Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » ஈமான் என்றால் என்ன? | அறியவேண்டிய அடிப்படைகள்-01

ஈமான் என்றால் என்ன? | அறியவேண்டிய அடிப்படைகள்-01

அகீதா விஷயத்தில் ஒரு முஸ்லிம் அறிய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை கேள்வி பதில் வடிவில் குர்ஆன் சுன்னா ஒளியில் அமைத்துள்ள புத்தகம் (அகீததுல் இஸ்லாமிய)

“குர்ஆன் சுன்னா” என்று பேசக்கூடிய மக்கள் அதை அழகிய முறையில் அறிய இந்த தொடர் கட்டுரை உதவ அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

ஈமான் என்றால் என்ன?

இந்த கேள்வியை ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) பதில் கூறினார்கள்:

1.அல்லாஹ் (தான் அனைத்தையும் படைத்தவன், அவன் தான் வணங்குவதற்கு தகுதியானவன், அவனுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன) என்று நீ நம்ப வேண்டும்.

2.மலக்குமார்கள் (ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டார்கள் என்று) நம்ப வேண்டும்.

3.வேதங்கள் (அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை அதில் உள்ளவை தான் தவ்றாத், ஸபூர், இன்ஜீல், இறுதி வேதம் குர்ஆன் என்று )நீ நம்ப வேண்டும்.

4.தூதர்கள் (அனைவரும் நல்லவர்கள் அவர்களில் முதன்மையானவர் நபி நூஹ்(அலை) அவர்கள்.அவர்களில் இறுதியானவர் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

5.இறுதி நாளில் (மக்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள் என்று) நீ நம்ப வேண்டும்.

6.விதி(யால் ஏற்படும்) நன்மையானாலும் தீங்கானாலும் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று நம்ப வேண்டும். (முஸ்லிம்)

நூல்:அகீததுல் இஸ்லாமிய | ஆசிரியர்: முஹம்மது பின் ஜமீல் ‌ ஜைனூ

தமிழில்: யூசுப் இப்னு ஹுசைன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *