Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு (page 10)

உங்கள் சிந்தனைக்கு

அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்! [உங்கள் சிந்தனைக்கு… – 011]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற …

Read More »

உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி? [உங்கள் சிந்தனைக்கு… – 010]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்! இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் …

Read More »

அசத்தியத்தில் பிடிவாதமும், அறியாமைக்கால மூடத்தன வைராக்கியமும் நேர்வழிக்குத் தடையாக இருக்கும் காரணிகளாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 009]

அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர் அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், ‘அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான வைராக்கியம்’ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி …

Read More »

சிறந்த சந்ததிக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாள்வோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 008]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “தனது சந்ததி, சிறந்த சந்ததியாக இருப்பதற்கான காரணிகளைச் செய்ய வேண்டியது மனிதனுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்விடத்தில் (அதற்காக) அவன் பிரார்த்தனை செய்தலாகும்! அக்காரணிகளில் இது மிகப்பெரியதுமாகும். தனது வாலிபத்தை முழுமையாக அடைந்த ஒருவன் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். ‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, என் …

Read More »

நாவின் விபரீதங்களை நம்மில் பலர் உணர்வதில்லை! [உங்கள் சிந்தனைக்கு… – 007]

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்ட விடயங்களில் பார்வையைச் செலுத்துதல் போன்ற இன்னோரன்ன தீய விடயங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு முடியுமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான விடயமாகும்!! மார்க்கம், …

Read More »

கல்வித் தேடலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியப் பேரறிஞருக்கு, அவர்களின் அன்புத் தாய் எழுதிய கடிதம்!

இஸ்லாமியப் பேரறிஞர், ‘ஷைகுல் இஸ்லாம்’ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் அவர், தாயை விட்டும் சில நாட்கள் தான் தூரமாகியிருப்பதற்காகவும், மார்க்க மற்றும் தஃவா விடயங்களுக்காக எகிப்தில் தங்க வேண்டியிருந்ததற்காகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு எழுதியிருந்தார். கடிதம் தாயை வந்தடைந்ததும் மகனுக்கு அந்தத் தாய் இப்படி பதில் எழுதினார்கள்: எனது அன்பு மகன் அஹ்மத் இப்னு தைமிய்யாவுக்கு ….! உன்மீது சாந்தியும், அல்லாஹ்வின் …

Read More »

சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]

முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் …

Read More »

அழுகின்றவனெல்லாம் அநீதியிழைக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 004]

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- நீதிபதி ஷுரைஹ் அவர்களிடம் அழுதவளாக ஒரு பெண்மணி வந்து மனிதர் ஒருவர் குறித்து முறைப்பாடு செய்தாள். அப்போது அங்கிருந்த இமாம் ஷஃபிb (ரஹ்) அவர்கள்: “உமைய்யாவின் தந்தை (ஷுரைஹ்) அவர்களே! இப்பெண் அநீதியிழைக்கப்பட்டுள்ளாள் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார். அப்போது நீதிபதி ஷுரைஹ் அவர்கள்: “ஷஃபிb அவர்களே! யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் இரவு நேரத்தில் அழுதுகொண்டுதான் தமது தந்தையிடம் வந்தார்கள்” எனப் பதிலளித்தார். …

Read More »

மனைவியின் குறைகளுக்காக மனதைக் குழப்பிக்கொள்ளாமல், அவர்களின் நிறைகளில் இன்பம் காணுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 003]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கென அல்லாஹ் விதித்திருக்கும் விடயங்களை எடுத்து நடப்பது கணவன்-மனைவி ஆகிய ஒவ்வொருவர் மீதும் அவசியமானதாகும். மனைவியை விட தானே உயர்ந்தவன் என்பதற்காகவோ, அவளின் விவகாரம் தன் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவோ அவள் மீது கணவன் ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறே மனைவியும் கணவனுக்கெதிராக உயர்வுபாராட்டி நடப்பதும் ஆகாது. மாறாக, அவ்விருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரோடு அழகிய முறையில் …

Read More »

இஸ்லாமிய ஆட்சியாளரை இறையச்சமும், மறுமைச் சிந்தனையும் வழிநடத்திச் சென்றது! [உங்கள் சிந்தனைக்கு… – 002]

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி “பாத்திமா பின்த் அப்துல் மலிக் (ரஹ்)” கூறுகின்றார்கள்:- “கலீபா உமரை விட அதிகமாகத் தொழுது, நோன்பு நோற்கக்கூடிய வேறொருவரையோ, அவரைவிட தனது இரட்சகனை அதிகம் அஞ்சி நடக்கும் வேறு எவரையோ நான் கண்டதில்லை! இஷாத் தொழுகையை அவர்கள் தொழுதுவிட்டு, அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும் வரை அழுதவர்களாகவே அமர்ந்துகொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு அவர்களின் கண்கள் இரண்டையும் …

Read More »