Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » ஸஹாபாக்கள் குஃப்ர் செய்தார்கள் என கூறும் வழிகேடர் பீ.ஜே.

ஸஹாபாக்கள் குஃப்ர் செய்தார்கள் என கூறும் வழிகேடர் பீ.ஜே.

ஸஹாபாக்கள் குறித்த தனது நிலைபாடு என்ன என்ற தலைப்பில் பீ.ஜே. என்பவர் சில நாட்களுக்கு முன்பு பேசினார். அதில்

لاَ تَرْجِعُوا بَعْدِى كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக மாறி விடாதீர்கள் (நூல் புகாரி – 121)

நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை மீறி ஸஹாபாக்கள் ஜமல் மற்றும் ஸிஃப்பின் யுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டார்கள்.
ஸஹாபாக்கள் குஃப்ரை செய்தார்கள் என்கிறார்.

பீ.ஜெவின் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதற்கு முன்பு இரண்டு கேள்விகளை அவரிடத்தில் வைக்கின்றோம்.

கேள்வி 1: ஸஹாபாக்கள் போரில் ஈடுபட்டு குஃப்ரான காரியத்தை செய்தார்கள் என்று கூறுகிறீர்கள். தொடர்ந்து பேசும் போது ஸஹாபாக்களின் தியாகத்திற்காக வேண்டி அவர்களை அல்லாஹ் மன்னிப்பான் என்றும் கூறுகிறீர்கள்.

அப்படியென்றால் குஃப்ரான காரியத்தை செய்துவிட்டு நிறைய தியாகம் செய்தால் அல்லாஹ் மன்னித்து விடுவானா?

குஃப்ரான காரியத்தை செய்து விட்டு நிறைய தியாகம் செய்தால் மன்னிப்பு என்பது வெறும் ஸஹாபாக்களுக்கு மட்டும் தானா?
அல்லது எல்லா மனிதர்களுக்குமா?

கேள்வி 2: ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக மாறி விடாதீர்கள் என்ற ஹதீஸ் போர் செய்வதை குஃப்ர் என்கிறது. ஆனால் அல்லாஹ் அல்குர்ஆனில் போர் செய்பவர்களை முஃமின்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கின்றான்.

وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். (49: 9)

இந்த ஹதீஸ் அல்குர்ஆனின் வசனத்திற்கு முரணாக இருப்பது போல் பீ.ஜெவிற்கு தெரியவில்லையா?

இந்த ஹதீஸை ஏன் பீ.ஜெ மறுக்கவில்லை?

ஸஹாபாக்களை இழிவுப்படுத்துவதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாக ஆக்கிக் கொண்டதினால் மறுக்க தோணவில்லையா?

குற்றச்சாட்டிற்கான பதில்கள்:

  1. போர் புரிவது, கொலை செய்வது குஃப்ர் (இறைநிராகரிப்பு) ஆகும் என்பது கவாரிஜ்களின் கொள்கையாகும். போர் புரிவது, கொலை செய்வது போன்ற பாவங்கள் குஃப்ர் ஆகாது என்பதே அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கையாகும்.
  2. ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக மாறி விடாதீர்கள் என்ற நபி ஸல் அவர்களின் கூற்றில் குஃப்ர் என்பது நேரடியான குஃப்ரை குறிக்கவில்லை. மாறாக அல்லாஹ்விற்கு மாறு செய்வது என்ற பொருளில் தான் கூறப்பட்டுள்ளது. இதனையே (كفر دون كفر) இறைநிராகரிப்பு அல்லாத குஃப்ர் என கூறுவார்கள்.

உதாரணத்திற்கு அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பதற்கு கூட குஃப்ர் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ

மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தார்கள் (16: 112)

இந்த வசனத்தில் (فكفرت) குஃப்ர் – நிராகரிப்பு என்பது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் இருப்பதற்கு கூறப்பட்டுள்ளது.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اثْنَتَانِ فِى النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِى النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், மனிதர்களிடம் உள்ள இரண்டு காரியங்கள் குஃப்ர் ஆகும். பரம்பரையில் குறை கூறுவதும், மரணித்தவருக்காக ஒப்பாரி வைப்பதும் என்றார்கள். (நூல் முஸ்லிம்)

பரம்பரையில் குறைகூறுவது, ஒப்பாரி வைப்பது என்ற காரியத்தை ஒருவர் செய்து விட்டால் குஃப்ர் என கூறப்பட்டுள்ளது. இந்த காரியத்தை செய்பவர்கள் பீ.ஜெவிடம் காஃபிர் ஆகிவிடுவார்களா?

இந்த ஹதீஸில் குஃப்ர் என்பது நேரடியான குஃப்ரை குறிக்கவில்லை. அல்லாஹ்விற்கு மாறு செய்கிறார்கள் என்ற பொருளிலேயே கூறப்பட்டுள்ளது என்பதே அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கையாகும்.

3.போரில் ஈடுபடுபவர்களை அல்லாஹ் முஃமின்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கின்றான்.

وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். (49 9)

எனவே போர் செய்வதினால் ஒருவர் காஃபிர் ஆகி விட மாட்டார் என்பதை அல்லாஹ்வே கூறுகின்றான். ஆனால் பீ.ஜெ இது தெரியாமல் அவர்களை காஃபிர் என்கிறார்.

4. போர் செய்வதற்காக வந்த முஅவியா ரலி மற்றும் ஹசன் ரலி அவர்களின் இரு படைகள் குறித்து நபி ஸல் அவர்கள் செய்த முன்னறிவிப்பில் முஸ்லிம்களில் இரண்டு பெரும் கூட்டத்தார்கள் என்றார்கள். போரில் ஈடுபடுவதற்காக சென்றவர்களை நபி ஸல் அவர்கள் முஸ்லிம்கள் என்று கூறியுள்ளார்கள்.

إِنَّ ابْنِى هَذَا سَيِّدٌ ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ஹசன் ரலி அவர்களை பார்த்து கூறினார்கள், ‘இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்’ என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்’ என்று அபூ பக்ரா(ரலி) கூறினார்கள். (நூல் புகாரி – 2704)

எனவே போரில் ஈடுபடுவது குஃப்ர் ஆகாது என்பதை இந்த ஹதீஸிலிருந்தும் அறியலாம்.

5. ஜமல் மற்றும் ஸிஃப்பின் போரில் எவ்வளவு ஸஹாபாக்கள் கலந்துக் கொண்டார்கள் என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

عن محمد بن سيرين قال هاجت الفتنة وأصحاب رسول الله عشرة الاف فما حضر فيها مائة بل لم يبلغوا ثلاثين

முஹம்மத் பின் ஸீரின் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், போரினால் குழப்பங்கள் வந்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் இருந்தார்கள். எனினும் அந்த போர்களில் நூறு என்ற எண்ணிக்கையில் கூட (ஸஹாபாக்கள்) கலந்துக் கொள்ளவில்லை. முப்பத்தை கூட தொடவில்லை என்கிறார்கள். ( நூல் இமாம் அஹமத் பின் ஹம்பல் ரஹ் வின் அல்இலல் வ மஅரிஃபத்து ரிஜால்)

6. இமாம் குர்தபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த போரில் எந்த ஒருவரை குறித்தும் உறுதியாக இவரிடமிருந்து தான் தவறு நடந்தது என்று கூறக் கூடாது. அல்லாஹ் நாடியது தான் அவர்களுக்கு மத்தியில் நடந்தது. அவர்கள் செய்த காரியம் அவர்களின் இஜ்திஹாத் என்னும் ஆய்வினால் ஏற்பட்டதாகும். அந்த ஸஹாபாக்கள் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்.

எனவே அவர்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவுகளை பற்றி பேசுவதை விட்டு நம்மை தடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை பற்றி நல்லதை மட்டுமே நாம் பேச வேண்டும். அவர்கள் நபியின் தோழர்களாக இருக்கின்றனர், அவர்களை ஏசுவதை நபி ஸல் அவர்கள் தடுத்துள்ளார்கள், அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். மேலும் அவர்களை பொருந்திக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான் (நூல்: தஃப்ஸிர் அல்குர்துபி 16ஃ321)

இறுதியாக ஸஹாபாக்கள் குஃப்ரான காரியத்தை செய்தார்கள் என்பதெல்லாம் ஷியாக்களின் நச்சுக் கருத்தாகும். அதனை தான் பீ.ஜெ மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார். எனவே இந்த வழிகேடரின் பேச்சை கேட்பது குஃப்ரிலும், வழிகேட்டிலும் தான் மக்களை தள்ளும். எனவே இந்த வழிகேடரை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! அத்தகைய மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!

ஆக்கம்: ஹசன் அலி உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *