Featured Posts
Home » ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ (page 2)

ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும்…[உங்கள் சிந்தனைக்கு… – 071]

சுன்னாவுக்கு முரண்படும் கருத்துக்களை எவர் சொன்னாலும், அவற்றை முதுகுக்குப் பின்னால் எறிந்து விடுங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்: “நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள். (ஏனெனில்) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும்!” (அல்குர்ஆன், 49: 02) அல்லாமா இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வசனத்திலிருந்து பெறப்படும் …

Read More »

கணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்! [உங்கள் சிந்தனைக்கு… – 070]

அல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சரியென நியாயப்படுத்தக்கூடிய காரணி எதுவுமே இல்லாமல் கணவனை வெறுத்து, அவனுக்கு மாறு செய்து நடப்பது மனைவிக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. இல்லற சுகம் அனுபவிக்க மனைவியை கணவன் அழைக்கும்போது அதற்கு அவள் பதிலளிக்காதிருத்தல், அல்லது மனைவியிடம் கணவன் இதை வேண்டும்போது அதில் அவள் தாமதப் போக்கைக் கடைப்பிடித்து பிற்படுத்துதல் போன்ற மாறுசெய்தலுக்கான அடையாளங்கள் தனது மனைவியிடமிருந்து கணவனுக்கு வெளிப்பட்டால், அந்நேரம் கணவன் கீழ்வருமாறு …

Read More »

அல்லாஹ் தந்த அருட்கொடைகளை நினைத்துப் பார் மனிதா! [உங்கள் சிந்தனைக்கு… – 069]

பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுல்லாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சகோதரா! உனக்கு வாழ்த்துச் சொல்லப்படும் நாளில், கவலைக்காக ஆறுதல் கூறப்படும் நாளை நீ நினைத்துப் பார். உனது பதவியேற்பு நாளில், உனது பதவியிழப்பு நாளை நினைத்துப் பார். நீ நன்றாக இருக்கும் நாளில், உனது சோதனையான நாளை நினைத்துப் பார். உனது மகிழ்ச்சியான நாளில், உனது கவலையான நாளை நினைத்துப் பார். உனது ஆரோக்கியமான நாளில், உனது நோய் …

Read More »

அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:- “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ …

Read More »

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? [உங்கள் சிந்தனைக்கு… – 067]

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: “எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில், அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்”. { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, பக்கம்:102 …

Read More »

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 066]

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள்; ஒடித்து விடுவீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “தமது மனைவிமார்கள் (குணநலன்களில் குறைபாடுகளின்றி) பூரணத்துவமான நிலையில் இருக்க வேண்டும் என்றே கணவன்மார்களில் அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்! இது, முடியாத விடயமாகும். இதன்மூலம் பெரும் கஷ்டத்தில் இவர்கள் வீழ்ந்து, தமது மனைவிமார்கள் மூலம் இல்லற இன்பத்தையும் ஏனைய சுகத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாகியும் விடுகின்றனர். சிலவேளை இது, நபியவர்கள் கூறியதுபோல ‘தலாக்’ எனும் மணவிலக்கிற்கும் …

Read More »

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 065]

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!! அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!” நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் …

Read More »

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு [உங்கள் சிந்தனைக்கு… – 063]

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு இவருக்கும் உண்டு! “யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்” என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் – 5231) இந்த நபிமொழிக்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “மார்க்க விளக்கச் சட்டம் ஒன்றைப் பெறுவதற்காக …

Read More »

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து …

Read More »

ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய …

Read More »