Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 55)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

ரமழானைப் பயன்படுத்துவோம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் புனித ரமழான் எம்மை வந்தடைந்துள்ளது. அல்ஹம்துலில்;லாஹ்! சென்ற ரமழான் முடிந்து ஒரு மாதம் கழிந்தது போன்று உள்ளது. இப்போது வந்துள்ள ரமழானும் மின்னல் வேகத்தில் எம்மை விட்டும் விலகிச் சென்றுவிடும்.

Read More »

அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 2

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சென்ற இதழில் அகீதாவின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகள் விடயத்தில் ஈமான் கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளைப் பார்த்தோம். இது ஈமானுக்கு உரிய அம்சம். ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது. சொல்லப்பட்ட கருத்தை மறுக்கக் கூடாது. மாற்று விளக்கம் கூறக் கூடாது. ஒப்புவமை கூறக் கூடாது. என்கின்ற நான்கு முக்கிய அடிப்படைகள் குறித்து விரிவாகப் …

Read More »

அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக …

Read More »

மக்கள் மனங்களைக் கவர!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் …

Read More »

நபிவழி நடப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் …

Read More »

பித்அத்தின் தீய விளைவுகள் – 2

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) (7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்: மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள். “இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் …

Read More »

பித்அத்தின் தீய விளைவுகள் – 1

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா? இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம்.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன? அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, …

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா? “பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார …

Read More »