Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி
இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

– முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தார்களா?
– அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சர்வதேச சதியில் ஈடுபட்டார்களா?
– தனித் தாயகம் கேட்டுப் போராடினார்களா?
– பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்களா?
என்ன குற்றம் செய்தார்கள்? இக்கேள்விகளுக்கு இனவாதிகளிடம் பதிலில்லை.

– முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிக்கிறது.
– முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுகிறார்கள்.
– மாடு அறுக்கிறார்கள்.
– ஹலால் உணவு வேண்டுகிறார்கள்.
– பலதார மணம் புரிகிறார்கள்.
– பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்கிறார்கள்.

இப்போக்கு 2050 ஆம் ஆண்டு ஆகும் போது இலங்கை முஸ்லிம் நாடாக மாறி விடும். அதனையே முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்பதே இந்த இனவாதிகளின் குற்றச்சாட்டாகும். இக்குற்றச் சாட்டுகளை ஆரோக்கியமான முறையில் முன்வைத்தால் நாட்டுக்கும் சகல சமூகத்தவர்களுக்கும் பாதுகாப்பாகவும் அமைதியானதாகவும் இருந்திருக்கும். அதைவிடுத்து “அச்சுறுத்தல்” மிகுந்த பிரச்சாரங்களினூடாக முன்வைப்பதனாலேயே பெரும் பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது.

இந்நேரத்தில் முஸ்லிம்கள் அச்சப்பட்டு வாழ்ந்தாலும் இன்னுமொரு விதத்தில் இஸ்லாத்தை விளக்கப்படுத்திட அல்லாஹ் தந்த அருமையான வாய்ப்பு இது. இஸ்லாம் குறித்து அவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் பதிலளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் விரும்பி கேட்டிருந்தாலும் இவ்வாறான சூழல் நமக்கு அமையப் பெற்றிருக்காது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நாட்டு அரசியல் அமைப்பை முழுமையாக ஏற்று கட்டுப்பட்டு நடப்பவர்கள் முஸ்லிம்கள். இச்சட்டத்தில் சிவில் சட்டம், தனியார் சட்டம் என இருவகையுண்டு. எல்லா இன மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மதங்களில் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு தனியார் சட்டங்கள் அம்மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கென்று அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தான் முஸ்லிம்களும் பின் பற்றுகிறார்கள். சிங்கள சமூகத்திற்கும் உடரட பஹதரட என்ற சட்டமும் வழங்கப்பட்டுள்ளது

ஒரு பிரதேசத்தில் இரண்டு மூன்று பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் முஸ்லிம் சனத்தொகை பெருக்கம் மட்டும் காரணமல்ல. நின்று தொழுவதற்கேற்ற வகையில் (ஒருவருக்கு குறைந்தது 2 அடிக்குத் தேவையான) இடப்பற்றாக் குறையே ஆகும். ஏக்கர் கணக்கில் முஸ்லிம்களுடைய பள்ளி வாசல்கள் விசாலமனதுமல்ல. வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ தொழுகை கடமையாக்கப்படவில்லை. நாளொன்றுக்கு 5 நேர தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

5 நேர தொழுகைளுக்கு மக்கள் பள்ளியில் ஒன்று சேர்து கூட்டமைப்பாக தொழும் போது இடம் தட்டுப்பாடாக உள்ளது. அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமை நாட்களில் இடப்பற்றாக்குறையினால் பாதையில் தொழுகிறார்கள். ஆண் பெண் இரு சாராருக்கும் பள்ளியில் தொழ அனுமதி வழங்கப்பட்டிருந்தும் பெண்கள் வீட்டில் தொழுது கொள்வதற்கு இடப்பற்றாக்குறையும் ஒரு காரணமாகும்.

நான்கு பெண்களை மணமுடிக்கும் பலதார மணத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கட்டாயமாக்கவில்லை. ஒரு பெண்ணை மணம் முடித்து வாழ வைக்க வசதியிருந்தால் மணம் முடிக்குமாறு கூறுகிறது. இரண்டாம் தடவையாக இன்னுமொரு பெண்ணை மணம் முடித்து முதல் மனைவிக்கு வழங்கிய அதே அந்தஸ்து மற்றும் சமஉரிமையுடன் நடாத்த முடியுமாயின் வாழ்வு கொடுக்குமாறு தூண்டுகிறது. இல்லையேல் ஒதுங்கி விடுமாறு கட்டளையிடுகிறது.

வசதியற்ற ஏழைகள். விதவைகள் என்று பல பெண்களின் வாழ்வு தவறான வழிகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலே பலாதார மணத்தை இஸ்லாம் முன் வைக்கிறது. இலங்கையில் நான்கு பெண்களை மணம் முடித்த முஸ்லிம்களைக் காண்பது அரிது.

இந்நாட்டில் யுத்தத்தினாலும் பேரலைகளாலும் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்கும் உரிமையில் எல்லா இனத்தவர்களும் இருக்கிறார்கள். எனவே பௌத்த சமயத்தவர் 5 பெண்களை மணம் முடிக்க வேண்டும் என்று பொது பலசேனா எனும் அமைப்பு உரிமை கேட்பதை முஸ்லிம்கள் வரவேற்கிறார்களே தவிர ஆட்சேபிக்கவில்லை.

பெண் ஆசை கூடாது பெண்ணின் நிழல் பட கூடாது என ஒதுங்கி ஓடும் பௌத்த துறவிகள் 5 பெண்களை மணம்முடிக்கும் உரிமை கேட்பது எங்களுக்கு ஆச்சரியமான செய்தியல்ல. துறவு வாழ்விலிருந்து உறவு வாழ்கைக்கு வந்தால் மனித உணர்வுகளையும் இவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

பணம் சம்பாதிப்பதன் நோக்கிலும் சீதன் கொடுக்கும் கொடுமையிலும் தான் பௌத்த பெண்கள் மணம்முடிப்பதை பிற்படுத்துகிறார்கள். தன்வாழ்வை தானே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்வுக்காக சம்பாதிக்கிறாள். இதனால் இவளுடைய திருமண வாழ்வின் வயது 30தை தாண்டுகிறது. அதுமட்டுமன்றி ஜோசியம் பார்த்து நல்ல காலம் நல்ல நேரம் பார்த்து மணம் முடிப்பதை கடமையான மத அனுஷ்டானமாக ஆக்கியதாலும் திருமணம் மாத கணக்கிலும் வருட கணக்கிலும் பிற்படுத்தப்படுகிறது. குறைந்தது 35 வயதிற்கு பின்பே மணவாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். இதன் பின்பு இவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொள்கிறார்கள். குறைத்துக் கொள்கிறார்கள். வேலைக்கும் போக வேண்டும் பிள்ளைகளையும் பெற வேண்டும் என்ற நிலையில் ஓருரி பிள்ளைகளுடன் குடும்ப கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். இவர்களுடைய சன பெருக்கத்தை இவர்களே அழித்துக் கொள்வதற்கு முஸ்லிம்கள் எப்படி காரணமாக முடியும்?
முஸ்லிம் பெண்களுடைய வாழ்வும் குடும்ப வாழ்வும் இதை விட முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பிட்ட வயதில் மணமுடித்து பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
மனித குலத்தின் நலன் கருதி சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலே ஹலாலான உணவு முறைகளை இஸ்லாம் காட்டித் தருகிறது. முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஏனைய சமூகத்தவர்களும் இதனை கவனத்தில் எடுக்கலாம். இந்த வகையிலே ஹலால் உணவை முஸ்லிம்கள் வலியுறுத்துகிறார்கள்.

அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மனிதனின் வாழ்வுக்காக, நன்மை பயக்கவே படைக்கப்பட்டுள்ளது. மாமிச உணவும் – (அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மாமிசமும்) இந்த வகையிலே இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுவும் விரும்பினால் உண்ணலாம். இல்லையேல் தவிர்க்கலாம். பிராணிகளின் பயன்பாட்டை கவனத்தில் எடுத்து அவைகளை கடவுளாக எடுத்துக் கொள்ள எமக்கு அனுமதிக்கப்படவில்லை. பசு ஒரு சாராருக்கு நன்மை தருவது போல் ஆடு மற்றும் ஒட்டகமும் மிகப் பெரும் பலனைத் மனிதர்களுக்குத் தருகிறது. ஒவ்வொரு மிருகத்திலும் ஒவ்வொர வகையான பலன் உண்டு.

பசு ஒருவருக்கு கடவுளாகவும் பாம்பு இன்னுமொருவருக்கு கடவுளாகவும் சூரியன் சந்திரன் இன்னுமொருவருக்கு கடவுளாக இருக்கலாம். அது போல் பாம்பு நாய் பூனை எலி பன்றி போன்றவை உணவாக உட்கொள்ளலாம். ஒருவர் வணங்குவதையோ அல்லது சாப்பிடுவதையோ மற்றவரும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. இதிலுள்ள நன்மை தீமைகளை விளக்கப்படுத்தலாம். அதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. யார் மீதும் எதனையும் திணிப்பது அல்லது நிர்ப்பந்திப்பது இஸ்லாத்தின் பணியல்ல.

முன்பெல்லாம் ஹலால் உணவை பேணியவாறே இப்போதும் முஸ்லிம்கள் பேணுகிறார்கள். அன்று உணவு உற்பத்தியில் பாரிய முன்னேற்றமோ மிருகங்களின் கொழுப்புக்கள் கலந்த உணவு பொருட்களோ பெரியளவில் இருக்கவில்லை. இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப அனைத்தும் வேகமாக மாறிச் சென்றுள்ளன அதன் ஓட்டத்திலே ஹலாலை பேணுவதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

“கெதர புதுன் அம்மா” என்ற அந்தஸ் தினை பௌத்த சமயத்தவர் பெண்களுக்குக் கொடுத்திருப்பதை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். அந்த பெண்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை மானம் மரியாதையுடன் வெட்க உணர்வுகளுடன் வளர்க்கப்படுவதையும் அவர்களது உணர்வுகளையும் உரிமைகளையும் முறைப்படி பேணுவதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவர்களது உடல் அங்கங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாச சின்னமாக, ஆசை நாயகிகளாக பயன் படுத்துவதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

“அம்மா” என்ற உயர் அந்தஸ்தினை பெற்றுள்ள அப்பெண் எல்லா நிலைகளிலும் கௌரவிக்கப்படுவதை வழிகாட்டுகின்றது. எனவே பெண்ணின் உடல் அங்கம் அடுத்தவர்களைத் தூண்டி இழுக்கக் கூடியதாகவோ -தவறான செயற்பாடுகளுக்குத் தூண்டில் விடக் கூடியதாகவோ அமையப் பெறக் கூடாது எனக் கூறி ஹிஜாப் ஆடையை வலியுறுத்துகிறது.

சிங்கள சமூகத்தவர்கள் போயா தினத்தன்று அணிந்து செல்வதற்கென்று தனியான ஆடைமுறையை கையாள்கிறார்கள். அதனை மத அனுஷ்டானமாகவும் கடைபிடிக்கிறார்கள். அந்நாளில் பெண்களை விட ஆண்களே கூடுதலாக மறைத்து செல்கிறார்கள் மதகுருமார்கள் கூட தங்களை முழுமையாக மறைத்துக் கொள்கிறார்கள். ஆணை விட உடல் அமைப்பில் வித்தியாசமான நிலையிலுள்ள பெண்கள் மறைக்க வேண்டும் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடையின் அவசியத்தை ஏற்றுக் கொள்வார்கள். பெண்கள் துஷ்பிரயோகம் பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்புக்கு காரணமே பெண்களின் ஆடை முறை என்பது அடிப்படையான விடயமாகும்.

ஒரு பெண் தன்அங்கங்களை மறைத்து உடலை மறைத்து செல்வது நாகரீகமே தவிர பிற்போக்கு தனமல்ல. அது அவளுடைய அடிப்படை உரிமையும் கூட. திறந்த மேனியுடன் செல்வதற்கு உரிமையுண்டு என வாதிடுபவர்கள் மறைத்து செல்வதும் உரிமை என்பதை ஏற்க மறுப்பது ஏன்?.

தாய் வணங்கப்படக்கூடிய தெய்வம் என்ற கொள்கையுடையவர்கள் அந்த தெய்வதற்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற விடயங்களை கழைவதற்கான அவசியத்தை உணர்ந்தால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்திட முடியும்.

இஸ்லாம் குறித்தோ அல்லலது முஸ்லிம்கள் குறித்தோ குற்றச்சாட்டுகளுக்கான தெளிவினை வழங்கும் பொறுப்பில் முஸ்லிம்கள் உள்ளார்கள். எந்தவொரு விடயத்தினையும் முன்வைக்கும் போது பேரினவாதத்தை தூண்டும் வகையில் முன்வைக்காது உண்மையை புரிந்து கொள்ளும் வகையில் முன்வைக்குமாறு நாம் கேட்டு கொள்கிறோம். இந்த நாட்டை பிடிக்கும் நோக்கமோ ஆளுகின்ற நோக்கமோ முஸ்லிம்களுக்கில்லை. தாங்கள் பின்பற்றும் மார்கத்தினை தெளிவுப்படுத்தும் நோக்கிலே முஸ்லிம்கள் உள்ளனர் என்பதையும் கூறிக் கொள்ளவிரும்புகிறோம். பௌத்த மக்களுக்கும் இதே உரிமை உண்டு என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இதை விடுத்து அபாண்டங்களையும் அவதூருகளையும் பரப்ப வேண்டாம் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். .

4 comments

  1. way this problem we not inform to other Muslim country if we are inform their take know some action and their stop giving found also. your explainable well

  2. assalamu alikum arumiyana katturai allha yella muslim padukapannaga ameen

  3. aslamu alikkum sinkalathil translate panni anaithu mattankaluku anupinal nallathu that pootu nadapathu arasiyal naadaham exa naan ninakiren

  4. Unmayana wilakkam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *