Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 52)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.

Read More »

ஆயுதக் குழு பூச்சாண்டி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர். மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் …

Read More »

ஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த …

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே! சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

Read More »

சுன்னாவும் வஹியே!

–இப்னு ஸாஹுல் ஹமீத்– வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் …

Read More »

இஸ்லாம் உங்களுடைய மார்க்கம்

சமுதாய நல்லிணக்க சந்திப்பு இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ரிஃபா நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ் அழைப்புப் குழு, பஹ்ரைன் வழங்குபவர்: இஸ்மாயில் ஸலஃபி Download mp4 video Size: 498 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/314ip9zcnx9ii2l/islam_is_your_religion_salafi.mp3] Download mp3 audio

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை.

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது …

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும்.

Read More »

ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்

கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன் வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு ஸஹாபாக்கள் என்றால் யார்? ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்? ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா? வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா? ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன? …

Read More »