Home » Tag Archives: நல்லடியார்

Tag Archives: நல்லடியார்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் யார்?

JASM வழங்கும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் தல்கஸ்பிடிய நாள்: 29-07-2016 வழங்குபவர்: கலாநிதி ML முபாரக் மஸ்வூத் மதனி தலைப்பு: முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் யார்? நன்றி: JASM Media Unit Download mp3 audio

Read More »

ஒரு ஜோடி போதாது!

கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்ரேலின் அடக்குமுறைகள், அநியாயங்கள், அராஜகங்கள், கொடுமைகள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு மற்றும் என்னென்ன மனிதகுலவிரோதச் செயல்கள் உண்டோ அத்தனையையும் செய்துமுடித்துக் களைத்துத்துப்போய், தற்போது போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இதை உலகநாடுகள் வரவேற்றுள்ளதோடு நிதியுதவிகளும் நிவாரணமும் வழங்க ஆயத்தமாகியுள்ளன. புதிய உலக ரட்சகனாகப் பேசப்படும் ஒபாமா, தன் பங்குக்கு நிவாரணம் அறிவிக்கக்கூடும். முதற்கட்டமாகப் போர் நிறுத்த அறிவிப்பை ஒபாமா வரவேற்றுள்ளார். இதோ கவுண்டவுன் …

Read More »

மும்பை தாக்குதல் – கேட்கக்கூடாதக் கேள்விகள்!

மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு வகையான யூகங்கள் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் உலாவி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலைக்காட்சியாக “Mumbai Under Attack” “Mumbai in Fire” “Mumbai 26/11” எனத்தலைப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒளிபரப்பி ஊடகக் கடமையை நிறைவு செய்தனர். அடுத்ததாக இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான், லஷ்கரே தோய்பா etc காரணம் என்று அத்வானிமுதல் தினமலர்வரை சொன்னதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா முதல் மேற்கத்திய நாடுகள் ‘அல்காயிதா’ முத்திரைகுத்தி …

Read More »

அழுகிய ஈரல் Vs. அரசியல்வாதி நாக்கு (சட்டக் கல்லூரி சம்பவம்)

தமிழகக் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது – கலைஞர் கருணாநிதி தமிழகக் காவலதுறையின் இதயம் கெட்டுவிட்டது – தா.பாண்டியன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – ஜெயலலிதா கேவலமான போலீஸ் – சரத்குமார் கண்டனம் சட்டக் கல்லூரி: சேவல் சண்டையா நடந்தது? விஜயகாந்த் ஆவேசம் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 12.11.2008 மாலை மாணவர்களிடையே நடந்த உக்கிரப் போரின்போது போலீஸாரின் அலட்சியப் போக்குக் குறித்து பலவித வியாக்கியானங்கள் பேசப்படுகின்றன. …

Read More »

முஸ்லிம்லீக் மதவாதக் கட்சியா?

சமீபத்தில் ஊடகங்களில் தயங்கித் தயங்கி வினாக்குறியுடன் “மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இந்து அமைப்பு காரணம்?” என்று தலைப்பிட்ட செய்தியைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வருடமும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்தது “ஹிந்து” ஜாக்ரான் மஞ்ச்சின் இந்துத்துவா ‘குண்டர்’கள் என்ற செய்தியைக் குறித்து இவ்வாரக் குமுதத்தில் ஞானி, “பயங்கரவாதத்தின் நிறம் காவி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி பாமரர்களிடம் மதவெறியூட்டி, …

Read More »

இந்துத்வா பயங்கரவாதம் என்பதே சரி!

மகாராஷ்டிரா குண்டு வெடிப்புக்களை நடத்திய பண்ணாடைகளைக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து “இந்து பயங்கரவாதம்” என்று மக்களவையில் சொன்னதற்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்தது. திருவாளர் ராமகோபாலனும் இதை கடுமையாக எதிர்க்கிறார்.எதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் நேற்றுவரை எங்கு குண்டு வெடித்தாலும் அந்தக்குண்டுக்கு சுன்னத் செய்து, தாடி வைத்து, தொப்பிப் போட்டு அதை இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லி இன்பம் கண்டுவந்ததோடு அதை வைத்து …

Read More »

சந்த்ராயன் விண்கலமும் மதநம்பிக்கைகளும்!!!

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தும் CountDown தொடங்கி விட்டது. நிலவில் மனிதன் இறங்கவேயில்லை என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் இன்றும் நம்புகிறார்கள். Apollo Hoax என்று கூகிலிட்டால் சுவாரஸ்யமான பல விடயங்கள் கிடைக்கும். நிலவில் மனிதன் வாழமுடியுமா என்ற நெடுநாளைய ஆசையின் தொடர்ச்சியால் நிலவு குறித்த மனித ஆய்வுகள் தொடர்கின்றன. இயற்கையை வணங்கி வந்த பண்டைய மனிதர்கள் நிலவைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். கிரேக்கர்களின் வழிபாடுகளில் நிலவுக்கு முக்கிய இடமுண்டு. …

Read More »

அரைகுறை பகுத்தறிவாளர்கள்!

ஐயா! நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் யாருமே தன்னைக் கெட்டவர்(ன்) என்று சொல்ல விரும்புவதில்லை. ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிப்பது யார்? ஏன்? சமூகத்தில் ஏற்கனவே நல்லவை என்று தீர்மானித்திருப்பதற்கேற்ப நடந்தால் நல்லவர்! மாற்றமாக நடந்தால் கெட்டவர்! என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது! சமூகம் என்றால் யார்? குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தீர்மானித்திருப்பதற்கு ஏற்ப இருந்தால் நல்லவர்/கெட்டவர் எனப்பகுப்பது நியாயமா? எல்லோருமே அடுத்தவர் நல்லவராக …

Read More »

மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா?

சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், “எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது” என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் …

Read More »

குண்டு வெடிப்புகள்: பொறுப்பேற்றவர்களும் பொறுப்பற்றவர்களும்!

கோழைகள், காட்டுமிராண்டிகள்,………..இன்னும் என்னென்ன கடுஞ்சொற்கள் உள்ளனவோ அவையும், இறைவனின் சாபமும் குண்டுவைத்தவர்கள் மீது உண்டாகட்டும்! ஒவ்வொருமுறை குண்டு வெடித்ததாகக் கேள்விப்பட்டதும் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாத்தைப் பலிகடாவாக்கி அக்கிரமம் செய்வார்களோ தெரியவில்லை. மாபாதகர்கள்! குண்டு வைத்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியானவர்களா? உள் நாட்டுக் கைக்கூலிகளா? முஸ்லிம்களின் பெயரைச்சொல்லி அரசியல் குளிர் காயும் சண்டாளர்களா? யாராக இருந்தாலும் வழக்கமாக ஏதேனுமொரு அமைப்பு பொறுப்பேற்கும் அல்லது பொறுப்பேற்றதாகச் சொல்லப்படும். இதுபோன்ற கோழைத்தனமானத் …

Read More »