Featured Posts
Home » சட்டங்கள் » மீலாது விழா கொண்டாடலாமா?

மீலாது விழா கொண்டாடலாமா?

மீலாது விழா கொண்டாடலாமா?

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!

மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.

எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.

பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.
வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் – முஸ்லிம்)

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.

மார்க்கத்தில் நூதனச் செயல்
மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.

எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

26 comments

  1. the title of can we do a celebration of miladu vilaa, what is the target? who has created this one ? o people do you have any sunna? follow the prophet mohamed ( saw) ? the time has come to thing, so, what to do? salath , duva.

  2. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு ..

    இந்த தலைப்போடு சேர்த்து…..அப்படியே ….போராட்டங்கள் செய்யலாமா என்று சற்று சிந்திக்கவும் அல்லது அறிஞர்கள் சற்று கருத்திடவும்.

    எப்படி …ரஸுலுல்லாஹ் சொல்லாத, செய்யாத அல்லது கட்டளையிடாத பிறந்தநாள் விழா பித்அத் ஆகிறதோ …அதே போல் …

    நம் முஸ்லிம் சகோதரர்கள் தற்போது அடிக்கடி செய்யும் போராட்டங்களும் (நான் சொல்வது …பெண்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும், இஸ்லாத்திற்கு எதிராக கோஷமிட வைக்கும் …போன்ற இன்னும் பல வகை போராட்டங்கள்) பித்அத் தானே?

    யோசிப்போம்…

    வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

    அப்பாஸ்

  3. I want to say some words , (about bidath) fistly, i cannot
    understand the some mowlavimaarhal, why do they this one ?
    what is the benefit, if we do it allah subuhanavuthaallah can
    accept this one , that is one very important to thing, so
    our prophet said and done more actions among which one why not follow between us? we have to understand one thing
    we do only having in islam, be carefull when do anyone
    fistly is very important to have the niyaa, and next , our actions are only for allah. Do more duva for u and all muslims,
    allah will accept our works, and end of life do say the kalima.
    ASSALAMUALLAIKUM.

  4. Assalaamu Alaikum..

    சகோ ஹாஜா அவர்களே

    ஏன் பித்ஆவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வீண் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும் என்று கூறுகிறீர்களா?

    அப்படி என்றால், நாம் குர்ஆனை மறுப்பவர்கலாகிவிடுவோம்.

    ஏனென்றால், அல்லாஹ் தீமையை தடுக்க சொல்லி நம்மை ஏவுகிறான்.

    And, as for your statement //fistly is very important to have the niyaa, and next , our actions are only for allah.//

    Although it is important, rather it is obligatory, to have niyyaah and doing ibaadaah only for the sake of Allah, it is also important to follow Sunnah in doing those good deeds (நல் அமல்கள் ) and not follow Bid’ah.

    Hope u understand

    May Allah guide us

    Wassalaamu Alaikum

    abbas

  5. assalamualaikum
    Iam against bid’ah,i wanted to say only to quite the bid’ah,
    if i have toled , allah forgive me , thanks my bro.

  6. A.alikum i thank for my allah to gave me a chance
    to read this article alhamdullila
    after that i thank auther mj Rizwan
    thank you very much

  7. Assalamu alaikkum.

    I request to my brother M.R.Musteen, is, please write Assalamu alaikkum completly and use the Upper case letter to Allah. Don’t write allah instead of write Allah. I hope it is right one.

    ZASAKALLAHULKHAIR..

  8. மீலாது விழா கொன்டாடலாமா? இதை சொல்லித்தான் தற்போது போலி தவ்ஹீத் வாதிகள் வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் சிடி விடியோ சிடி தயாரித்து வெளியிட்டு காசு சம்பாதித்து வருகிரார்கள் முதலில் சொன்னர்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடத்துகிரார்கள் என்று ஆனால் துபாயரசாங்கம் வருடாவருடம் மீலாதுவிழாகொன்டாடுகிறது இதை பற்றி ஏன் எழுடுவதில்லை

  9. assalamu alikum jazakhalla khaira for my dear brother Abu insha Allah i will correct

  10. pirantha naal kondadakoodathu enru sonna nabikku pirantha naal kondadum vizha miladun nabi ya allah ivargalai manipayagha

  11. My salam to u brother,

    It is really fantastic article abt (Meeladu Vizha), it is bidah, not from sunnah, May blessing of allah be upon u

  12. vahabikaL SEYYUM POI PIRASSAARAM

  13. மொத்தம் 22,330 நாட்களும் ஆறுமணி நேரம்மும் வாழ்ந்த நபிகளின் வாழ்க்கை வரலாற்றுக்கு நிகரான இன்னொரு தனி மனிதரின் வரலாற்றை அதற்கு முன்பும் சரி பின்பும் சரி உலக வரலாறு சந்தித்தது இல்லை அதனால் தான் பிரபல ஆஸ்ட்ரோபிசிடும் எழுத்தாளருமான பேரா- மைக்கல் ஹெச். ஹார்ட் உலக உத்தமர்களை தேர்ந்தெடுத்து பட்டியலிடும்போது (THE 100; A RANKING OF THE MOST INFLUENTIAL PERSONALITIES IN HISTORY )எனும் புகழ் பெற்ற தமது நூலில் முதலாவது இடத்தில் நபிகளைக் கூருகிரார்

  14. அஸ்ஸலாமு அலைக்கும்… சகோ அபு ஷைக்

    ஒரு காபிர் சொல்லும் கூற்றை அல்லது வரிசையை ஏற்று கொள்ளும் நீங்கள் வஹ்ஹாபிகள் என்று இழிவாக பேசபடுகின்ர, முஸ்லிம்களின் பேச்சை அல்லது உண்மையை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்???

    அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கும் ஒரு காபிரின், கூற்றுக்கலால்தான் நமது நபி உயர்ந்தவர் என்றோ அல்லது kufr[அல்லாஹ்வை மறுப்பதை] ஐ மற்றும் இனைவைப்பை தூண்டும் மவ்லிதுகள் ஒதித்தான் நமது நபி சிறந்தவர் என்றோ நாம் புகழ்பாட தேவையில்லை. மேலும் இவை நம்மை இஸ்லாத்தை விட்டு தூரமாக்குபவை .

    அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்ட [இயக்க பற்று இல்லாத ] நேர்வழி காட்ட துஆ செய்வோம்.

  15. அஸ்ஸலாமு அலைக்கும்,
    நீண்ட நாள் வினாவுக்கு விடை கிடைத்தது. நன்றி.

  16. உங்க சில ஆக்கங்களை என் வலைப்பூவில் சேர்ப்பதில் உங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று நினைக்கிறேன்.

  17. நிர்வாகி

    கட்டுரையின் முதலில் அல்லது இறுதியில் நன்றி என source url -ஐ குறிப்பிட்டு விட்டால், எந்த தளத்தில் உள்ளதையும் சேர்க்கலாம் (அவர்கள் தடுக்கும் வரை)

  18. nalladu than sagothararey .nan ondru solla asaipadukiren nabi sal avargal bilal raliyai parthu netru nan ungalali sorkathil ungaludaya kal sapthathai ketten appadi ninga enna amal seythinga nu kettanga.atharku bilal rali sonnargal nan eppodu olu seythalum erendu rakathu tholuduviduven endrargal .
    bilal rali nabi sal sollathathai seythargal anal athai nabi sal avragal nalladu enna koori varavetrargal.aga bilal rali seythathu bithathunu solla mudiyumaaa?

    anal ninga sonnadhai nan etru kolkiren sagotharey
    anal miladu nabi pondra nigalchigalali patri nabi sonnadhaga ningal koora villai

    irunthalum ninga sonnathu sari than anal pirariam kondu sellum pothu avargal ketpargal nabi koori irukiraragala endru

    adanal nabi kooriya hadeeshai tharumaru kettu kolgiren
    assalalmu alalikum watrahmathulillahi thalal wa barakathahu

  19. நம்ம எவ்வளவு தான் சொன்னலும் ஒரு கூட்டம் இவ்வாரான பித்அத்துக்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும். நடக்கட்டும்! நடக்கட்டும்! எல்லா வற்றிட்கும் முடிவு இருக்கத் தானே செய்யும். சகோ. தஸ்லீம் போன்ற எத்தனையே மக்கள் புறிந்து கொள்ளத் தான் போகின்றார்கள்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டுவானாக!

  20. Assalamu Alaikum
    Dear brother in Islam
    Recently i watch miladu vilaa on MOONTV also telecasting MOULITHU…what for they are misguiding…Islam.

  21. சகோதரர் அப்பாஸ் நானும் தங்களை போன்று பெண்களை பிரச்சாரத்தில் ஏன் ஈடு படுத்துகிறார்கள் என்று தான் என்னக்கொண்டிருன்தேன்…..ஆனால் பின்வரும் ஹதீஸை படித்த பின் சற்று சிந்திக்க தோன்றுகிறது……இது பற்றி கருத்துக்களை தெரிந்து கொள்ள விறும்புகிறேன்….

    bukhari:324. நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
    ‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?’ என நான் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்.
    உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?’ என நான் கேட்டதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.
    ‘கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, ‘மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்” என ஹஃப்ஸா அறிவித்தார்.
    Volume :1 Book :6

    ஜசக்கல்லாஹ் சகோதரர் மசூத் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்,சிந்திக்க வைக்கும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்

  22. meeet u again thanks

  23. nabi(sal)avarhal sonnathai mattumthaan seyya vaendum entru solliyulleerkal.oru sinna santhaeham neengal ijmah,kiyaasai maruppavaraa?pls avasaramaaha pathil tharavum.

  24. mohamed najmudeen mohamed fajil

    this is the way to understand Islam

  25. “ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)”

    ithan nakal pathivu seyya iyalumaa.. ippadi oru seythi antha noolil illai enrum – ithu poi yendrum vaatham vaikkappadukirathe ?

  26. ASSALAMU ALAIKUM!

    MEELAD WILAKKAL KONDAADA MUDIYUM……

    ANTHA WILLA KALIL NAAM NABI SALLALLAHU ALAIHIWA SALLAM AWARKALUDAIYA GUNA NALAN KALAI THAAN PESHIKIROM.
    AWARKALUDAIYA WALKAI WARALAARU KALAI PESHIKIROM
    AWARKALAI PUKALNDHU MAKILKIROM

    INTHA WISHAYATHULA QURAN HADHEES YAI NANRAAKA PADITTHU WILAKKKATHAI THARAWUM…..

    JAZAKALLAH KAIRAH……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *