Featured Posts

[13] நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, நஸாயி) 2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவிற்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கின்றேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

[12] நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) 2) நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், …

Read More »

சுவனத்தை நோக்கி..

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 31.07.2009 இடம்: குளோப் மரைன் (ஹதீத்) கேம்ப் (GMC – Hadeed Camp, Jubail, KSA)

Read More »

பொய்களை மூலதனமாக்க வேண்டாம். TNTJ-க்கு அன்பான வேண்டுகோள்

சத்தியக்குரல் மாத பத்திரிகையின் ஆசிரியர் இம்தியாஸ் ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இலங்கையின் மஹாகொடை அசம்பாவிதம் சம்பந்தமாக சகோதரர் இஸ்மாயில் ஸலபி எழுதிய கட்டுரை தொடர்பாக சகோதரர்கள் பல கருத்துக்களை எழுதிவருகிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக! இது தொடர்பாக நானும் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

Read More »

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் கண்டன அறிக்கை

24-07-2009 அன்று இரவு 7.00 மணி முதல் நடுநிசி வரை பேருவளை, மககொட பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது நடந்த அசம்பாவிதங்கள் குறித்து ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் A.L. கலீலுர் ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை;

Read More »

[11] நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால்

(யாராவது) மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால், அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

[10] நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

[09] நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்.

Read More »

[08] குளிப்பு கடமையான நிலையில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

Read More »

[07] ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்கிற்கும் ஸஹர் உணவிற்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு, ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »