Featured Posts
Home » Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான் (page 93)

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

ஏற்றுக் கொள்ளும் வரை..

லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்ளும் வரை மக்களுடன் போரிடுதல். 13- நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே …

Read More »

விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொள்வது. மார்க்கக் கடமைகளைப் பேணுவது. மக்களை அதன் பால் அழைப்பது 10- இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்துல் கைஸூடைய தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, வந்திருக்கும் இம்மக்கள் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ரபீஆ வம்சத்தினர் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருக! வெட்கப்படாமல், கவலை கொள்ளாமல் வருகை தாருங்கள்! என்று வரவேற்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! …

Read More »

சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்

7- ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை …

Read More »

தொழுகை

இஸ்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றான தொழுகைகள் 6- நஜ்த் தேசத்தைச் சார்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய தலை பரட்டையாக இருந்தது. குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஜவேளைத் தொழுவது என்றார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய …

Read More »

ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை? 5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் …

Read More »

நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி கடும் எச்சரிக்கை! 1- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ‘என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!’ அறிவிப்பவர் : அலி (ரலி) ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2) 2- ‘என் மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) …

Read More »

முன்னுரை

யா அல்லாஹ்! நீயே புகழுக்குரியவன்! உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே உதவியும் தேடுகிறோம்! எங்களை நேரான பாதையில் வழிநடத்துவாயாக! அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த தூதர், உயிரினும் மேலான எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் அவர்களின் வழியை பின்பற்றுவோர் அனைவரின் மீதும் உன் அருளை என்றென்றும் பொழிந்திடுவாயாக! 1. வேதமும் விரிவுரையும் மகத்துவமிக்க அல்லாஹ் தன்னை வணங்கி, வழிபடும் நோக்கத்திற்காகத்தான் மனிதர்களையும் ஜின்களையும் …

Read More »