Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » கல்வித் தேடலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியப் பேரறிஞருக்கு, அவர்களின் அன்புத் தாய் எழுதிய கடிதம்!

கல்வித் தேடலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியப் பேரறிஞருக்கு, அவர்களின் அன்புத் தாய் எழுதிய கடிதம்!

இஸ்லாமியப் பேரறிஞர், ‘ஷைகுல் இஸ்லாம்’ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் அவர், தாயை விட்டும் சில நாட்கள் தான் தூரமாகியிருப்பதற்காகவும், மார்க்க மற்றும் தஃவா விடயங்களுக்காக எகிப்தில் தங்க வேண்டியிருந்ததற்காகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு எழுதியிருந்தார். கடிதம் தாயை வந்தடைந்ததும் மகனுக்கு அந்தத் தாய் இப்படி பதில் எழுதினார்கள்:

எனது அன்பு மகன் அஹ்மத் இப்னு தைமிய்யாவுக்கு ….!
உன்மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அவனது பரக்கத்துகளும், அவனது மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் உண்டாவதாக! அல்லாஹ் மீது ஆணையாக! இதுபோன்ற ஒன்றுக்காகத்தான் மகனே உன்னை நான் வளர்த்தேன்; இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ சேவை செய்ய வேண்டும் என்பதற்காக உன்னை நான் நேர்ச்சை செய்துவிட்டேன்; மார்க்க ஷரீஆத் சட்டங்களில் நீ கவனம் செலுத்த வேண்டும் என்று உனக்கு நான் கற்றுத் தந்துமுள்ளேன்!

அன்பு மகனே! பல பிரதேசங்களில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ செய்கின்ற சேவையை விடவும், உனது மார்க்கத்துடன் உனக்கிருக்கும் நெருக்கத்தை விடவும், எனக்கருகில் நீ இருப்பதுதான் எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது என்று மட்டும் நீ நினைத்து விடாதே!

எனினும் என் அன்பு மகனே! உன் மீதுள்ள எனது உச்சகட்ட திருப்தி, உனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நீ மேற்கொண்டு வருகின்ற உனது பணியின் அளவைப் பொறுத்துத்தான் அது இருக்கும்!

என் அன்பு மகனே! நாளை அல்லாஹ்வுக்கு முன்னால், என்னை விட்டும் தூரமாகியிருந்த உன்னைப் பற்றி நிச்சயமாக நான் கேட்கப்படமாட்டேன். ஏனெனில், நீ எங்கிருந்தாய்? என்ன விடயத்தில் இருந்தாய்? என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!

என் அன்பு மகனே! அல்லாஹ்வின் மார்க்கத்திற்கான சேவையில், உனது இஸ்லாமியச் சகோதரர்களில் அவனது மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கான பணியில் நீ குறைவு செய்திருந்தால் அதற்காக வேண்டி அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னைப்பற்றி நான் விசாரிக்கப்படுவேன்; வினவப்படுவேன்!!

அல்லாஹ் உன்னைப் பொருந்திக்கொள்வானாக! உனது விருப்பத்தையும், வீரத்தையும் நன்மையால் அல்லாஹ் ஒளிரூட்டுவானாக! உனது நகர்வுகளை அவன் பலப்படுத்துவானாக!!

— வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு….

{ நூல்: ‘மஜ்மூஉல் பfதாவா’, 28/48 }

أرسل شيخ الإسلام إبن تيمية رحمه الله رسالة لأمه، يعتذر لها فيها عن بعده عنها لأيام، وإقامته في مصر لبعض شؤون الدين والدعوة. فلما وصلتها الرسالة ردّت عليه أمه فقالت:-
[ ولدي الحبيب الرّضيّ / أحمد بن تيمية
وعليك السلام ورحمة الله وبركاته ومغفرته ورضوانه…
فإنه والله لمثل هذا ربّيتك، ولخدمة الإسلام والمسلمين نذرتك،وعلى شرائع الدين علمتك. ولا تظننن يا ولدي أن قربك مني أحب إلي من قربك من دينك، وخدمتك للإسلام والمسلمين في شتى الأمصار!
بل – ياولدي- إن غاية رضائي عليك لا يكون إلا بقدر ما تقدمه لدينك وللمسلمين.
وإني – يا ولدي – لن أسألك غدا أمام الله عن بعدك عني، لأني أعلم أين وفيم أنت، ولكن – يا أحمد – سأسألك أمام الله وأحاسبك إن قصرت في خدمة دين الله وخدمة أتباعه من إخوانك المسلمين، رضي الله عنك، وأنار بالخير دربك، وسدد خطاك ….
والسلام عليكم ورحمة الله وبركاته………
{ مجموع الفتاوى، ٢٨/ ٤٨ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *