Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் (page 13)

அறிவுரைகள்

புகை! உனக்குப் பகை!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.

Read More »

நயவஞ்சகம்.. .. அடையாளங்களும், விளைவுகளும்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அல்லாஹ் கூறுகின்றான் (நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.)

Read More »

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ 1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

Read More »

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.

Read More »

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.

Read More »

ஐந்து வருவதற்கு முன், ஐந்தை பயன் படுத்திக்கொள்வோம்

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: ஐந்து வருவதற்கு முன், ஐந்தை பயன் படுத்திக்கொள்வோம் வழங்குபவர்: மௌலவி அலி அக்பர் உமரீ நாள்: 06.05.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா Audio Download mp3 audio – Size: 29.6 MB

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-3)

– இஸ்மாயில் ஸலபி மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2)

Also visit இக்கட்டுரை தொடர்பான மற்றொரு பதிவு: பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்தற்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் பதில் – இஸ்மாயில் ஸஃலபி “குர்ஆன்-சுன்னா”வைப் பின்பற்று வதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உத்தமர்களான உலமாக்கள் மத்தியில் கூட மார்க்க விவகாரங்களில், குறிப்பாக “பிக்ஹு”த்துறையில் கருத்து பல்வேறுபட்ட வேறுபாடுகள் நிலவின. இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு சில நியாயமான காரணங்களும் இருந்தன. இவ்வகையில் …

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

– இஸ்மாயில் ஸலபி பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப் போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது. இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.

Read More »

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

– இஸ்மாயில் ஸலபி இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.

Read More »