Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 82)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167- நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் …

Read More »

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-227: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

Read More »

ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

165- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் ஆங்காங்கே காணப்படும் என்று கூறினார்கள். புகாரி-231: ஸுலைமான் பின் யஸார் (ரலி)

Read More »

நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

164- நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர்பட்ட இடத்தில்) தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை. புகாரி-223: உம்மு கைஸ் (ரலி)

Read More »

சிறு குழந்தைகளின் சிறுநீர்……..

163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை. புகாரி-6355: ஆயிஷா (ரலி)

Read More »

சிறுநீர் கழித்த இடத்தை கழுவுதல் பற்றி….

162- ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித்தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணிர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணிர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. புகாரி-6025: அனஸ் பின் மாலிக் (ரலி)

Read More »

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல் பற்றி…

161- ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-239: அபூஹூரைரா (ரலி)

Read More »

நாய் நக்கிய பாத்திரத்தை……

160- உங்களில் ஒருவருடைய (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்து விடுமானால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-172: அபூஹூரைரா (ரலி)

Read More »

காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…

159- முகீரா பின் ஷூஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஒரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் ஆம் (இருக்கிறது) என்று பதிலளித்தேன் . உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடற்தார்கள். (இயற்கைத்தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது …

Read More »

மறைவான இடத்தில் அமர்தல்!

158- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றேன். அப்போது முகீராவே! தண்ணீர் பாத்திரத்தை எடும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் போய் அவர்களுடைய இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அவர்கள் ஷாம்நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூ செய்வதற்காக அதிலிருந்து தங்கள் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். …

Read More »