Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?

நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?

-அபூ நதா

மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன் தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை.

முஸ்லிம் காழிகள் நீதி மன்றங்கள்

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் தமது மார்க்க விவகாரங்களை உலமா சபைகள் மூலமாகவும், உரிமைகள், சட்டம் சார்ந்த அம்சங்கைள காழிகளின் நீதிமன்றங்கள் ஊடாகவும் அணுகுகின்றனர்.

உலகில் 45 வீதமான முஸ்லிம்கள் சிறுபான்மையினராகக் வாழ்கின்றனர் என ஆய்வறிக்கைள் கூறுகின்றன. இவர்கள் வாழும் ஜனநாயக நாடுகளில் ஜனநாயக சட்ட விதிமுறைகளின் படியும், இஸ்லாமிய வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்யைமிராக வாழும் நாடுகளில் இலங்கைத் தேசமும் ஒன்றாகும். அங்கு 60 காழிகள் நீதிமன்றங்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்த 60 காழிகள் நீதிமன்றங்களுக்கும் முறைப்பாடாக தலாக், ஜீவனாம்சம், ஓடிப்போய் மணம் முடித்தல், மாற்றுமதத்தவரை முஸ்லிம் ஆண், அல்லது பெண் மண முடிப்பது, கணவன், மனைவி பிரச்சினைகள் போன்ற வரையறுக்கப்பட்ட முறைப்பாடுகளே முக்கியமானவைகள்.

உண்மையில் இவ்வாறு வரையறுக்கப்பட்ட பிரச்சினைகளை மாத்திரம் சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள காழிகள் நீதி மன்றங்கள் உள்வாங்கிக் கொள்வதில்லை, மாற்றமாக கொலை, கொள்ளை, காணி விவகாரம், உரிமைகள் என அவற்றின் எல்லைகள் நீண்டும், விரிவடைந்தும் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இருந்தாலும் முஸ்லிம்கள் சிறூபன்மையிராக வாழுகின்ற நாடொன்றில் இவ்வாறான முஸ்லிம் காழி நீதிமன்றங்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டு, அவகைள் ஊடாக வரையறுக்கப்பட்ட பிரச்சினைகளாவது பேசப்படுவது என்பது உண்மையில் ஒரு சிறப்பம்சம் என்ற கருத வேண்டி இருக்கின்றது. அவற்றையும் நபிகள் நாயகத்தின் வழி நின்று அணுகும் போது அதன் தனித்தன்மை அலாதியானது என்பதை காழிகள் மறந்துவிடக் கூடாது.

காழிகள் கவனத்திற்கு

காழிகள் கையில் எடுத்திருப்பது நீதித்துறையுடன் தொடர்பான பாரிய பொறுப்பாகும். வாழ்க்கைப் பிரச்சினையுடன் தொடர்பான அம்சங்களை சரியாக இனம் கண்டு தீர்க்க முற்பட வேண்டும். இல்லாத போது அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

எனவே, காழிகளாக வருவோர் பின்வரும் பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பது காழித்துறைக்கு அவர்கள் செய்கின்ற சேவையும், அல்லாஹ்விடம் தப்பித்துக் கொள்ள உதவும் வழியாகவும் அமையும்.

இஸ்லாமிய நீதித்துறை பற்றிய அறிவுள்ளவராக இருத்தல்

இது நம்நாட்டில் உள்ள காழிகள் அனைவரிடமும் இருக்குமா என்பது சந்தேகமே! ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர், அல்லது திருமணப்பதிவாளர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் இந்தத்தூய பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இது இஸ்லாமிய நீதித்துறையில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடாகும்.

சாந்தி மார்க்கத்தையும், காலாவதியாகிப்போன சில இஸ்லாமிய நூல்களையும் படித்துக் கொண்டு பாரம்பரியமான நம்பிக்கையின் அடிப்படையிலுமே அதிகமான காழி மன்றங்கள் தீர்ப்புக்கள் வழங்குகின்றனவாம். உதாரணமாக முத்தலாக், தன்னொலி கொண்டு திருமணம் செய்யும் முறை, பொலிஸ் வலியாக இருந்து திருமணத்தை நடாத்தி வைத்தல் போன்ற நடைமுறைக்கு அங்கீகராம் போன்ற நடைமுறைகளைக் குறிப்பிடலாம்.

மூன்றுவகைக் காழிகள்

الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ (سنن أبي داود )

காழிகள்- நீதிபதிகள் மூவர். ஒருவர் சுவர்க்கவாதி, மற்ற இருவரும் நரகவாதிகளாகும். சத்தியத்தை அறிந்து அதன்படி தீர்ப்புக் கூறியவர் சுவர்க்கவாதியாகும். சத்தியத்தை அறிந்து அதில் அநீதி இழைத்தவர் நரகவாதியாகும். (மூன்றாமவரான) மற்றவர், அறியாமையில் தீர்ப்புக்கூறி நரகத்திற்கு உரியவரானவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்).

அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் மறுமை எதிர்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரத்தில் அல்லாஹ்வின் தூதரே! அதைப்பாழடித்தல் என்பது எப்படி என (விளக்கம் கோரினார்), ஒரு நபித்தோழர், தகுதி அற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் (மறுமைநாளை எதிர்பார்த்துக் கொள்) என நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள் (புகாரி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا (رواه البخاري – كتاب العلم باب كيف يقبض العلم ) (ومسلم في صحيحيه وبوَّبه النووي (رحمه الله) ب بَاب : رَفْعِ الْعِلْمِ وَقَبْضِهِ وَظُهُورِ الْجَهْلِ وَالْفِتَنِ فِي آخِرِ الزَّمَانِ )

நிச்சயமாக அல்லாஹ் கல்வியை தனது அடியார்களிடமிருந்து ஒரேயடியாக பறித்துவிடமாட்டான். ஆயினும் அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஒரு அறிஞர்கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களை தமது தலைவர்களாக்கிக் nhகள்வர். அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டும், அவர்களோ அறிவின்றி மார்க்கத்தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள். ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்)

தீர்ப்பின் போது கோபம் கொள்ளாதிருத்தல்

தீர்ப்பளிக்கும் நீதிபதி ஒருவர் கோபமும், ஆத்திரமும் பொங்கிவழியும் ஒருவராக இருப்பது விசனிக்கத்தக்க அம்சமாகும். முஸ்லிம் காழிகள் இதிலிருந்து முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ (صحيح مسلم)

அபூபக்ரா (ரழி) அவர்கள் தனது மகன் அப்துர்ரஹ்மான் என்பவருக்கு அறிவித்த செய்தியை அவர் தனது சகோதரர் உபைதுல்லாஹ் என்பவர் ஸிஜிஸ்தான் என்ற பிரதேசத்தில் காழியாக இருந்த போது பின்வருமாறு எழுதி அனுப்பினார்கள். ‘நீ கோபமுற்ற நிலையில் இருக்கின்ற போது இருவர் மத்தியில் தீர்ப்பளிக்காதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கோபமாக இருக்கின்ற நிலையில் நீ இருவர் மத்தியில் தீர்ப்பளிக்கூடாது என்று கூறியதைத்தான் தான் செவிமடுத்தேன் என்பதாக தந்தை கூறியதை அதில் குறிப்பிட்டிருந்தார்கள். (முஸ்லிம்).

பொறுமை இழந்தவரிடம் கோபம் வருவதுண்டு, கோபத்தால் எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும். சில காழிகள் வாதிகளால், பிரதிவாதிகளால் தாக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டதற்கு அவர்களின் நீதியான தீர்ப்ப்பல்ல, மாற்றமாக காழிகளின் விசனிக்கத்தக்க பேச்சுக்கள், செயற்பாடுகள் காரமணாக இருந்தனவாம் என்று காழிகள் வட்டாரம் குறிப்பிடுகின்றது.

பிறமதத்தவரின் சட்டங்களை அறிந்திருத்தல்

மனித நேயமிக்க பண்பாடுகளில் இஸ்லாமல்லாத கோட்பாடுகள் அதிகமாக உடன்படுகின்றன. ஆகவே காழிகள் அவைகள் பற்றியும் அறிந்திருப்பது தமது தீர்ப்புகளுக்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக அமையும். நபிகள் நாயகத்தின் காலத்தில் நடை பெற்ற பின்வரும் நிகழ்வு இதை உறுதி செய்கின்றது.

3363 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ ارْفَعْ يَدَكَ فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا قَالَ عَبْدُ اللَّهِ فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ (صحيح البخاري )

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களில் உள்ள (திருமணமான) ஒரு ஆணும், பெண்ணும் விபச்சாரம் செய்ததாக முறையிட்டனர், கல்லெறிந்து கொல்வது பற்றி தவ்ராத்தில் என்ன இருக்கக் காண்கின்றீர்கள் என அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், நாம் அவர்களைக் கேவலப்படுத்துவோம், (இக்குற்றத்திற்காக) அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றனர், அதற்கு அப்பதுல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் நீங்கள் பொய் சொன்னீர்கள், அதில் கல்லெறிந்து கொல்லும்படிதான் இருக்கின்றது , தவ்ராத்தை உடன் கொண்டுவாருங்கள் எனக் கூறினார்கள். (அவர்கள் கொண்டு வந்து) அதை விரித்தார்கள், அவர்களில் ஒருவன் கல்லெறிந்து கொல்வது பற்றிய வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்தான்). அதற்கு முன்னரும், பின்னரும் இடம் பெறும் செய்தியை வாசித்தான், அவனிடம் உனது கை எடு என்றார்கள் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள், அவனது கையை அவன் உயர்த்திய போது, அதில் ரஜ்ம் பற்றி வசனம் இருந்தது. உடனே யூதர்கள் அவர் உண்மை உரைத்தார் எனக் கூறிவிட்டு, அவ்விருவரையும் கல்லெறிந்து கொலை செய்யும்படி பணித்தார்கள், பின்பு, அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். அப்போது, ஒரு மனிதன் பெண்ணின் பக்கமாக சாய்ந்து அவளைக் கல்லில் இருந்து காப்பதைப் பார்த்தேன் என அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் (புகாரி)

இறை சட்டத்துடன் நின்று கொள்ளுதல்

4140 – عَنْ أَنَسٍ أَنَّ الرُّبَيِّعَ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ فَطَلَبُوا إِلَيْهَا الْعَفْوَ فَأَبَوْا فَعَرَضُوا الْأَرْشَ فَأَبَوْا فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا إِلَّا الْقِصَاصَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِصَاصِ فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ يَا رَسُولَ اللَّهِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا تُكْسَرُ ثَنِيَّتُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ فَرَضِيَ الْقَوْمُ فَعَفَوْا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ ( أخرجه البخاري ، وفي رواية له : فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الْأَرْشَ )

அனஸ் (ரழி) அவர்களின் தாயின் சகோதரி றுiபிய்யிஃ அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார்கள், அதற்காக அவரின் கூட்டத்தாரிடம் (இவரின் சார்பாக) மன்னிப்புக்கோரினார்கள், மன்னிப்புத் தர அவர்கள் மறுத்து விட்டனர், நஷ்டஈடு தருவதாகக் கூறப்பட்டது அதையும் அவர்கள் மறுத்து விட்டனர், பழிக்குப்பழி என்ற நிலையிலேயே நின்றனர், நபி (ஸல்) அவர்கள் கிஸாஸ் சட்டத்தை நிறைவேற்றும்படி பணித்தார்கள், அனஸ் பின் நள்ர் (ரழி) அவர்கள், றுபிய்யிஃ உடைய முன் பல் உடைக்கப்படுவதா? சத்தியத்தைக் கொண்டு உம்மை அனுப்பியவன் மீது சத்தியமாக அவரது முன்பல் உடைக்கப்படாது என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் அனஸே! அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி அல்கிஸாஸ் சட்டமே (நிறைவேற்றப்பட வேண்டும்) என்றார்கள், அந்த சமுதயாத்தினர் (நஷ்டஈட்டைப்) பொருந்திக் கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்கள். அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர், அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவதை அல்லாஹ் (அங்கீகரித்து) நிறைவேற்றிவைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). புகாரியின் மற்றொரு அறிவிப்பில், அந்த சமுதாயத்தவர் அதைப் பொருந்திக் கொண்டு, நஷ்டஈட்டையும் ஏற்றுக் கொண்டனர் என இடம் பெற்றுள்ளது.

சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துதல்

காழிகள் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பானவர்களாக இருக்க வேண்டும். அதில் விட்டுக்கொடுப்புகள், பாரபட்சம் காட்டுவது, ஓர நீதியுடன் நடந்து கொள்வது போன்றதை விட்டொழிக்க வேண்டும். முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற வித்தியாசம் பார்க்கவே கூடாது.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ قِيلَ مَنْ فَعَلَ هَذَا بِكِ أَفُلَانٌ أَفُلَانٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ ((صحيح البخاري /2236- بَاب مَا يُذْكَرُ فِي الْإِشْخَاصِ وَالْخُصُومَةِ بَيْنَ الْمُسْلِمِ وَالْيَهُودِ))

யூதன் ஒருவன் ஒரு அடிமைப் பெண்ணின் தலையை இரு கற்பாறைகளுக்கும் இடையில் வைத்து நசுக்கி இருந்தான். (குற்றுயிரான நிலையில் இருந்த போது) உனக்கு இவ்வாறு செய்தது யார்? இவனா? அல்லது இவனா என விசாரித்து (இறுதியாக) ஒரு யூதனைக் கூறி, இவனா என்று கேட்கப்பட்டது, அந்தப் பெண் தனது தலையால் சைனை செய்து ஆம் எனக் கூறினார். உடன் அவன் பிடிக்கப்பட்டான், அந்த யூதனும் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டான், நபி (ஸல்) அவர்களின் கட்டளையின் படி அவனது தலை இரு கற்களுக்கும் இடையில் வைத்து நசுக்கப்பட்டு அவன் கொல்லப்பட்டான் (புகாரி).
மற்றொரு சம்பவம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُتَلَاعِنَيْنِ حِسَابُكُمَا عَلَى اللَّهِ أَحَدُكُمَا كَاذِبٌ لَا سَبِيلَ لَكَ عَلَيْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَالِي قَالَ لَا مَالَ لَكَ إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا فَذَاكَ أَبْعَدُ لَكَ مِنْهَا (مسلم)

சாபச் சத்தியம் (முலாஅனா) செய்து கொண்ட இருவரிடம் உங்கள் இருவரின் கேள்வி கணக்கும் அல்லாஹ்விடமே உள்ளது. உங்களில் ஒருவர் பொய்யர்கள் எனக் கூறிய பின் (அந்தப் பெண்ணின் கணவரிடம்) அவளுக்கும் உனக்கு எவ்வித சம்மந்தமும் இருக்கக் கூடாது எனக் கூறினார், உடனே அவர், அல்லஹ்வின் தூதரே! எனது சொத்துக்களின் நிலை என்ன? எனக் கேட்டார், உனக்கு சொத்துக்கள் தரமுடியாது. நீ அவள் பேரில் உண்மை உரைத்திருப்பின் அவளது மர்மஸ்தானத்தில் இருந்து நீ சுகம் அனுபவித்ததற்காகப் போகட்டும், நீ அவள் பேரில் பொய்யுரைத்திருப்பின் உனக்கும், அதற்கும் மிகத்தூரம் (எடுக்க உரிமையில்லை) எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

கணவன், மனைவி இருப்போர் சுமத்துகின்ற விபச்சாரக் குற்றச்சாட்டினை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பாடத்தை இந்த சம்பவத்தின் மூலம் காழிகள் பெற்றுக் கொள்ளலாம்.

காழி நீதிமன்றங்களின் காணப்படும் குறைபாடுகள்

இஸ்லாமிய சட்டத்துறை தொடர்பான சட்டங்கள் அடங்கிய தொகுப்புக்கள் அரபி மொழியில் காணப்படுவதாலும், தமிழ், அல்லது சிங்கள மொழி மூலம் அவை தனித்தொகுப்பாக வெளிவராத காரணத்தாலும் அரபு மொழி அறிவு அற்ற காழிகளின் தீர்ப்பில் முரண்பாடுகள், குறைபாடுகள் நிச்சயம் ஏற்படவே செய்யும்.

இலங்கையில் காழிகளாக இருப்போரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் அற்றவர்கள், அல்லது குறைவான அறிவுடையவர்கள் என்பதே உண்மை. எனவே அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பாக அதிகம் அறிந்திருப்பது அவசியமானதாகும்.

அதே போன்று நீதி மன்றத்திற்கென தனியான கட்டடங்கள் இல்லாதிருப்பது, குறித்த மதஹபைப் பின்பற்றி சட்டம் செய்வது, சாதராண விசயத்திற்கும் பல மாதங்கள் தாமதிப்பது போன்ற இன்னும் சில குறைபாடுளை அவதானிக்க முடிகின்றது. இதற்கு ஒரு சில மாவட்டங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.

இவ்வாறான குறைபாடுகளை நீக்கிட கல்விமான்கள், இஸ்லாமிய சட்டவியல் ஆராய்ச்சியாளர்கள் முஸ்லிம் நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டு காழிகளுக்கான சட்டங்களை பரிசீலினை செய்ய வழி செய்யப்படுவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம். இதை புதிய நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரஊஃப் ஹகீம் முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் இது பற்றி சிந்தித்து காத்திரமான முடிவை எடுக்கலாம் எனப்து நமது கருத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *