Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » குர்ஆன் சுன்னாப் பிரச்சாரம் வழிகெட்ட இயக்கப் பிரச்சாரமாகுமா?

குர்ஆன் சுன்னாப் பிரச்சாரம் வழிகெட்ட இயக்கப் பிரச்சாரமாகுமா?

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் சில தசாப்தங்களாகவே தெளிவான அகீதா அறிவை சுவாசித்தனர்.

கப்றுகளுக்கு  தெய்வீக சக்தியை வழங்கி அவற்றை வணங்கி வழிபாடுதல்,

அவ்லியாக்கள் என்போரை அல்லாஹ்வைச் சென்றடையும் ஊடகமாக்கி, அவர்கள் பேரில் நேர்ச்சை மற்றும் அவர்கள் பேரில் ஷிர்க்கான பல வழிபாடுகள்

மூட நம்பிக்கை சார்ந்த  பழக்க வழக்கங்கள்

வரதட்சனைக் கொடுமை

அமல்களில் பித்அத்

ஸஹீஹான துஆக்கள் மற்றும் அத்கார்கள் தெரியாது வாழ்வைக் கடத்தியமை

பர்தாக் கலாச்சார  ஆடை அணிகலன்கள்

அஜ்னபி மஹ்ரம் உறவை இத்தாவில் மாத்திரம் பேணுதல்

போன்ற கலாச்சார பண்பாட்டு வீழ்ச்சியில் மூழ்கி அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. الحمد لله

இதற்கு குர்ஆன் மற்றும் சுன்னாவை மக்கள் மனங்களில் வீரியமாக இலங்கை மண்ணில்  எற்றி வைத்து அல்லாஹ்வின் அருளால் வெற்றி பெற்ற அறிஞர்களில் இலங்கையில் பரகஹதெனிய அன்ஸாருஸ்ஸுன்னா  அமைப்பின் ஸ்தாபகர் அல்லாமா அப்துல் ஹமீது அல்பக்ரி அவர்களோடு கொழும்பு நிஸார் குல்வத்தி , ஹபுகஸ்தலாவ மீரான் அல்ஃபாஸி, மன்னார் மறிச்சிக்கட்டி ஷாஹுல் ஹமீத் -ரஹிமஹுல்லாஹ்-  மௌலவி, அப்துல் வதூத் ஜிஃப்ரி, கரடிக்குளி சித்தீக் மௌலவி போன்ற அறிஞர்கள் தஃவாக் களத்தில்  முக்கியமானவர்கள்.

அரபுக் கல்லூரிகள் அமைத்து பல நூறு மாணவச் செல்வங்களை தவ்ஹீத் சிந்தனையோடு வெளியேற்றிய அறிஞர்களின் சேவையை என்னவென்பது?

இலங்கையில் குர்ஆன், சுன்னா பிரச்சாரம் ஏதோ பீ.ஜே. தொடங்கியது போன்று அவரது அடிமைகள் பேசிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல.

அவ்வாறே, குர்ஆன் சுன்னா அடிப்படையில்  தவ்ஹீத் பிரச்சாரத்தை  முன்னெடுக்கின்ற  அமைப்புக்கள் அனைத்தும் வழிகேடானவை  என தனது  அமைப்பைக் கலைக்காது அன்ஸாருஸ்ஸுன்னா,  ஷபாப் போன்ற  நிறுவனங்கள்  கட்டிக் கொடுத்த  கட்டிடத்தில் இருந்து கொண்டு  பிரச்சாரம் செய்வோரின் உழறல்கழள் போன்றும் அல்ல. இலங்கை தஃவாப் பிரச்சாரம் என்பது அமைப்புக்கள் தனிநபர்கள் போன்றோரின் பங்களிப்பு அளப் பெரியது.

இஸ்லாமிய அடிப்படைகள்  சார்ந்த பணியே அன்றி இயக்கம் சார்ந்த பணி அல்ல.
அதாவது தவ்ஹீத்  அமைப்புக்களின் பிரச்சார முன்னெடுப்புக்கள் இயக்கமே இஸ்லாம் எனவாதிடும் நவீன கால இயக்கங்களின் நிலைப்பாட்டைக் கொண்ட பிரச்சாரம் கிடையாது.

இலங்கையில் 1940 முதல் மிகப் பெரும்  தியாகத்தோடு நடை பெற்றுக் கொண்டிருந்த இந்தப் பணி மக்கா மதீனா போன்ற சவூதிப் பல்கலைக்கழக பட்டதாரிகள் முன்னெடுத்த காரணத்தினால்  அது சவூதிப் பணத்திற்காக செய்யப்படுகின்ற பிரச்சாரம், வஹ்ஹாபியப் பிரச்சாரம் என்றெல்லாம் பல வதந்திகளை அவ்லியாக்கள்  மூலம் மக்கா  காஃபிர்ள் போன்று அல்லாஹ்வை நெருங்கலாம் என வாதிடும் ஷீஆக்கள் மற்றும்  அவ்லியா வணங்கிகள் மூலம் பரப்பப்பட்டு அது களத்தில் தோல்வியும் கண்டது.

இந்த பிரச்சாரத்தை தப்லீக் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி மற்றும் இக்வான்கள் கூட முன்னெடுத்ததை உணர முடிந்தது.

1991 ம் ஆண்டு மாதம்பை இஸ்லாஹிய்யாவில் ஒரு அதிசயம்?ஸஹ்வாவில் இறுதி ஆண்டு மாணவராக  இருந்த  நானும் நண்பர் ஓட்டமாவடி அரஃபாத்தும்  இஸ்லாஹிய்யாவில் ஒரு பயிற்சி பட்டறையில்  கலந்து கொண்டோம்.

அப்போது ஜமாஅத்தே  இஸ்லாமியினரும் நளீமிகளும் சேர்ந்து இப்போது போலவே  ஜனநாயகம் குஃப்ர், சஊதி அரேபியா அமெரிக்காவின் அடிமை, அங்கு இஸ்லாமிய ஆட்சி இல்லை, மன்னராட்சி முறை இஸ்லாமிய ஆட்சி அல்ல,  எனப் பிரச்சாரம் செய்த காலம்.

இந்த வகுப்பில் கொழும்பு பல்கலை விரவுரையார் என அப்போது எம்மிடம்  சொல்லப்பட்ட ஹனீஸ் பிரதர் என்பவர் உலக முஸ்லிம்கள் தொடர்பான ஒரு பாடத்தை நடத்தினார்.

அவர் தனது விரிவுரையில் தொழுகையில் நெஞ்சில்  கைகட்டுதல், விரல் அசைத்தல் , பித்அத்தான கூட்டு தூஆ போன்ற சுன்னத் சார்ந்த மற்றும்  வழிகைடுகளை  சில்லறைப்  பிரச்சினைகளை கிழறிவிடுவதனால் மக்கள் ஆட்சி  பற்றி சிந்திக்காமல் தமக்குள் பிளவுபட்டுக் கொள்ள அமைரிக்காவே சவூதியைத் தூண்டி அதற்காக தாயிகளையும் நியமித்துள்ளது போன்ற கருத்துக்களை முன் வைத்த போது அது எப்படி நடக்கும் ! இது தானா இவரின் படிப்பு போன்ற வாதப் பிரதி வாதங்களோடு அங்கிருந்து விடை பெற்றோம்.

இப்போது ஜமாத்தே இஸ்லாமிஅமைப்பு ஜனநாயகம் குஃப்ர் , அது  மனித சட்டம் போன்ற தனது  ஆரம்ப நிலைப்பாட்டை மாற்றி அந்தக் குஃப்ரையே இஸ்லாமிய சிந்தனையாகப் பார்ப்பது போன்ற நிலை  இலங்கையில் உள்ள அவர்களின் ஆதரவு அமைப்பான  N.F.G G யின் போக்கின் மூலமும் அவர்கள் மூலம் வளர்ந்த சிலர்  மூலமூம் அறிந்து கொள்ள முடிகின்றது.

தவ்ஹீத் அமைப்புக்கள் ஹிஸ்பிய்யத் சார்ந்ததா?
தவ்ஹீத் பிரச்சாரம் என்பது குறித்த ஒரு அமைப்பின் பெயரில் முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அது இயக்கத்தை இஸ்லாமாகப் பார்க்கின்ற முத்திய இயக்க  வெறியோடு தொடர்புடையது என்ற கருத்தை நானே இலங்கையில் அல்பானி எனக் கூறிக் கொண்ட  அறிஞர் நுஃபார் பாரூக் -ரஹ்- அவர்களின் மகன் சில்மி என்பவர் முதலாவதாகப் பிரச்சாரம் செய்தார்.

அதனை கொழும்பு வாழ் தவ்ஹீத் சகோதரர்களில் குறிப்படிட்ட ஓரிருவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்த போது அவர்களின் அமைப்பின் பெயர் الهداية AL-HIDAYA FOUNDATION என வைத்துக் கொண்டே பிரச்சாரம் செய்தனர்.

இவர்களை விட்டும் பிரிந்து போன சில்மி  தனக்கென  دار السلف என்ற ஒரு புதிய  அமைப்பை உருவாக்கி தானே நேர்வழி நடக்கும் கலீஃபா என்றார்.

இவரே இலங்கை மண்ணில் ஒரு நல்லறிஞர் ஒருவர்  என நாம் பேசிக் கொண்டிருந்த  அவரது தந்தை நுஃபார் ஃபாரூக் -ரஹ்- அவர்களை விட தன்னை மேதாவி எனக் கூறிக் கொண்டு வாப்பாவோடு ஒரே ஸஃப்பில் பெருநாள் தொழாமல் தனது ஏழு எட்டு சஹாக்களோடு ஒரே திடலில்  இரண்டாம் ஜமாத் செய்து பெருநாள் தொழுதவர்.

புதிய முஜ்தஹிதின் புதுப் புரளி
இலங்கையில் தவ்ஹீத் அமைப்புக்கள் அனைத்திலும் கிடைக்கும் சம்பளங்களை ஆரம்ப காலங்களில்  சிறப்பாக அனுபவித்து விட்டு அந்த அமைப்புகள் யாவும் வழிகேடுகள் என தற்போது மும்முரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார் ஒரு முஜ்தஹித்.

இவரோடு சில நிமிடங்கள் அமர்ந்தால் போதும் டொக்டர் ரயுசுத்தீன், முபாரக் மதனி, முஹம்மத் ரஹ்மானி, இஸ்மாயீல் ஸலஃபி அபூபக்கர் ஸித்தீக் மதனி, வதூத் ஜிஃப்ரி போன்ற தவ்ஹீத் ஜமாத்  அறிஞர்கள் மற்றும் JASM, UTJ, ACTJ, .RABITHA போன்ற அனைத்து குர்ஆன் ஹதீஸ் அமைப்புக்களையும் இஸ்லாமிய வரையறையில் இருந்து ஓரங் கட்டிவிட்டு தானே தனிக்காட்டு ராஜா, தனது கூற்றே சரி என  புதிய உமர் அலியாக மாறி தனது பேச்சை முடிப்பார்.

ஈமானிய பலவீம் கொள்கைப் பிரழ்வாகுமா?
பின் வரும் வசனங்கள் அல்அன்ஃபால் அத்தியாயத்தில் போர் தொடர்பாகப் பேசுகின்றன.

يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ (65) الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ [الأنفال / 66]

அவை நபித்தோழர்கள் இஸ்லாத்தை தழுவி ஆரம்ப  நிலையில் ஈமானிய உறுதிமிக்கவர்களாகவும் பின் பலவீனமான நிலையை எட்டியதாகவும்  குறிப்பிடுவது ஷிர்க் பித்அத் செய்யாத நபித்தோழர்களையாகும்.

இந்த அணுகுமுறை போன்று  கூட தனது பிரச்சாரத்தை முன்னெடுக்காது தானே முஜ்தஹித், எனக்கே எல்லாம் தெரியும் என்ற நிலையில் தஃவாப் பிரச்சாரம் செய்கின்ற இவரிடம் இருந்து வெருண்டோடி அவர் யாரை? எந்த தவ்ஹீத் அமைப்புக்களைக் குறை கூறுகின்றாரோ அந்த அமைப்புகளோடு அவரோடு உள்ள மக்கள் தினமும்  சாரைசாரையாக வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர் என்பதை அங்குள்ள கள நிலவரங்கள் சொல்கின்றன.

இது அவரது நிலைப்பாடு பற்றி முடிவு செய்யப் போதுமான ஆதாரமாகும் சரி!

இந்த மேதை விமர்சனம் செய்யும் தவ்ஹீத்  அறிஞர்கள்  புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸில் வருகின்ற சிறப்பைக் கூடவா எட்டாதவர்களாக மாறிவிட்டனர்? இத்பான் பின் மாலிக் (ரழி) அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த இறைத் தூதர்   நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் நடந்து கொண்டது அவர்களின் உயரிய பண்பாட்டை மாத்திரம் போதிக்காது,   அல்லாஹ்வின்  முகத்தை நாடி தூய திருக் கலிமாவை மொழிந்த நபித்தோழர் மாலிக் (ரழி) அவர்கள் கலிமாவின் மூலம் பெற்ற   சிறப்பையுமா அவர்கள்  இழந்து விட்டனர் என்ற வினாவையும் எழுப்புகின்றது.

இப்போது தொடர்ந்து  வாசியுங்கள்

ثم قال صلى الله عليه وسلم  ( أين تحب أن أصلي من بيتك ) . قال فأشرت إلى ناحية من البيت فقام رسول الله صلى الله عليه و سلم فكبر فقمنا فصصفنا فصلى ركعتين ثم سلم قال وحبسناه على خزيرة صنعناها له قال فثاب في البيت رجال من أهل الدار ذوو عدد فاجتمعوا فقال قائل منهم أين مالك بن الدخيش أو ابن الدخيش ؟ فقال بعضه ذلك منافق لا يحب الله ورسوله فقال رسول الله صلى الله عليه و سلم ( لا تقل ذلك ألا تراه قد قال لا إله إلا الله يريد بذلك وجه الله ). قال الله ورسوله أعلم قال فإنا نرى وجهه ونصحيته إلى المنافقين قال رسول الله صلى الله عليه و سلم ( فإن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله )  أخرجه البخاري.

இவர்களையும்  இவரோடு பயணித்த டொக்டர் ரயீசுத்தீன் ஷரயி, இர்ஃபான் ஷரயி, கைஸான் ரியாதி, ரமீஸ்  ஷரியி, ஷர்ஃபான் போன்ற இவரது பல மாணவர்கள் மற்றும் அமீருல் அன்ஸார் ஸலஃபி, மக்கி, ஸியாப் ஸலஃபி, முஹம்மத் ரஹ்மானி போன்ற பண்பான தாயிக்கள் பலரையும் இந்த மனிதரைப் போன்றாவது எடுத்துக் கொள்ளமுடியாதா?

இவர் தனது பிரச்சாரம் சரி எனக் கூறுவதை விடுத்து இவரை விட்டும் அவரோடிருந்த தவ்ஹீத் ஆலிம்கள் வெருண்டோடியது பற்றி சிந்திக்க , தனது அறியாமை பற்றி  சுய பரிசோதனை செய்ய நேரமில்லாமல் இறை பணி செய்கின்ற இப்படியான  மனிதர்களை மலக்குகளின் நிலையில் வைத்து இவர் விமர்சனம் செய்வதால் இவருக்கு  கிடைக்கின்ற நன்மைதான் என்ன?

ஹுதைபியாவில் உமர் , மற்றும் உஸ்மான் ரழி ஆகிய இருவரில் யாரைத் தூதராக அனுப்ப வேண்டும் என கலந்தாலோசனை செய்யப்பட்ட போது உஸ்மான் அவர்களையே அனுப்ப நபி ஸல் அவர்கள் முடிவு செய்தது கொள்கை விட்டுக் கொடுப்பா? இல்லையே?

அது போலவே பித்அத் சார்ந்த  அமைப்புகளோடு சில அமர்வுகளில்  சிலர் பங்கேற்கின்றனர். அதற்காக அவர் முர்தத்தாகி விடுவாரா? என்ன?

சரி அது இருக்கட்டும்! சென்ற ஆண்டு 2018  தெல்தொட்ட மஹ்ஃபலுல் உலமா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டாராமே! அவர்கள் பக்கா ஸலஃபிகளா? இல்லையே?

இவரது பிரச்சாரத்தை 100% வீதம் சரி காண்போர் இது தொடர்பாக ஏன் தமது ஷேக்கிடம் விளக்கம் பெறாமல் மௌனிகளாக இருக்கின்றனரோ தெரியாது. குருப்பற்றா? அல்லது ஷேக் தவறுகளுக்கு அப்பாற்பட்ட மஃசூமாகி விட்டாரா?


ரிஸ்வான் மதனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *