Home » இஸ்லாம் » கொள்கைகள் » இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 02

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 02

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ

முன்னுரைத் தொடர்…

அல்லாஹ் கூறுகின்றான்: ( அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை) உணர மாட்டார்கள். (12)

“மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்றுக் கூறப்பட்டால், அவர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? “என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள்.) – அல் பகறா: 12, 13

இதற்கான ஒரு உதாரணத்தை உன்னிடம் முன்வைக்கின்றேன். நஜ்ரான், பரஃ, அத்பீன், இஹ்ஸா, கதீப், பஹ்ரைன், மதீனா, ஹிராஸ், இராஸ், ஸன்ஆவிலே இருக்கக்கூடிய நுக்ம், போன்ற ஊர்களிலும், இந்தியா நாட்டிலேயும் இருக்கக்கூடிய இஸ்மாயீலிய்யா என்று சொல்லப்படக்கூடிய வழிகெட்ட , மார்க்கத்திலிருந்து வெளியே சென்ற ஒரு கூட்டமாக அது இருந்துக்கொண்டிருக்கின்றது.

அவர்களுக்கு “நகாவிலா ” என்றும் பெயர்ச்சொல்லப்படும்.

அவர்களின் ஷேய்ஹ்மார்களுக்கு “மகாரிமா “ என்றே கூறப்படும். (மகாரிமா என்றால் சங்கை செய்யப்படுபவர்கள் என்று பொருள்படும்)

அவர்கள் சங்கை செய்யப்படுபவர்களல்லர் .

மேலும் மகாரிமாக்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிரானதாக இருக்கக்கூடிய ; மார்க்கத்தை விட்டும் சாய்ந்து சென்ற பாதினிய்யா என்று அழைக்கப்படக்கூடிய மத்ஹபின் பக்கம் அவர்களை சேர்த்துக்கொள்கின்றனர்.

அவர்களின் மூதாதையர்களே அல்லாஹ்வின் புனித வீட்டை ஹஜ் செய்ய வந்தவர்களை கொலை செய்தனர்; மேலும் அங்கிருந்த ஹஜருல் அஸ்வதை எடுத்துச்சென்றனர். ஒரு காலகட்டத்தில் அவர்களிடத்திலேயே அக்கல் காணப்பட்டது.

பிறகு அதிலிருந்து ஒரு சிறிய பகுதியையே அவர்கள் திருப்பிக்கொடுத்தனர் .

எனவே மகாரிமாக்கள் முஸ்லிம்களல்லர்.

அவர்கள் யூத, நஸாராக்களையும் விட அதிகமாக இஸ்லாத்திற்கு தீங்களிக்கக்கூடியவர்களாவர்.

இப்படியெல்லாம் இருக்கும் போதும், பணத்தின் தூண்டுதல்களின் மூலமாக அவர்களின் அழைப்புப்பணியை அவர்கள் புத்தகங்களைக் கொண்டும், அவைகளல்லாத வேறு விடயங்களைக்கொண்டும் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

எதுவரைக்கும் என்றால், நிச்சயமாக அவர்கள் நஜ்ரான் எனும் ஊருலே இருக்கக்கூடிய யமன் நாட்டைச்சார்ந்த சில பலவீனமானர்களுக்கு சவுதி அரேபியாவின் தேசியத்தைக் கொடுக்கக்கூடியவர்களாக மாறிவிட்டனர் .

உண்மையிலேயே அவர்கள் அவரை சவுதியுடன் சேர்ப்பதற்கு அழைக்கவில்லை என்றாலும் கராமித்தாவைச்சேர்ந்த, பாதினிய்யாவைச் சேர்ந்த, இஸ்மாயீலிய்யா என்ற மத்ஹபிலே அவரை அவர்கள் சேர்த்துக்கொள்வதற்காக வேண்டி அழைக்கின்றனர்.

அவர்கள் சவுதியையும் விரும்ப மாட்டார்கள், மேலும் அவர்களுடைய அந்த அசத்திய மத்ஹபிலே இல்லாத எவரையும் அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.

நான் இதனை, அவர்களைப் பற்றிய முழு அறிவுடனும்; அனுபவத்துடனுமே கூறுகின்றேன். ஏனென்றால் நான் நஜ்ரான் எனும் ஊரிலே இரண்டு வருட அளவு காலங்கள் தங்கி இருந்தேன்.

ஒரு நாள் இரவிலே நான் நஜ்ரான் வாசிகளிடம் சென்றேன். அப்பொழுது அவர்களின் புத்தகத்திலிருந்து ஒரு புத்தகத்தை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அதனை வாசித்த போது தெளிவான வழிகேடுகளை அதிலே கண்டுக்கொண்டேன்.

சில குர்ஆன் வசனங்களுக்கு அவர்கள் வியாக்கியானம் செய்யும் போது: அல்லாஹ் உங்களுக்கு ஒரு மாட்டை அறுத்து பழியிடுமாறு ஏவுகின்றான் அல் பகறா: 67

அந்த மாடு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனை ஒதும் போது அது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களது விடயத்திலும் மேலும் அவரது கூட்டத்தாரின் விடயத்திலும் கூறப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வான்.

மேலும் குர்ஆனிலே இடம் பெற்ற சூனியம் மற்றும் ஷைத்தான் என்ற இரண்டு சொற்களுக்கும் வியாக்கியானம் செய்யும் போது அவ்விரண்டும் அபூ பக்ர் மற்றும் உமர் (ரலியல்லாஹு அன்ஹுமா) என்றும் கூறுகின்றனர் .

அவ்விருவரின் நிலைப்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயும் மேலும் அவரது காலத்திற்குப் பின்னரும் இஸ்லாத்திலே அனைத்து முஸ்லிமிடத்திலும் அறியப்பட்ட ஒரு விடயமாக இருந்துக்கொண்டிருக்கின்றது .

மேலும் அதிகமான ஹதீஸ்களில் வந்தது போல, நிச்சயமாக அவ்விருவரும் சுவன வாசிகளில் உள்ளவர்களாவர் .

மேலும் அவர்களை பின்பற்றக்கூடியவர்கள், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை விரும்புகின்றார்கள், என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை – அல்லாஹ் அவர்களுக்கு இரக்கம் காட்டுவானாக! –

விரும்புதல் என்ற பொய்யான வாதத்தின் காரணமாக எத்தனையோ சோதனைகள் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டன!

இவ்வாறான முட்டாள் தனங்கள் மேலும் அசத்தியங்கள் மேலும் பொய்யான வாதங்களின் காரணமாகவும், மேலும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அவர்களின் மார்க்க விடயத்தில் மடமையில் இருந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவும் , அவர்களே எங்களிடம் வந்து அவர்களில் அதிகமானவர்கள் தடுமாற்றத்தில் இருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு விடயம் மாறி விட்டதின் காரணத்தாலும், மேலும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களை விட்டும் முஸ்லிம்களை விரட்டக்கூடிய கம்யூனிசவாதிகள், மறுமைநாளில் மறுபடியும் மக்கள் உயிர்ப் பெற்று எழும்புவார்கள் என்பதை மறுக்கக்கூடியவர்கள், ராபிழாக்கள், சூபிய்யாக்கள் போன்றவர்களிடமிருந்து வரக்கூடிய சபிக்கப்பட்ட வாதங்களின் காரணத்தினாலும், யமனில் இருக்கக்கூடிய அஹ்லுஸ்ஸுன்னாவுடைய அழைப்புப்பணியைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பிலே ஒன்று சேர்க்கலாம் என்று நான் கருதினேன்.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் .

தொடரும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *