Featured Posts
Home » Tag Archives: சுவனப்பாதை மாதஇதழ் (page 2)

Tag Archives: சுவனப்பாதை மாதஇதழ்

[02] வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள். பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக் …

Read More »

[01] வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் …

Read More »

அழைப்பு பணியின் அவசியம்

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும்பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

Read More »

இஸ்லாமும் பாடல்களும்

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

Read More »

உங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்!

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58). பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு …

Read More »

வாழைப்பழம்

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே. நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை.

Read More »

உங்களுக்குத் தெரியுமா!

– பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம். – ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.

Read More »

உலக பொருளாதாரம்

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது. உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் …

Read More »

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

Read More »

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.

Read More »