Featured Posts
Home » பர்சானா றியாஸ் (page 4)

பர்சானா றியாஸ்

போனவர்கள் திரும்பினார்கள்

எனது சகோதரனின் சிறு வயதில் நடந்திருந்த அந்த அனுபவத்தினை முதன்முதலில் கட்டுரையாக எழுதும் வாய்ப்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எனக்கு கிடைத்திருந்தது. தமிழ்மொழியில் குறைந்தபட்சம் ஒரு திறமைச் சித்தி கிடைக்கும் என்ற உற்சாகத்தில் எழுதிவிட்டுத் திரும்பிய எனக்கு, அதை மீண்டும் மீட்டும் சந்தர்ப்பம் இரு தசாப்தங்களின்பின் கிடைத்திருக்கிறது. அதையே எனது சகோதரன் மீட்டவேண்டுமானால், அவன் தனது ஐந்து வயதுக்குத் திரும்பவேண்டும். தனியார் ஆசுபத்திரி ஒன்றிற்குச் செல்ல ஆயத்தமாகிய தனது …

Read More »

மண்வாசனை

அண்மையில் ஊரில் நடைபெற்ற நூல் வெளியீடொன்றும், அதில் இடம்பெற்ற உரைகளும் கடந்த காலங்களில் என் சொந்த ஊருக்கும் எனக்குமிடையில் இருந்த தற்காலிக பிரிவொன்றினை மீட்டுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. ஒருவனை தன் பிறந்த ஊரின் ஞாபகம் சூழ்ந்து, அதுவே விடாமல் வாட்டி வதைக்குமானால், அவன் ஊருக்கு வெளியில் எங்கேயோ சூழ்நிலைக் கைதியாக்கப் பட்டிருக்கிறான் என்று அர்த்தம். சொந்த ஊரின் பெறுமதியை உணர்ந்து கொள்ள அதுவும் ஓர் அளவுகோலாகி விடுவதுண்டு. குறைந்த பட்சம் …

Read More »

கலிமாவுடைய வாழ்க்கையின் பின்

மனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று …

Read More »

உரிமைகளால் மூச்சுத்திணறும் பெண்கள்

-பர்சானா றியாஸ்- தொழிற் சுதந்திரம் முழுமையாகக் கட்டவிழ்க்கப்பட்ட நிலைமையில் வாழும் எம் பெண்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் அதேவேளை, அதன் பின்புலத்தில் சில சமுதாயக் கட்டமைப்புகள் சிதைவடையும் நிலைமை உருவாகியிருப்பதை யாரும் கண்டுகொள்ளாதிருப்பது அறியாமையா? அல்லது சுயநலமா? எனும் கேள்வி எழுகிறது. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்கான காரணத்தை பெண்னிலைவாதிகள் கீழ்குறிப்பிடும் சில கூற்றுகளால் முன்வைக்கின்றனர் பெண் தொழில் செய்வதற்காக கட்டாயம் வெளியே செல்ல …

Read More »

தேன்கூட்டு உறவுகள்

எனது உறவினர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழமைபோன்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிலும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிலுமாய் சம்பிரதாயங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் தம்பதிகள் சிலநாட்களுக்கு மாமியாரின் இருப்பிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மணமகன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் திருமணத்தின் பின்னர் பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வழமையாக அவரது முதல் வேலை தாயின் கையில் அந்த மாதத்திற்கான செலவுத் …

Read More »

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »