Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » மிக நேரானதின் பக்கம் வழிகாட்டும் அல்குர்ஆனோடு மிக நெருக்கமான உறவைப் பேணுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 039]

மிக நேரானதின் பக்கம் வழிகாட்டும் அல்குர்ஆனோடு மிக நெருக்கமான உறவைப் பேணுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 039]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“ரசூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த (இறைவேதம்) அல்குர்ஆனை வர்ணித்து அல்லாஹ் கூறும்போது, ‘நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின் பக்கமே  வழிகாட்டுகிறது!’ (17:09) என்று கூறுகிறான்.

‘நேரானதின் பக்கமே இது வழிகாட்டுகிறது!’ என்ற இவ்வார்த்தையின் விளக்கத்தை பல பாகங்கள் கொண்ட நூல்களில் எழுதித்  தொகுக்கப்பட்டாலும் அது தெரிவிக்க வரும்  கருத்துக்களை அவற்றிற்குள் உள்ளடக்க முடியாது!.

இஸ்லாமியக் கொள்கைசார் விடயங்கள், வணக்க வழிபாடுகள், பண்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், தொடர்பாடல்கள் போன்ற விடயங்களில் செய்ய வேண்டியதாகவும், அல்லது விட்டுவிட வேண்டியதாகவும்  இருக்கின்ற எல்லாவற்றிலும் நேரானதன் பக்கமே இக்குர்ஆன் வழிகாட்டும்!.

உன்னால் முடியுமான அளவு ஆரம்பம் முதல் கடைசி வரை,  இஸ்லாமிய ஷரீஆ விடயங்களை நீ ஆய்வு செய்து பார்த்தால் (அல்குர்ஆனுக்கான) இந்த வர்ணனை ஷரீஅத்தின் எல்லா விடயங்களிலும்  ஒத்துப்போகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும் இருப்பதை நீ கண்டு கொள்வாய். இஸ்லாமிய ஷரீஆ விடயங்கள் ஒவ்வொன்றும் மற்ற அனைத்தையும் விட மிக்க நேரானதாகவே இருந்து கொண்டிருக்கிறது!”.

{ நூல்: ‘தfப்ஸீர் சூரதிஸ் ஸாப்fபாத்’, 06/86 }

قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

 “قال الله تعالى في وصف القرآن الذي جاء به الرسول صلّى الله عليه وسلّم: « إن هذا القرآن يهدي للّتي هي أقوم ».

هذه الكلمة لو صنّفت عليها مجلدات مااستوعبت مدلولها « يهدي للّتي هي أقوم »! في كل شيئ؛ فى العقائد والعبادات والأخلاق والمعاملات إيجادا أو تركا.

 ولو أنك تتبّعت الشريعة بقدر ما تستطيع لوجدت أن هذا الوصف منطبق على جميع خصال الشريعة. كل خصال الشريعة أقوم من كل شيئ”.

{ تفسير سورة الصّافّات ، ٦/٨٦ }

அல்லாஹ் கூறுகிறான்: “ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. (இது), மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும், (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது!” (அல்குர்ஆன், 02:185)

 

தமிழில்:

அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

30/05/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *