Featured Posts
Home » 2016 » November » 05

Daily Archives: November 5, 2016

பைபிளில் முஹம்மத் (ஸல்) – 03

முஹம்மத்(ச) அவர்கள் பற்றி பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்களில் ஒன்றை கடந்த இரண்டு இதழ்களில் பார்த்துள்ளோம். அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் அடிப்படையான சில உண்மைகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகின்றேன். 01. மூடலானது: பொதுவாக முன்னறிவிப்புக்கள் மூடலாகத்தான் இருக்கும். அதில் சொல்லப்பட்ட விடயங்களை வைத்து நிதானமாக நோக்கும் போதே அதன் உண்மைத் தன்மை உறுதியாகும். இந்த அடிப்படையில் முன்னறிவிப்புக்கள் மிக மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் …

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

தடம் புரளும் உள்ளங்கள் ‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’ (3:8) முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் …

Read More »

நாற்பது வயதில் புரியும்..

‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் …

Read More »

சூழ்ச்சி-01 :- பாவங்களையும் தீமைகளையும் அலங்கரித்துக்காட்டுதல்

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் (புதிய தொடர்) நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். சந்தர்பம் …

Read More »

கலைச்சொல் விளக்கம் – ஸஹீஹுல் புகாரீ (ebook)

ரஹ்மத் பதிப்பகம் (ரஹ்மத் அறக்கட்டளை) சார்பில் வெளியிடப்பட்ட ஸஹீஹுல் புகாரியின் கலைச்சொல் விளக்கம் என்ற பகுதியை மாணவர்கள் மற்றும் கல்வியை தேடும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வழிகாட்டி நூலக இதனை இஸ்லாம்கல்வி இணையதளத்தில் (www.islamkalvi.com) வெளியிடுகின்றோம். அகபா மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய …

Read More »