Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அழுகின்றவனெல்லாம் அநீதியிழைக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 004]

அழுகின்றவனெல்லாம் அநீதியிழைக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 004]

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
நீதிபதி ஷுரைஹ் அவர்களிடம் அழுதவளாக ஒரு பெண்மணி வந்து மனிதர் ஒருவர் குறித்து முறைப்பாடு செய்தாள். அப்போது அங்கிருந்த இமாம் ஷஃபிb (ரஹ்) அவர்கள்: “உமைய்யாவின் தந்தை (ஷுரைஹ்) அவர்களே! இப்பெண் அநீதியிழைக்கப்பட்டுள்ளாள் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார். அப்போது நீதிபதி ஷுரைஹ் அவர்கள்: “ஷஃபிb அவர்களே! யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் இரவு நேரத்தில் அழுதுகொண்டுதான் தமது தந்தையிடம் வந்தார்கள்” எனப் பதிலளித்தார்.
{ நூல்: ‘அத்துருகுல் ஹுக்மிய்யா’ லிப்னில் கைய்யிம், 1/24 }

قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ خاصمت إمرأة رجلا عند شريح القاضي وهي تبكي! فقال الشعبي: يا أبا أمية! ما أظنها إلا مظلومة!.
فقال: يا شعبي! إن إخوة يوسف جاؤوا اباهم عشاءا يّبكون! ] { الطرق الحكمية لابن القيم، ١/٢٤ }

அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் அழுதவர்களாக தமது தந்தையிடம் இரவு வேளையில் வந்தார்கள். எமது தந்தையே! எமது பொருட்களிடம் யூசுபை விட்டு விட்டு நாம் ஓடி விளையாடி (வெகுதூரம்) சென்றுவிட்டோம். அப்போது ஓநாய் அவரைத் தின்றுவிட்டது. நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புபவராக இல்லை என்று கூறினா். மேலும் அவர்கள் அவரது சட்டையின் மீது பொய்யான இரத்தத்தை(த் தடவிக்கொண்டு) வந்தனர். (அதற்கு அவர்களது தந்தை), ‘இல்லை! உங்களின் உள்ளங்கள் ஏதோ ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காட்டிவிட்டன. எனவே, அழகிய பொறுமையே இதற்கு வழி. நீங்கள் வர்ணித்துக் கூறுபவற்றில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்’ என்று கூறினார்”

– அல்குர்ஆன், 12: 16-18

தமிழில்
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *