Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்லாஹ்வின் புறத்திலிருந்து அமைதி இறங்க வேண்டுமா? அல்குர்ஆனை ஓதுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 038]

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அமைதி இறங்க வேண்டுமா? அல்குர்ஆனை ஓதுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 038]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“அவசரப்படாமல் அமைதியாகவும் ஆராய்ந்துணர்ந்தும் அல்குர்ஆனை மனிதன் ஓதுகின்ற போது (அல்லாஹ்விடமிருந்து) அமைதி இறங்குகிறது! ஓதுபவரின் உள்ளத்தைச் சென்றடையும் வரைக்கும் அந்த அமைதி இறங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் உள்ளத்தில் அல்லாஹ்தான் அந்த அமைதியை இறக்கி வைக்கின்றான்.”

{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 04/651 }

قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ السكينة تنزل عند قراءة القرآن إذا قرءه الإنسان بتمهّل وتدبّر؛ فإن السكينة تنزل حتى تصل إلى قلب القارئ؛ فينزل الله السكينة في قلبه!” ]
{ شرح رياض الصالحين ، ٤/٦٥١ }

?? பராஃ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் (அல்குர்ஆனின் 18-வது அத்தியாயமான) ‘அல்கஹ்fப்’ அத்தியாயத்தை (தனது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இரண்டு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு, அது குதிரையை மெல்ல மெல்ல நெருங்கலாயிற்று. மேலும் அவரின் குதிரை மிரளவும் தொடங்கியது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘அல்குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது!’ என்று கூறினார்கள்”.
{ நூல்: புகாரி – 5011 }

தமிழில்:
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 07/06/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *