Featured Posts

"திடீர்" மனிதாபிமானிகள்

சவூதியில் பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்த இந்திய இளைஞருக்கும், உள்ளூர் அரபி இளைஞருக்கும் ஏற்பட்ட தகறாரில் அரபி இளைஞரின் கண்ணில் தாக்கப்பட்டு பார்வை பறிபோய் விட்டது. பாதிக்கப்பட்டவர் சவூதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சவூதி-தமாம் கோர்ட்டில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பில், சவூதி இளைஞரின் பார்வையிழப்புக்குக் காரணமான அந்த இந்தியரின் ஒரு கண்ணை பழிக்கு பழியாக நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சவூதி …

Read More »

போகிற போக்கில் கல்லெறிந்தவர்கள்

பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இஸ்லாத்திற்கு நன்கு பொருந்துகிறது. கடந்த 1400 வருடங்களாக இஸ்லாத்தை கரித்துக் கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன. முஹம்மது நபியை பொய்யர், சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் சொல்லி இஸ்லாமிய தூதுத்துவத்தை பொய்ப்படுத்த முயன்றவர்களால், இஸ்லாத்தின் உன்னத வாழ்வியல் நெறிகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் அணி அணியாக இணைவதை தடுக்க முடியாமல் சோர்ந்து விட்டனர். இஸ்லாம், கருத்துக்களால் தோற்கடிப்பட முடியாத ஒப்பற்ற மார்க்கம் …

Read More »

சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்

பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும். சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)மேலும் கூறுகிறான்: “சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69) …

Read More »

அர்ஜென்டினா – 2

போனஸய்ரஸ் நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது Plaza de Mayo எனப்படும் அர்ஜென்டினாவின் சரித்திரப் புகழ் பெற்ற சதுக்கம். சதுக்கத்தின் ஒருபுறத்தில் இருக்கும் cabildo எனப்படும் எளிமையான இந்தக் கட்டிடம் ஆகப் பழமை வாய்ந்தது. 1748-ல் காலனி ஆதிக்கத்தின்போது கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எவ்வளவோ அரசியல் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் மவுன சாட்சியாக நிற்கிறது. Cabildo – விற்கு நேரெதிரில் அமைந்திருப்பது Casa Rosalda (Pink House) எனப்படும் அதிபர் மாளிகை. ஒரு …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-11

தொடர்-11: தோப்பில் முஹம்மது மீரான் வரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள் “இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள் தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்”. (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar – Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார். நான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் …

Read More »

ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்

இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது. அல்லது ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவது. அல்லது அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. அது ஹலால் – ஆகுமானது என்று கருதுவது. இதனை அல்லாஹ் மிகப் பெரும் …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-10

தொடர்-10: தோப்பில் முஹம்மது மீரான் மேதை அல்பிருணியின் இந்திய வருகையும் – சர்ச்சையும் இஸ்லாம் உலகில் வேருன்றி இரு நூற்றாண்டுகள் கடந்த பின் இந்தியாவிலாகட்டும் உலகின் வேறு எந்தப் பகுதிகளிலாகட்டும், பயணம் செல்லும் அரபு நாட்டைச் சார்ந்த ஒரு முஸ்லிமுக்கு, ஒரு முஸ்லிமுடைய தோற்றம் எவ்வாறு இருக்குமென ஒரு முன்மதிப்பீடு இருக்கும். அதற்கு நேர் மாற்றமாக இருப்பின் முஸ்லிம் அல்லவென்று கருதப்படுவது இயல்புதானே. இன்று கேரளாவையோ, தமிழ்நாட்டையோ சார்ந்த, உருதுமொழி …

Read More »

ஷபாஅத்தின் வகைகள்

ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து …

Read More »

எயிட்ஸுக்கு மருந்து!!!

ஹோமியோபதி மருந்துக்கும் அலோபதி மருந்துக்கும் என்ன வித்தியாசம்? அலோபதி மருந்துகள் நோயை விரைவாகக் குணப்படுத்துகின்றன. ஹோமியோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்த அலோபதி மருந்துகளை விட கொஞ்சம் அதிக காலம் எடுத்தும் கொண்டாலும் நோய்க்காரணிகளையும் அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன. சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சி சேனலில் எயிட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரத்தைக் காண நேர்ந்தது. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ, அத்தனை வகையிலும் விளம்பரப் படுத்துகிறார்கள். …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-9

தொடர்-9 தோப்பில் முஹம்மது மீரான் கற்பனையான பயண நூல்கள் சென்ற இதழில் சுலைமான் என்ற பாரசீக நாட்டு வர்த்தகர் எழுதிய சில்சிலத்து தவாரிக் என்ற நூலைக் பற்றி குறிப்பிட்டிருந்தோம். சுலைமானுடைய நூலில் அவருடைய சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி கி.பி. 851-க்கு முன் அரேபியர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்துள்ள தகவல்கள் முழுவதும் அதில் காணப்படுகின்றன. அதனாலேயே சில வரலாற்று அறிஞர்கள் சுலைமான் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை என்று ஊகிக்கின்றனர். (பயணிகளும் வரலாற்று …

Read More »