Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » ஸிராத்தைக் கடக்க சீரான அமல்கள் வேண்டும்

ஸிராத்தைக் கடக்க சீரான அமல்கள் வேண்டும்

இறை விசுவாசம், அமல்களில் தூய்மை போன்ற உள்ளத்தோடு தொடர்பான ஒரு முஸ்லிமின் செயற்பாடுகள் அவனது அமல்கள் அங்கீகரிக்கப்பட பிரதான வபகிப்பது போன்று அவனது நல்லரண்கள் அனைத்தும் அவன் சுவனம் பிரவேசிக்க காரணமாக அமைகின்றன.

ஒரு முஸ்லிமின் உலக செயற்பாடுகள் மறுமையில் சுவனத்திற்கும் நரகத்திற்கும் இடையில் நிறுவப்படும் ஸிராத் என்ற பயங்கரமான சோதனைக் கடவையை அவசர அவசரமாகக் கடந்து சுவனத்தில் பிரவேசிக்கவும் , அல்லது நரகில் வீழ்ந்திடவும் காரணமாக அமைகின்றன என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். அது பற்றி இங்கு சுருக்கமாக கவினிப்போம்.

ஸிராத் என்றால் என்ன ?
மீஸான் ( அமல்கள் நிறுக்கப்படும் தராசு), முனாஜாத் (திரைமறைவில் உரையாடுதல்),  அல்கவ்ஸர் (அல்கௌஸர் நீர் தடாகம்), ஷஃபாஅத் (பரிந்துரை) போன்ற மறுமை நாளின் நிகழ்வுகளில் ஒன்றாக சத்திய ஸிராத் என்ற பாலக் கடவை நிகழ்வும் இடம் பெற்றுள்ளது.

இது மறுமையில் சுவனம் செல்லும் அடியார்கள் அனைவரும் கடக்க வேண்டி அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் முக்கிய கடவையாகும்.

ஸிராத் என்ற பாலத்தின் மீது கடந்து செல்வது மறுமையில் ஒரு நிகழ்வாக இருப்பினும் அது இந்த உலகில் ஒரு முஸ்லிமின் மேற்கொண்ட அறுவடையின் பயனை முடிவு செய்யும் முக்கிய ஒரு நிலையமாகும் .

மறுமை நாளில் இதயங்கள் நடுங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகவும் அதனைப் பார்க்க முடியும். الله أعلم

ஸிராத் صراط என்பதன் பொருள் என்ன?
ஸிராத் صراط என்ற அரபு வார்த்தை மொழி அடிப்படையில் பாதை, வழி, வழிமுறை போன்ற கருத்துக்களை அறிவிக்கின்றது.

ஷரீஆவின் அடிப்படையில்:
ஸிராத் என்பது மறுமையில் அல்லாஹ்வின் அடியார்கள் கடந்து சுவனம் செல்ல நரகின் மேல் நிறுவப்படவிருக்கும் ஒரு பரிசோதனைப் பாலத்தைக் குறிக்கும்.

இதனை விளக்கும் சொற்களாக ஸிராத்,صراط ஜிஸ்ர்جسر போன்ற சொற்பிரயோகங்கள் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. அவை பாலம், பாதை போன்ற பொருள் கொள்ளப்படும்.  அதன் பருமன், பிரமாண அளவு பற்றி அல்லாஹ்வே அறிவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

அந்தப் பாலத்தை நபிமார்கள், நல்லடியார்கள், பாவிகளான முஸ்லிம்கள் என அனைவரும் கடக்க வேண்டும். நபிமார்கள், நல்லவர்கள் அதைக் கடப்பார்கள் , ஆனால், பாவிகளான முஃமின்கள் அதில் வீழ்ந்து விடுவார்கள் என அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.

காபிர்கள் அதைக் கடப்பதில்லை. மாற்றமாக, அவர்கள் நரகுக்குப் பொறுப்பான வானவர்களால் கதறக் கதற நரகின் பக்கமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டு நரகில் தள்ளப்படுவார்கள் என்று அஷ்ஷைக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
نعوذ بالله من عذاب جهنم
குர்ஆன் வசனம் பொதுவாக மனிதர்கள் அனைவரையும் சுட்டி நிற்பதோடு முஸ்லிம்களில் உள்ள பாவிகள் மற்றும் காபிர்களில் உள்ள அநியாயக்காரர்கள் என்போர் அதைக் கடக்க முடியாத வாறு வீழ்ந்திடுவர் என்ற இருத்தை முன்வைக்கின்றது. (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்).

ஸிராத் பாலத்தை நம்ப மறுக்கும் முஃதஸிலாக்கள்
ஸிராத் பாலம் முடியை விட சிறியதும், வாளைவிடக் கூர்மையானது போன்ற வாசகங்களைக் கருத்தில் கொண்டு அது அசாத்தியமாது முஃதஸிலாக்கள் வாதிடுவதோடு அதை மறுக்கவும் செய்கின்றனர்.

மறுமை நாளில் நடை பெறவிருக்கும் வஹியோடும், நம்பிக்டனகையோடும் தொடர்பான இவ்வாறான அம்சங்கள் பற்றி ஒரு முஸ்லிம் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்? என்பதை விளக்கும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தி உள்ளார்கள்:

وقال: “اعلم أن أهل الحق نابذوا المعتزلة وخالفوهم، واتبعوا السمعَ والشرع، وأثبتوا الرؤيةَ والنظر، وأثبتوا الصراط والميزان، وعذاب القبر، ومسألة منكر ونكير، والمعراج والحوض، واشتد نكيرُهم على من يُنسب إلى إنكار مأثور الأخبار، والمستفيض من الآثار، في هذه القواعد والعقائد” ((شيخ الإسلام ابن تيمية[17] في “إقامة الدليل على إبطال التحليل” (ص: 140):

அறிந்து கொள்! சத்தி வழியில் இருப்போர் (ஸலஃப்கள்) இந்த விஷயத்தில் முஃதஸிலாக்களை புறம் தள்ளி, அவர்களுக்கு முரண்பட்டுள்ளனர். மார்க்கத்தில் வந்திருப்பதையும், (ஸிராத்தை நம்பி), ஷரீஅத்தையும் நிலை நிறுத்தி உள்ளனர். மறுமை நாளில் அல்லாஹ்வை நேயடியாகப் பார்ப்பதையும் காண்பதைமும் நிலைப்படுத்தி உள்ளனர். அஸ்ஸிராத், மற்றும் மீஸான் -தராசு- மண்ணறை வேதனை, முன்கர், நகீரின் கேள்வி, மிஃராஜ், ஹவ்லுல் கௌஸர் என அனைத்தையும் நிலைப்படுத்தி உள்ளனர். ஆணித்தரமான, அடிப்படைகள் தொடர்பாக பரந்துபட்ட அளவில் அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து வந்த செய்திகளை மறுப்போர் மீது அவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது (இமாம் இப்னு தைமிய்யா ரஹ்)

ஸிராத் பாலம் தொடர்பான மேற்படி செய்தி இமாம்களின் ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான பல அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. எனவே சாத்தியமற்றது என்ற குறுகிய கோட்பாட்டின் அடிப்படையில் அதனை மறுப்பது குஃப்ர் ஆகும்.

ஸிராத் பற்றிய குர்ஆன் ஹதீஸ் குறிப்புக்கள்

ஸிராத் என்ற பாலம் நரகின் இரு மேல் பகுதியின் மீதும் நிறுவப்படும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி/ 7437)

நரகின் மீது நிறுவப்படும் ஸிராத் பாலம் பற்றி வருகின்ற “நீங்கள் அனைவரும் அதனைக் கடக்க வர வேண்டியவர்களே! (மர்யம்- 71)” என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பித்த போது இந்தப் பயங்கர நிகழ்வை நபிமார்கள், நல்லடியார்கள், முஃமின்கள், முஸ்லிம்கள் என அனைவரும் முகம் கொடுக்க நேரிடுகின்றதே என நபித்தோழர்கள் நீங்கள் அனைவரும் அதனைக் கடக்க வரக்கூடியவர்களே! அது உமது இரட்சகன் விதித்த கட்டாய விதிகளில் உள்ளதாக இருக்கின்றது (மர்யம்- 71) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்த பின்னர் , எவர்கள் இறையச்சத்தோடு வாழ்ந்தார்களோ அவர்களை நாம் பாதுகாப்போம், அநியாயக்காரர்களை (இணைவைப்பாளர்களை) முழந்தாளிட்டவர்டளாக அதில் விழ நாம் விட்டு விடுவோம் (மர்யம் 72) என்ற குர்ஆன் வசனத்தை நபி ஸல் அவர்கள் விளக்கமாக ஓதிக் காண்பித்தார்கள் என நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)

இது பற்றி நபி ஸல் அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்.

فيضرب الصراط بين ظهراني جهنم، فأكون أول من يجوز من الرسل بأمته، ولا يتكلم يومئذ أحد إلا الرسل، وكلام الرسل يومئذ: اللهم سلم سلم، وفي جهنم كلاليب [ص: ١٦١] مثل شوك السعدان، هل رأيتم شوك السعدان؟ ” قالوا: نعم، قال: ” فإنها مثل شوك السعدان غير أنه لا يعلم قدر عظمها إلا الله، تخطف الناس بأعمالهم، فمنهم من يوبق بعمله، ومنهم من يخردل ثم ينجو

ஸிராத் என்ற பாலம் நரகின் இரு மேல் பகுதியின் மீதும் நிறுவப்படும் தூதர்களில் தனது உம்மத்தோடு முதலாவது கடப்பவன் நானே! அப்போது அங்கு தூதர்களைத் தவிர வேறு யாரும் பேசமாட்டார்கள். அல்லாஹ்வே! காப்பாற்றி விடுவாயாக! அல்லாஹ்வே! காப்பாற்றி விடுவாயாக! என்பதுதான் அந்த தூதர்களின் பேச்சாகும்.நகரத்தில் ஸஃதான் என்று கூறப்படும் பாலை வன முள் ளஃபோன்ற அறைப்பில் பல கொழுக்கிகள் காணப்படும். ஸஃதான் என்ற முள் மரத்தை நீங்கள் பார்தத்துண்டா? எனக் கேட்ட போது அவர்கள் ஆம். பார்த்துள்ளோம் எனக் கூறிவிட்டும், தொடரும் போது ஆம். அந்த ஸஃதான் முள் மரத்தைப் போன்றுதான் அவை காணப்படும் எனக் விளக்கியதோடு, அதன் அளவு பற்றி அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்து முடியாது. மனிதர்களை அவர்களின் செயல்களுக்கு அமைவாக அது அவர்களைக் கவ்விப்பிடிக்கும்.சிலர் தமது செயல்களால் நரகில் முழ்கடிக்கப்படுவர். இன்னும் சிலர் தவழ்ந்து சென்று ஈடேற்றம் பெறுவர் எனக் கூறினார்கள் (புகாரி)

நபி ஸல் அவர்களிடம் ஜிஸ்ர் எனப்படும் பாலம் என்றால் என்ன என வினவப்பட்ட போது,

وما الجسر؟ قال: ” دحض مزلة، فيه خطاطيف وكلاليب وحسك تكون بنجد فيها شويكة يقال لها السعدان، فيمر المؤمنون كطرف العين، وكالبرق، وكالريح، وكالطير، وكأجاويد الخيل والركاب، فناج مسلم، ومخدوش مرسل، ومكدوس في نار جهنم، (أخرجه الإمام مسلم في صحيحه)

பாதங்கள் நிலைபெறாது சறுகும் தளமாகும் . அதில் மனிதர்களை கவ்விக் கொள்ளும் கருவிகளும் , இரும்பாலான முள் அமைப்பிலான கப்பிகளும் உண்டு. மேலும் நஜ்த் பிரதேசத்தில் காணப்படும் ஷவ்கான் முள் மரம் போன்ற அமைப்பில் முட்கம்பிகளும் உண்டு. முஃமின்கள் அனைவரும் அதற்கு மேலால் கடந்து செல்வர். கண்ணிமைக்கும் நொடிப்பொழுது, மின்வெட்டுவது, காற்றுவீசுவது, பறவை பறப்பது, சிறந்த சவாரிக் குதிரைகள் ஓட்ட வேகம் , சவாரி ஒட்டகைகைகள் போன்றவற்றின் வேக அளவில் அதைக் கடப்பர். அப்போது பாதுகாப்பாக , ஈடேற்றம் பெறுவோரும் இருப்பர், உடல் கிழிக்கப்பட்ட படி தப்பிப் போரும் இருப்பர், நகரத்தில் இழுபட சுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவோரும் ,(நரகவாதிகள் மீது ) தள்ளிவிடப்படுபவரும் என பல வகையான மனிதர்கள் ) இருப்பர் என நபி ஸல் அவர்கள் விளக்கமளித்தார்கள் (முஸ்லிம்).

முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பில்,

.. تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ وَنَبِيُّكُمْ قَائِمٌ عَلَى الصِّرَاطِ يَقُولُ: رَبِّ سَلِّمْ سَلِّمْ. حَتَّى تَعْجِزَ أَعْمَالُ الْعِبَادِ، حَتَّى يَجِيءَ الرَّجُلُ فَلاَ يَسْتَطِيعُ السَّيْرَ إِلاَّ زَحْفًا، قَالَ: وَفِي حَافَتَيِ الصِّرَاطِ كَلاَلِيبُ مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ بِأَخْذِ مَنِ اُمِرَتْ بِهِ، فَمَخْدُوشٌ نَاجٍ، وَمَكْدُوسٌ فِي النَّارِ) رواه مسلم

அடியார்களை அவர்களின் வினைச் செயல்கள் ஸிராத் பாலத்தில் நடத்திச் செல்லும், உங்கள் நபி ஸிராதின் மீது நின்றவாறு رَبِّ سَلِّمْ سَلِّمْ அல்லாஹ்வே காப்பாற்று! அல்லாஹ்வே காப்பாற்று! என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார், ஸிராதின் இரு ஓரங்களிலும் மனிதர்களைக் கொழுவி இழுக்கும் முள் வடிவிலான கொழுக்கிகள் கொழுவப்பட்டிருக்கும். அவை யாரை கவ்விக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றன. அப்போது தெய்வாதீனமாகத் தப்பிப்போரும் உள்ளனர், நகரில் வீசப்படுவோர் உள்ளனர் என நபி ஸல் அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. (முஸ்லிம்)

நரகின் மீது அமைக்கப்படவிருக்கும் ஸிராத் தொடர்பான நம்பிக்கை பற்றிய அவசியத்தை இந்த நபிமொழிகள் போதிக்கின்றன.

ஸிராத்தைக் கடந்து சுவனத்தை அடைவது நமது செயற்பாடுகளைக் கொண்டே தீர்மானிக்கப்படும். எனவே நமது செயற்பாடுகள் தொடர்பாக நாம் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் தமது நன்மை தீமைச் செயல்களின் சுமைகளை அவர்களின் தோழ்களில் சுமந்த நிலையிலேயே குறித்த பாதையைக் கடக்க வேண்டும்.

அவ்வாறு கடக்கின்ற போது இந்த உலகில் அவர்கள் தேடிக் கொண்ட அளவு அவர்களின் வேகம் அதிகரிக்கும் அல்லது தாமதிக்கும் என்ற உண்மை நமது வாழ்வில் நன்மையின் பகுதியை அதிகரிக்க வேண்டிய தைவையை உணர்த்துகின்றது . (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
الله اعلم

நாமே நம்மை அடகு வைத்துள்ளோம். நமது மீட்சி நம் கைகளில் தரப்பட்டுள்ளன.

நமது செயல்களின் அதிகாரிகள் நாமே! நமது செயற்பாடுகளே மறுமையின் நமது சுமைகளாகும். அவற்றை நாமே அல்லாஹ்வின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.

كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِين [الطور: 21]

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவைகளைக் கொண்டு (நரகில்) கட்டப்பட்டுள்ளான். (அத்தூர்- 21)

كل نفس بما كسبت كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ (-) إِلَّا أَصْحَابَ الْيَمِين (المدثر / ٣٨-٣٩)

ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம்பாதித்தவைகளைக் கொண்டு தன்னை (விடுவிக்க நரகில்) கட்டிவைக்கப்பட்டுள்ளது. வலது சாரியினரைத் தவிர (அல்முத்தஸ்ஸிர் : 38-39)

{لها ما كسبت وعليها ما اكتسبت} (البقرة:286)

அந்த ஆத்மா தனக்காகத் தேடிக் கொண்டதும் தனக்கெதிராகத் தேடிக் கொண்டதும், அதற்குரியதே! ( அல்பகரா : 286)

إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَىٰ (طه/ 15)

நிச்சயமாக மறுமை என்பது வரக்கூடியதே! அதை நான் மறைத்துக் கொள்ள எத்தணிக்டின்றேன். ஒவ்வொரு ஆத்மாவும் தான் தேடிக் கொள்பவற்றிற்கு கூலி வழங்குவதற்காக (கேள்வி கணக்கு தொடக்கப்படும்) .

ஒரு மனிதன் செய்கின்ற நன்மை தீமைகளுக்கு அவன் பொறுப்பாளனாக ஆக்கப்படுவதோடு, பிறரை அவன் வழிகெடுக்காத வரை பிறரின் பாவத்திற்கு அவன் பொறுப்பாளி கிடையாது.

{ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى} (الأنعام:164)

எல்லா ஆண்மாவும் அதற்குரிய பாவங்கள் மீதே அன்றி கூலி வழங்கப்படுவதில்லை. பாவம் செய்த ஒரு ஆத்மா இன்னோரு பாவியான ஆத்மாவின் பாவத்தை  சுமக்கமாட்டாது. (அல்அன்ஆம் -164)

இருப்பினும் ஒரு மனிதனை வழிகெடுப்பவன் அவனது பாவங்களைச் சுமந்தே ஆகவேண்டும் என்பதுயதரர அல்லாஹ்வின் நியதிமாகும்.

{ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم} (النحل:25)

மறுமை நாளில் தமது பாவங்களையும் , அறிவின்றி அவர்கள் யாரை வழிகெடுத்தார்களோ அவர்களின் பாவங்களையும் அவர்கள் முழுமையாக சுமக்கவும் (இந்த வழிமுறை அமுலாகும்) (அந்நஹ்ல் – 25)

நயவஞ்கர்களான முனாஃபிக்கள் சாமானிய மக்களிடம் நீங்கள் இஸ்லாத்தை தழுவாதீர்கள், உங்கள் பிழைகளை மறுமையில் நாம் சுமந்து உங்களைப் பொறுப்பேற்கின்றோம் என்று கூறியதை மறுத்த குர்ஆன் அவர்கள் மற்றவரின் எந்தப் பாவங்களையும் சுமக்க மாட்டார்கள் மட்டுமல்ல ,

وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ ۖ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ ( العنكبوت / ١٣)

நிச்சயமாக அவர்கள் தமது சுமைகளைச் சுமப்பதோடு, அவர்களின் சுமைகளோடு (மற்றவர்களின்) சுமைகளையும் சேர்த்தே சுமப்பார்கள்
அல்அன்கபூத்- 23) என அல்குர்ஆன் முனாபிக்களின் நிலைப்பாட்டை மறுக்கின்ற செய்தியானது பிறரால் வழிகெட்டவர்களும் தமது பாவங்களோடு வருவதோடு, பிறரை வழிகெடுப்போர் மறுமையில் தமது பாவச் சுமைகளோடும் , மற்றவர்களின் பாவங்களோடும் சுமந்து வர வேண்டும் என்பதையும் விளக்கி இருப்பதைக் கவனிக்க முடிகின்றது.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *