கள் முன்வாராத போது முஸ்லிம்கள் முன் வந்தார்கள்.

அதே போல்தான் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்திற்கு முன்னால் நடை்பெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா அத்தனை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களுக்குக் கிடைக்கவிருந்த சலுகைகளை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இருந்தார்.

இதற்கு அம்பேத்கர் அவர்களும் நன்றி சொல்லியுள்ளார்கள்”

என்று அவரிடம் விளக்கிவிட்டு, “நீங்கள் அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?” என்று கேட்டோம். அவர் தொடர்ந்தார்.

பிலால் சாஹிப்: அடுத்து என் மக்களை விடுவிக்க என்னால் இயன்ற அளவு எல்லாவற்றையும் செய்திடத் தயாராக இருக்கின்றேன்.

நான் திண்ணையில் தூங்குகின்றேனா, உண்கின்றேனா என்பவையெல்லாம் எனக்குப் பொருட்டல்ல.

என் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டிட சித்தமாக இருக்கின்றேன்.

நான்: உங்கள் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. முஸ்லிகளையும் இஸ்லாத்தையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு, முஸ்லிகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிட முன் வந்து இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

இதற்கு முன்னால் தமிழகத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

பகுத்தறிவு பாசறைகள் என்று பறைசாற்றப்பட்டவற்றிலிருந்து வந்ததால் அவர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டது ஒரு புது வரலாற்றையும், அனுபவத்தையும், அணுகுமுறையையும் தந்தது.

அதன் பின்னர் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் வழி இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், கம்யூனிசத்திலிருந்து வந்தார். அஃது ஒரு புதிய வரலாற்றையும் அனுபவத்தையும் தந்தது.

நீங்கள் ஹிந்துத்வாவிலிருந்து வந்திருப்பது பிறிதோர் புது அனுபவத்தைத் தருகின்றது.

உங்கள் வாழ்க்கையை எழுதி மக்களுக்குச் சொன்னாலே அஃதோர் விடுதலை வேட்கையை ஏற்படுத்துமே?

பிலால் சாஹிப்: ஆமாம். ஆனால் என்னால் அமர்ந்து எழுதுவது இயலாது. நான் களத்தில் உழைத்துப் பழக்கப்பட்டவன். நீங்கள் யாரையாவது அமர்த்தினால் நான் சொல்கின்றேன். அவர் எழுதித் தரலாம்.

இந்தப் பணிக்காக தேஜஸ் மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரை நியமித்து விட்டு வந்தேன்.

எங்களை முதலில் அழைத்துப்போய் பிலால் அவர்களின் வீட்டைக் காட்டிய இரண்டு சகோதரர்களும் பிலால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்தோம் பின்னால்.

முஸ்லிகள் ஒன்றைக் கவனிக்க வேண்ட

2 comments

  1. Masahallah

  2. எல்லா புகழும் அல்லாஹ்விற்கு, சகோ. பிலால் அவர்களுக்கு அவறை படைத்த இறைவன் நேர் வழி காட்டிவிட்டான், இன்ஷா அல்லாஹ், அவர் மற்றும் நாம் சுவர்க்கம் அடையும் வறை, இறைவன், நேர் வழியில் நம்மை மற்றும் அவறை வைத்து இருக்க நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
    எனக்கு அவாளாக உள்ளது சகோ. பிலால் சந்திப்பதற்கு, இறைவன் நாடினால் நடக்கும். முஹைதீன்.துபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *