Featured posts

Recent Posts

மதமாற்றம் ஏன்? -3

ஐயம்:2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? (தருமியின் பதிவு) தெளிவு: ”சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்” (திருக்குர்ஆன், …

Read More »

சமாதி வழிபாடு

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: “உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23) அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை …

Read More »

அர்ஜென்டினா – 1

போனஸ் அய்ரஸ் (Buenos Aires) – அர்ஜென்டினாவின் தலைநகர். அழகிய இந்த தென்னமெரிக்க நகருக்கு அலுவலக வேலையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு எடுத்த சில புகைப்படங்கள்: அகலமான சாலைகள்… பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.. உலகின் மிக அகலமான சாலை என கருதப்படும் Avenida 9 de Julio இங்குதான் இருக்கிறது. (படத்தில் இருப்பது அந்த சாலை அல்ல!). போனஸய்ரஸின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்று. அர்ஜென்டினா …

Read More »

துள்ளி எழுந்தது நாகப்பட்டினம்!

எனது முதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: “அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். “ இனி ஜூனியர் விகடன் 21-12-05 இதழில் வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் ஸ்டோரியிலிருந்து சில பகுதிகள்: (நன்றி ஜூனியர் விகடன்) இன்றைக்கு ஒருவேளை சுனாமி அரக்கன், தான் விளையாடிய தேசத்தை சுற்றிப் பார்க்க வந்தால், …

Read More »

இணை வைத்தல்

விலக்கப்பட்டவைகளில் பொதுவாகவே இதுவே மிகப் பெரியதாகும். அபூபக்ரா (ரலி) அறிவிப்பதாவது: ‘பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், …

Read More »

மதமாற்றம் ஏன்? -2

ஹாரிதின் மகள் ஜுவைரியா (ரலி) அவர்களின் நிலையை எண்ணி மனசு கஷ்டப்படுவதாக தருமி குறிப்பிட்டுள்ளார். பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டால் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது? பெண்ணொருத்தி துன்பத்தையனுபவிக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் மனிதம் கொண்ட எவரது உள்ளத்திலும் ”அடடா இது என்ன அநியாயம்” என்று நெஞ்சிரக்கம் கொள்ளும். இரக்கத்தின் மேலிட்டால் மனது கஷ்டத்திற்குள்ளாவதும் இயல்பு. – (//3. ஜுவேரியா – இந்தப் பெண்ணின் …

Read More »

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-2

2. “விவாக ஹோமமும்” “சப்தபதியும்” பாவ்ராவ் சங்கர் லோகாண்டேஎதிர்மராட்டிய அரசு AIR 1965 SC 1566 பாவ்ராவ் லோகாண்டே தமது முதல் மனைவியுடனான திருமணப் பந்தம் நீடிக்கையிலே இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவரது முதல் மனைவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் லோகாண்டே மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்தப் பெண்மணி அளித்த வாக்குமூலத்தில், “என் கணவரது இரண்டாவது திருமணம் எங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள கந்தர்வ …

Read More »

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-1

இந்நூல் உருவாகப் பேருதவியாக அமைந்தது எக்னோமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி (டிசம்பர் 16,1995) இதழில் ஃபிளேவியா அக்னஸ் எழுதிய “ஹிந்து மென், மோனோகாமி அண்டு யூனிபார்ம்சிவில் கோட்” என்ற கட்டுரையாகும். – பேராசிரியர் இ.அருட்செல்வன் 1. உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு சர்லா முத்கல் வழக்கில் உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியதை அனைவரும் அறிவர். ஏற்கனவே திருமணம் செய்திருந்த இந்து …

Read More »

மதமாற்றம் ஏன்? -1

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார். ”நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?” என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ”இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் …

Read More »

முன்னுரை

எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே! திண்ணமாக அல்லாஹ் சில விஷயங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கி விடக் கூடாது. சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறக் கூடாது. பல விஷயங்களை தடை செய்துள்ளான். அவற்றைக் குலைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை ஹலாலாக்கியுள்ளானோ அவை ஹலாலாகும். எவற்றை ஹராமாக்கியுள்ளானோ அவை ஹராமாகும். எவை பற்றி அவன் ஒன்றுமே கூறவில்லையே அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் …

Read More »