Featured Posts
Home » பொதுவானவை » ஆலோசனை » ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே!

ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே!

World-autism-awareness-day
மருத்துவதுறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பெயர்கள் அறிமுகமாகிகொண்டேயிருக்கும் அப்படி இந்த தலைமுறையில் உள்ள வார்த்தைதான் ஆட்டிஸம் (Autism). இந்த வார்த்தை ஒரளவு அனைவரும் அறிந்தது தான் என்றாலும் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு நோயாகவே கருதுகின்றனர். இவர்கள் நினைப்பது போன்று இது ஒரு நோயல்ல; ஒரு குறைபாடு அவ்வளவே..

ஆட்டிஸம் (Autism) என்றால் என்ன?
இப்படித்தான் இருக்கும் ஆட்டிஸம் (Autism) என்று வரைமுறைகள் கொண்ட இலக்கணத்தை சொல்ல முடியாது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய குறைபாடுகள், மூளையின் செயல்திறனில் எற்படகூடிய மாற்றங்கள் (இது நரம்பியலில் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடியது). இந்த குறைபாடுகள் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. குழந்தைக்கு குழந்தை மாறுபடும். இதனால் குழந்தைகளின் அடிப்படை திறமைகள் வெளிப்படுவதற்கு கால தாமதம் ஏற்படும். குறிப்பாக சமூகத்துடன் இணைந்திருத்தல், மற்ற குழந்தைகளுடன் நட்புகளை ஏற்படுத்துதல், தனது தேவைகளை வெளிப்படுத்துவதில் சிரமங்கள் போன்றவை காணப்படும். அதேபோல் அறிவு சார்ந்த விஷயங்களிலும் அவர்களுடைய நடத்தைகளிலும் கூட இந்த குறைபாடு வெளிபடும்.

ஆட்டிஸத்தின் (Autism) அறிகுறிகள் என்ன?
சில வேளைகளில் இதன் அறிகுறிகள் சிறுகுழந்தை (infancy) 18 முதல் 24 மாதங்களில் தெரியவரும். பொதுவாக குழந்தை பருவத்தில் (Childhood) 24 மாதம் முதல் 6 வயது-களில் இதன் அறிகுறிகள் தெரியவரும்.

signof autism

அமெரிக்காவில் இயங்கி வரும் தேசிய குழந்தை நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் National Institute of Child Health and Human Development (NICHD) அறிக்கையில் கீழ்கண்ட 5 பண்புகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அந்த குழந்தை ஆட்டிஸம் குறைபாடு உள்ளதா என்பதனை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கூறுகின்றது…

  1. 12வது மாதத்தில் அழுது புலம்பாமலும் மழழை ஒலி எழுப்பாமல் இருப்பது
  2. 12வது மாதத்திற்கு பிறகு தனது தேவைக்காக எதனையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது
  3. 16வது மாதத்தில் ஒரு சொல் வார்த்தைகள் பேசாமல் இருப்பது
  4. 24வது மாத்தில் இரு சொற்கள் கொண்ட சொந்த வார்த்தைகள் பேசாமல் இருப்பது
  5. சமூக மற்றும் மொழிதிறனற்று இருத்தல் – இது எந்த வயதிலும் தென்படலாம்.

இந்த பண்புகள் தென்படுவதால் மட்டுமே ஆட்டிஸம் உள்ளது என்று முடிவு செய்துவிடாமல் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச்சென்று ஆலோசனை/பரிசோதனைகள் செய்து கொள்ளவும்.

இவரது ஆலோசனையின் பெயரில் சிறப்பு நிபுணர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் அதாவது நரம்பியல் நிபுணர் (neurologist) மனநல மருத்துவர் (psychologist) developmental pediatrician ஸ்பீச் தெரபிஸ்ட் (speech/language therapist) learning consultant ஆகிய நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும். அத்தோடு ஆட்டிஸம் பற்றி சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனையும் பெற வேண்டும் என NICHD வலியுருத்துகின்றது..

வளர்ந்த பிறகு வெளியில் தெரியக்கூடிய மாறுதல்கள்

  • பெயர் சொல்லி அழைத்தால் அதற்கு செவிசாய்க்காமல் இருப்பது
  • பேசுபவரின் கண்ணை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தல்
  • ஏதாவது ஒரு விளையாட்டு பொம்மைகளுடன் மிக பிரியமாக இருப்பது
  • ஏனைய குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்த்தல்
  • தனது தேவைகளை சரிவர முறைபடுத்தி பேச தெரியாமல் இருப்பது
  • ஒரு குறிப்பிட்ட சொல்லை அர்த்தம் தெரியாமல் திரும்ப திரும்ப சொல்வது. அதே போல் ஒரு செயலை செய்வது

தனது குழந்தைக்கு ஆட்டிஸத்தின் பாதிப்புகள் இருப்பதை மறைக்காமல் உடனடியாக அதற்கான சிறபபு மருத்துவரை அனுகி ஆட்டிஸத்திற்கான சிகிச்சையை மேற்கொள்வது குழந்தையின் எதிர்காலத்திற்கு நலவாக அமையும் என்பதனை ஒவ்வொரு பெற்றோர்களும் அவசியம் அறிய வேண்டும்.

ஆட்டிஸம் ஏற்பட காரணம் என்ன?

இது தான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்வதற்கென்று எதுமில்லை ஆனால் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுபடி மரபியில் (பாரம்பரியம் – ஜீனிடிக்கல்), வளர்சிதை மாற்றத்தில் ஏற்படகூடிய குறைபாடு, நரம்பியல் மாற்றம், சிலவகையான தொற்று நோய்கள் மற்றும் பிறப்பின் போது ஏற்பட கூடிய கோளாறுகள் என பல்வேறு காரணிகளை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதே போல் சுற்றுபுற குழல் காரணிகள் கூட ஆட்டிஸம் ஏற்பட காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

மூளையின் செல்களுக்கிடையே ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற தொடர்பு காரணமாக கூட இந்த குறைபாடு ஏற்படலாம்

ஆராச்சியாளர்கள் ஜீன்களின் ஒழுங்கற்ற கட்டமைப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றதா என ஆய்வு செய்து கொண்டிருயிருப்பதாக Autism Society என்ற இணையதளம் கூறுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிகிச்சை முறை:

முதலில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சில அடிப்படை பரிசோதனை மேற்கொள்வார். குறிப்பாக காது கேட்கும் திறன். அதன் பின் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கப்படும். ஏனெனில் தாமதமாக பேச்சு வரக்கூடிய குழந்தைகளை ஆட்டிஸம் பாதிப்பு என்ற தவறாக எண்ணிவிட கூடாது. இதன் பின் நரம்பியியல் தொடர்பான விசயங்களும் நன்கு பரிசீலிக்கப்பட்டு மேற்சொன்ன மருத்துவ நிபுணர்களின் குழுவினர் சிகிச்சையை மேற்கொள்வார். தேவைப்படின் மருந்துகளின் பரிந்துரையோடு குழந்தைகளின் சமூக பழக்க வழக்கங்களில் மற்றும் நடத்தையில் மாற்றத்திற்கான பயிற்சியினை மேற்கொள்வார்கள். தொடர் பயிற்சியின் மூலமாக குழந்தைகளின் நடவடிக்கைளில் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலும்.

மக்களிடம் ஆட்டிஸம் பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 2-ம்தேதி உலக ஆட்டிஸம் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

தொகுப்பு: அபூ ஸஆத்

5 comments

  1. Mashallah very useful article. Jazakallahkhair for brother abu saad and Islamkalvi.

  2. very useful for all parents … keep give like this information to our people
    thank you
    allah will help you for continue this job

  3. I like this website

  4. alhamdhulillah

  5. Noor mohamed madukkur

    I also like this website Masha Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *