Featured Posts

99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 99 ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை. ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது. ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் ‘தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் …

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-2

முன் பதிவின் தொடர்ச்சி… பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 8

வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் வஹீ அருளப்பட்ட விதத்தையும் ஆய்ந்த ஒரு சிலர், நபிகளாரின் உன்னத வாழ்க்கையையும் வஹீ அருளப்படுவதற்கு முன்னர் நபிகளார் தம் சமூகத்தில் பெற்றிருந்த நம்பகத் தன்மையையும் கருத்தில் கொண்டு, ‘அவரால் குர்ஆன் எழுதப்படவில்லை அல்லது அதை எழுதுவதற்கான உள்நோக்கம் அவருக்கு இருந்ததில்லை’ என ஒப்புக் கொண்ட போதிலும், ‘அவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டார் அல்லது தாம் இறைச்செய்தி அனுப்பப்படும் தூதர் என்ற மனப்பிரமையில் …

Read More »

நூல்களால் அறிவை நூற்போம்!

(நேற்று இட்ட பதிவு ஏனோ தென்படவில்லை. அதனால் மீண்டும் இடுகிறேன் — நட்புடன், அபூஆதில்.) நூலகம் என்பது அறிவின் நுழைவாயில் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வி எப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டியோ, அதுபோல் கல்விக்கு நூலகம் ஒரு மிக முக்கிய வழிகாட்டி மையம். நூலகமும், கல்வியும் என்பது தாயும், சேயும் போல. ஒன்றிலிருந்து மற்றொன்று பரிணாமம் எடுக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ள முயலும் ஒவ்வொருவருக்கும் நூலகம் ஒரு வரமாகவே இருந்து …

Read More »

நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் ஏசினாலும் அப்படி ஏசுபவன் காஃபிராகி விடுவதுடன் முர்தத்தான (மதம் மாறிய)வனுடைய சட்டம் இவன் …

Read More »

ரஸூல்மார்களின் பணிகள் யாவை?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-1

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா? இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ‘பலதாரமணம் ‘ (Polygyny) உள்ளது. உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக ‘பலதாரமணம் ‘ (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு …

Read More »

இறைவன் அனுமதித்தவை

எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: “அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் …

Read More »

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்

ஒருவன் மற்றவனிடம் ‘சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் …

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 7

கீழைத்தேய ஆய்வு (Science of Orientalism) என்பது பொதுவாகக் கீழைத்தேய நாடுகள், இனங்களின் மொழி, மதம், பண்பாடு, நாகரிகம், வரலாறு பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும். (பார்க்க: Encyclopedia Britannica). கீழைத்தேய ஆய்வு என்பது ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆதரவிலும் அதனைத் தொடர்ந்து கீழைத்தேய உலகில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை மேற்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களின் துணையாலும் வளர்ச்சியடைந்தது. கீழைத்தேயங்களைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை அங்கு நிலைபெறச் செய்யவும், கீழைத்தேய …

Read More »