Home » Featured » ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3) அனைத்துப் பகுதிகளும்

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3) அனைத்துப் பகுதிகளும்

1501 முதல் 1896 வரை உள்ள ஹதீஸ்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

riyadussaliheen image2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்: மவ்லவி K.M. முஹம்மத் முஹையுத்தீன் உலவி

பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை கிளிக் செய்யவும்.

Zip file
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1 முதல் 500 வரை Size: 587 MB
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 501 முதல் 1000 வரை Size: 452 MB
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1001 முதல் 1500 வரை Size: 382 MB
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1501 முதல் 1896 வரை Size: 448 MB

தனித்தனியாக ஹதீஸ்களை கேட்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1 முதல் 500 வரை
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 501 முதல் 1000 வரை
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1001 முதல் 1500 வரை
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1501 முதல் 1896 வரை

நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.

புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிலும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.

“ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் தொகுப்பு. மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் தொகுப்புகளாகக் கருதப்படும், புகாரி, முஸ்லிம், திர்மிதி.. போன்ற கிரந்தங்களிலிருந்து மக்களுக்கு மிகவும் பயன்படும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டவையே இப்புத்தகம்.

Source: tamilaudioislam.com
Image courtesy: satyamargam.com

10 comments

 1. M.M. Abdul Kadir Umari

  அல்ஹம்து லில்லாஹ்! இந்த ஆடியோ மக்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
  ஆனால், மொழிபெயர்ப்பாளரின் பெயர் இதில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருப்பதன் நோக்கம் என்னவோ? இந்த தவறு பலரும் செய்து வருகிறார்கள். இலாமியக் கல்வி டாட் காம் கூடவா இப்படிச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களிடம் கூறி ஆடியோவிலும், டெக்டிலும் மொழிபெயர்ப்பாளர் சகோதரர் கே.எம். முஹம்மத் முஹையுத்தீன் உலவி அவர்களின் இணைக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன். பப்ளிஷர் பெயரை மட்டும் கொடுத்துள்ளீர்கள். ஆனல், அதற்கு முக்கியமாகத் திகழ்ந்த மொழிபெயர்ப்பாளரின் பெயரை மறைத்துவிட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

 2. நிர்வாகி

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  சகோ. அப்துல் காதிர் உமரீ அவர்களுக்கு,
  இஸ்லாம்கல்வி.காம் இதனை மீள்பதிவு செய்துள்ளது. மற்றபடி Original source: tamilaudioislam.com

  பல சிரமத்திற்கு இடையே ஆடியோவாக மாற்றியவர்களிடம் சில தகவல்கள் விடுபட்டிருக்கலாம். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு தெரிவிக்கிறோம்.

  தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தளத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பெயர் இணைத்துள்ளோம்.

 3. pls tell actual age of Ulhiya goat in month.

 4. mohamed firdous

  al-hamthulilah…… the ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3) is usefull and easy to share with other………. jasakallah khyran

 5. Assalamu Alaikkum to all

  Maasha allah ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)
  is very superp.. and also easy to download any doupt in hadeez pls came to this site, its very useful to me i share it my friends
  Thanks to all those to work in this web allah give them a pleasant place in Jannah… Jazakallah khairan

 6. VERY VERY USEFULL MESSAGE TO ALL MUSLIM

 7. good and jazzakkallahukair for your response to mp3 format

 8. மூலமாக தினம் தோரும் இரண்டு அல்லது மூன்று ஹதீஸ் அனுப்பி நன்மையை கொள்ளை அடியுங்கள் . கேட்பவர்களும் பார்வேர்த் செய்த நன்மையும் இன்ஷா அல்லா உங்களுக்கும் இஸ்லாம்கல்வி கும் தமிழ் ஆடியோ சகோதரர்களுக்கும் பொய் சேரும் .

  கண்டதெல்லாம் பார்வர்ட் பண்ணும் நபி மொழியை பரப்புவோம்

 9. அல்ஹம்துலில்லாஹ் இது அனைவருக்கும் பயனுள்ளதாகவே அமைத்தும் என நானும் நம்புகிறேன்..இதனை அனைவருக்கும் பகிர்ந்து நன்மைகளை வாரி கொள்ள வல்ல ரஹ்மான் உதவி செய்ய வேண்டும்..ஆமீன்..

 10. முஹம்மத் இக்பால்

  அல்ஹம்துலில்லா மிக பயனுள்ளதும் பயன்பெறத் தக்கதுமாக உள்ளது.இதனை பல வாட்ஸப் தளத்திற்க்கும் அனுப்பி பயனளிக்கவும்,பயனடையும் செய்யத் துவங்கி உள்ளேன்.இறைவன் உதவி புரிவாயாக.ஆமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *