Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 5

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 5


எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)

கொடிய வைரஸ்கள் வரக்காரணமான மனித செயற்பாடுகள்…

கொரோனா என்ற கொடிய வைரஸ் தொடர்பாக இஸ்லாம் காட்டித் தருகின்ற வழிமுறைகள் மற்றும் கற்றுத் தருகின்ற பாடங்கள் என்ற தலைப்பில் நான்கு தொடர்களை நாம் முன்வைத்து, தற்போது ஐந்தாவது தொடரில் கால்பதித்திருக்கின்றோம்.
الحمد لله

அந்த வரிசையில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் அடிப்படையில் இறை நாட்டமாக இருந்தாலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போன்று இஸ்ரவேலர்கள் மீது இறங்கிய கொளரா மற்றும் பிளேக் போன்று (corona)வும் ஒத்ததாக இருப்பதால் அது இறை தண்டனையின் வரிசையில் பார்க்கப்பட்டு, அதற்கான காரணமும் கண்டறியப்படல் வேண்டும்.

ஈருலக இரட்சகனும் ஆட்சியாளானுமாகிய கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வை மனிதர்கள் மறுத்து, அவன் ஏற்படுத்திய மரணத்தின் பின்னால் உள்ள நிரந்தர வாழ்வை நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பின் உச்சத்தில் வாழ்வதும் இது போன்ற தண்டனைகள் வர 100% காரணமாக இருக்கலாம் போன்ற கருத்தாடல்கள் முன்னைய தொடர்களில் முன்வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பின்வரும் காரணங்கள் என நாம் காண்கின்ற முக்கிய சில காரணிகள் பற்றி இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.

((1)) மனிதன் இலக்குத் தவறும் போது :

மனிதர்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட பலவீனமான அடியார்களாகும். அவர்கள் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து, முரண்பாடுகளின் மொத்த வடிவமான மத சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் போன்ற மனித சிந்தனைகளின் வெளிப்படாகக் காணப்படுகின்ற வெற்றுக் கோஷங்களால் மனித மிருகங்களாக மாற்றப்பட்டு, மறுமை வாழ்வில் இலட்சியம் அற்ற கால்நடைகளாக அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இறை கோபத்திற்கு மீண்டும் மீண்டும் இலக்காகும் போது எதிர் காலங்களில் இதைவிடவும் கொடிய வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட 100% வாய்ப்புக்கள் அதிகம் என்பதே இறைவேதமான புனித குர்ஆனும் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையாகும்.

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَٰكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ. (المؤمنون – 115).

“நீங்கள் வீணுக்காப் படைக்கப்பட்டதாகவும், நீங்கள் நம் பக்கம் (மறுமை நாளில்) மீளமாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டீர்களா?”
(அல்முஃமினூன் : 115)

என அல்லாஹ் கேட்பதன் இரகசியமும் இதுவாகும்.

எனவே, மனிதன் இங்கு வீணாகப் படைக்கப்படவே இல்லை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.

((2)) அல்லாஹ்வின் பூமியில் அழிச்சாட்டியம் புரிவது

சூரியக் குடும்பத்தின் முக்கிய கோளான பூமியில் மாத்திரமே உயிரினங்கள் வாழ முடியும். வேறு கிரகங்களில் வாழ்வதற்கான எந்த வசதிகளையும் பூமியின் இரட்சகனாகிய அல்லாஹ் வைக்கவில்லை.

இந்த பூமியில் மனிதன் வாழ்வதை நிரந்தர உரிமைச் சொத்தாக்கவும் முடியாது. இதில் பல சந்ததிகள் தோன்றி மரணித்தது போன்று மனிதர்களாகிய நாமும் வாழ்ந்த பின் மரணிக்க வேண்டும். மரணத்தின் பின் அனைவரும் அல்லாஹ்வின் விசாரணை மன்றில் ஒரு நாள் ஆஜர்படுத்தப்படுவோம். எனவே அதற்கு தயாராகவே இங்கு சில காலங்கள் வாழ வழி செய்து தரப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி, பூமி பல்லாயிரம் ஜீவிராசிகளின் சரணாலயமாகும். பூமியைப் படைத்த அல்லாஹ் அதனை அவ்வாறுதான் ஆக்கி வைத்துள்ளான்.

எனவே இங்கு வாழக் கூடிய அனைத்து உயிரனங்களுக்கும் இதில் சுதந்திரமாக வாழும் உரிமை பெற்றுள்ளன. ஏனெனில் அவை எதுவும் அல்லாஹ்வால் வீணாகப் படைக்கப்படவில்லை.

காடுகளை எரிப்பதும் புவியை வெப்படமடையச் செய்வதும் பறவைகள் மற்றும் ஏனைய மிருகங்களின் வாழ்வதற்கான உரிமைகளை பறிப்பதும் உலகில் எவ்வாறு குற்றமாக நோக்கப்படுமோ அதை விடப் பன்மடங்கு குற்றமாக அல்லாஹ்வின் பூமியில் செய்யப்படுகின்ற இறை நிராகரிப்பும் அதனோடு தொடர்புடைய அவனுக்கு நிகராக செய்யப்படுகின்ற இணைவைப்புக்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் பார்க்கப்படுகின்றன.

لِلهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ (البقرة / ٢٨٤)

“வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அல்லாஹ்வுக்குரியவையாகும்.” (அல்பகரா : 284)

அதாவது இந்த உலகின் அதிபதி அல்லாஹ்வே, அவனை அன்றி வணங்கி வழிபடத் தகுதியானவர்கள் இந்த பூமியில் கிடையவே கிடையாது. அவன் இவ்வுலகில் மனித மேம்பாட்டிற்காக பல நூறு தூதர்களை அனுப்பி இது பற்றி தெளிவு படுத்தியது போன்று இறுதி இறைத் தூதராக எழுதவோ, வாசிக்கவோ தெரியாத சிறந்த முன்மாதிரி, நம்பிக்கையாளர் என மக்காவாழ் மக்களால் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆன் என்ற புனித வேதத்தைக் கொடுத்து வழிகாட்டினான்.

குர்ஆனில் என்ன இருக்கின்றது?

குர்ஆனைப் படியுங்கள், குர்ஆனைப் படியுங்கள், என்கிறீர்களே! அதில் அப்படி என்னதான் இருக்கின்றது? என கேட்போருக்கு அதைப் படியுங்கள் என்பதே முதலாவது பதிலாகும்.

ஏனெனில் அல்லாஹ் அதில் மனித சமூகத்திற்கு அடிப்படையான அனைத்து விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி இருப்பதுடன், அதன் சட்டமே எல்லாக் காலத்திற்கும் மனித குலத்திற்கு 100% வீதம் உகந்தது என்றும், அது உலக மக்களின் பொதுமறை என்றும் அறிவித்துள்ளான்.

الم (1) ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ (البقرة/ 2)

“அலிஃப், லாம், மீம். இவ்வேதத்தில் எவ்வித சந்தேகமும் கிடையாது. (அது) இறையச்சமுள்ளோருக்கு நேர் வழிகாட்டியாகும்.” (அல்பகரா : 1-2)

எனக் கூறி மனிதர்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒரு வேத நூல் இருக்குமானால் புனித குர்ஆன் மாத்திரமே உண்டு.
அது முதலாவதாக இறங்கிய போதே,

هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ[البقرة/ ١٨٥]

“(இவ்வேதம்), மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாவும் நேர்வழி மற்றும் சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டும் அத்தாட்சிகளும் (இதில்) உண்டு.” (அல்பகரா : 57)

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى ٱلصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ. (يونس – 57)

“மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், உள்ளங்களில் உள(நோய்களுக்கு) நிவாரணியும் இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளும் நிச்சயமாக வந்து விட்டது.” (யூனுஸ் : 57).

ஆம். இது மனிதர்களை நல்வழிக்கே கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் நூல்

இவ்வேதம் இறை வைதமாகும். இது முஹம்மது நபி அவர்கள் தனது சுய சிந்தனையில் இருந்து எழுதிய வேத நூல் கிடையாது. மாறாக மனிதர்களைப் படைத்த அல்லாஹ் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் கால, நேர, சந்தர்ப்ப சூழல்களுக்கு அமைவாக சிறுகச் சிறுக இறக்கி வைத்த போதனைகளாகும்.

பொதுவாக இஸ்லாம் அல்லாத மதக் கோட்பாட்டு நூல்களில் காணப்படுகின்ற மூடநம்பிக்கைகளை மனித பகுத்தறிவு ஏற்க மறுப்பதை அடிப்படையாகக் கொண்டு புனித குர்ஆனும் – இஸ்லாம் மதம் சார்ந்ததாக இருப்பதால் அதைப் பற்றிய எவ்வித அறிவுப் பின்னணியும் இன்றி மறுப்பதே மனிதர்கள் விடுகின்ற முதலாவது தவறாகும்.

பூமி தட்டையானது என்ற பைபிளின் கருத்துக்கு நேர்மாறாக பூமி உருண்டை வடிவமானது என்ற கருத்தை இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ கலிலி (Galileo Galilei) அவர்கள் ” சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது” என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆய்வின் அடிப்படையில் முதலாவதாக தெரிவித்த அறிவியல் சார்ந்த கருத்தை கிரிஸ்தவ மதகுருக்கள் தமது புனித வேதத்திற்கு எதிரான கருத்தாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவு கலிலியோவும் அவரது நண்பர்களும் கொதித்த எண்ணையில் உருக வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள் என சிலர் குறிப்பிடுகின்றனர். அதன் எதிர் திசையில் “மதம் என்பது விஞ்ஞானத்தின் முதல் எதிரி” என விஞ்ஞானிகளால் பார்க்கப்பட்டது போன்று குர்ஆனும், இஸ்லாமும் பார்க்கப்படுவது பெரும் தவறான பார்வையாகும்.

ஏனெனில் குர்ஆன் பல இடங்களில் விஞ்ஞானம் பற்றிப் பேசி இருக்கின்றது. அதனால் அது விஞ்ஞானம் வேண்டாம் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் இடத்திற்கு விஞ்ஞானிகள் கடவுளர்களாக மாற்றப்பட முடியாது என்கிறது.

பூமிப் பந்தானது முட்டை வடிவத்தை ஒத்தது என்ற கோட்பாட்டை 1500 களுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் குறிப்பிடுகின்றது என்பதைப் பிற்காலத்தில் அறிந்து கொண்ட விஞ்ஞானிகள் குர்ஆன் பக்கம் நெருங்கத் தொடங்கி இன்று அதன் போதனைகளைச் சரி காண்கின்றனர்.

அதனால்தான் விஞ்ஞானம் கடவுளைக் கண்டு கொண்டது, நாஸ்தீகத்தின் தந்தை இஸ்லாத்தை ஏற்றார், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிரபலங்கள் போன்ற செய்திகளை அடிக்கடி நம்மால் வாசிக்க முடிகின்றது.- அல்லாஹ்வே மிகப் பெரியவன்-

ஆமாம்!!! இஸ்லாம் மதம் அல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி. அது மனிதர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தரப்பட்ட அல்லாஹ்வின் உயரிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய மார்க்கமாகும்.

அதன் கோட்பாடுகளைச் சுமந்த நூலான குர்ஆனைப் போன்றதொரு வேதம் யாரிடமும் இல்லை. அது போன்ற ஒரு நூலை எவராலும் தொகுக்கவே முடியாது. காரணம் அது அல்லாஹ்வின் பேச்சு என்பதனாலாகும்.

قُل لَّئِنِ ٱجْتَمَعَتِ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَىٰٓ أَن يَأْتُواْ بِمِثْلِ هَٰذَا ٱلْقُرْءَانِ لَا يَأْتُونَ بِمِثْلِهِۦ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍۢ ظَهِيرًا
(الإسراء – 88)

“மனித மற்றும் ஜின் இனங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த குர்ஆன் போன்ற ஒன்றைக் கொண்டு வர ஒன்றுகூடி, அவர்கள் ஒருவர் மற்றவருக்கு துணையாக நின்றாலும் இதுபோன்ற ஒன்றை கொண்டு வரமுடியாது.” (அல்இஸ்ரா : 88)

என்பது இறை சவாலாகும்.

உலகில் சாதாரண மனிதர்கள் சிலரின் சவாலையே முறியடிக்க முடியாது பின்வாங்கும் மனிதன் இறைவனின் இந்த சவாலை ஒரு போதும் முறியடிக்கவே முடியாது என்பதே உண்மையாகும்.

لَّا يَأْتِيهِ ٱلْبَٰطِلُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِۦ ۖ تَنزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٍۢ. (فصلت – 42)

“இந்த குர்ஆனின் முன்னரோ, அதன் பின்னரோ எதிலும் தவறுகள் வரவேமாட்டாது. (அது) யாவற்றையும் நன்கு அறிந்த புகழுக்குரிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும்.” (ஃபுஸ்ஸிலத் : 42)

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ .(القلم – 52)
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (التكوير/ ٢٧ )

“அது உலக மக்களுக்கான நினைவூட்டலே அன்றி வேறில்லை.” (அல்கலம் : 52) மற்றும் (அத்தக்வீர் : 27)

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ. (الحاقة – 48)

“இது இறையச்சமுள்ளோருக்கான நினைவூட்டலே அன்றி வேறில்லை.” (அல்ஹாக்கா : 48)

كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ ﴿٥٤ المدثر﴾

كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ﴿١١ عبس}

“அவ்வாறன்று, அது நினைவூட்டலாகும்.” (அல்முத்தஸ்ஸிர் : 54) , (அபஸ : 11)

إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا ﴿٢٩ الانسان﴾

“நிச்சயமாக இது நினைவூட்டலாகும். யார் (சத்தியத்தில்) நாட்டமுள்ளவரோ அவர் அவரது வழியை எடுத்துக் கொள்வார்.” (அல்இன்ஸான் : 29)

foulabook.com/ar/read/-book

https://www.islamstory.com/ar/artical/28091/%D9%82%D8%B5%D8%B5-%D8%B9%D8%B8%D9%85%D8%A7%D8%A1-%D8%A7%D8%B3%D9%84%D9%85%D9%88%D8%A7-%D8%AD%D9%82%D8%A7%D8%A6%D9%82-%D9%88%D9%85%D8%B3%D8%A6%D9%88%D9%84%D9%8A%D8%A7%D8%AA

https://www.masrmotors.com/vb/showthread.php?t=10265

List of atheists who converted to Islam – wikipedia


மேற்படி இணையதளங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், மற்றும் நாஸ்திகர்களின் விபரங்களைக் காரண காரியத்தோடு அறிந்து கொள்ள முடியும்.

((3)) பெருமைக் காரர்களுக்கான சவால் :

இறைவேதத்தைச் சுமந்து வந்த இறைத் தூதர்கள் அனைவரும் தமது சமுதாயத்தால் விடுக்கப்படுகின்ற சவால்களை முறியடித்து தமது தூதுத்துவத்தை சந்தேகமின்றி, நிலை நிறுத்துவோராகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

மூஸா (நபி) அவர்களின் காலத்தில் சூனியத்தில் பெயர் போனவர்கள் இருந்தனர். அதனை முறியடிப்பவராகவே அல்லாஹ் அவர்களை அனுப்பினான்.

ஈஸா (அலை) அவர்களின் காலத்தில் வெண்குஷ்டம் பரவலாகக் காணப்பட்டும் வைத்தியத் துறையில் முன்னோடிகள் இருந்தும் அதனைக் குணப்படுத்த முடியாதோராகவே இருந்தனர்.

அல்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அவனுடைய உத்தரவின் பெயரில் நடாத்தக் கூடிய சில அற்புதங்களை வழங்கினான்.
ஆனால் அதனை துறைபோகக் கற்றோராக கூறப்படுகின்ற வைத்தியர்களுக்கு அதை இயலாமல் செய்து அல்லாஹ் அவர்களை தோற்கடித்தான்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழந்த காலம் இஸ்லாமியப் பண்பாடுகள் காணல் நீராகிப்போன, இணைவைப்பே மூதாதையோர் வழி என்று முத்திரை குத்தி, மடமையின் உச்சத்தில் மக்கள் தமது வாழ்வைத் தொலைத்ததனால் இஸ்லாமிய வரலாற்றில் (الأيام الجاهلية) “அறியாமைக் காலம்” என வர்ணிக்கப்படுகின்றது.

இருந்தும் , அங்கு சிறந்த கல்விமான்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், புலவர்கள், சரித்திரவியலாளர்கள், போர் வீரர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் வாழாமல் இல்லை.

இவர்களில் உள்ள அரேபிய கவிஞர்கள், இலக்கியவாதிகள் அனைவரும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறையியல் போதனைகளுக்கு முன்னால் வாயடைத்து, மலைத்துப் போனார்கள். குலத்திற்கு தலைவர்களாக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர் செய்வதறியாது திகைத்தனர்.

பின்வரும் சரித்திரத்தை சற்று சிந்தியுங்கள் ….
“அஸ்து ஷனூஆ” எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் “முஹம்மத் ஒரு மனநோயாளி” என்று கூறுவதை அவர் செவியுற்றார். “நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்” என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காக்கை வலிப்பிற்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் சாட்டியம் கூறுகிறேன். என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) ளிமாத்,

فقال رسولُ اللهِ ﷺ: (إنَّ الحمدَ للهِ نحمَدُه ونستعينُه، مَن يَهدِه اللهُ فلا مُضِلَّ له ومَن يُضلِلْ فلا هاديَ له وأشهَدُ أنْ لا إلهَ إلّا اللهُ وحدَه لا شريكَ له وأنَّ محمَّدًا عبدُه ورسولُه: أمّا بعدُ) فقال: أعِدْ علَيَّ كلماتِك هذه فأعادها عليه رسولُ اللهِ ﷺ ثلاثَ مرّاتٍ فقال: لقد سمِعْتُ قولَ الكَهنةِ وقولَ السَّحَرةِ وقولَ الشُّعراءِ فما سمِعْتُ مِثْلَ كلماتِك هؤلاءِ هاتِ يدَك أُبايِعْك على الإسلامِ…. [صحيح مسلم ]

“நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது “உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் “என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)” என்று கூறினார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.”” ((நூல்: முஸ்லிம்- 1576)).

அறியாமைக் கால மற்றொரு சரித்திரம்…

அபூதர் (ரலி) அவர்கள் கூறுகின்ற மற்றொரு சரித்திரத் தொடரில் :
என்னிடம் எனது சகோதரர் உனைஸ், “நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக்கொள்வீராக” என்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பிவந்தார். அப்போது அவரிடம் நான், “(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ் (ரழி) அவர்கள்,

.. لَقِيتُ رَجُلًا بمَكَّةَ علَى دِينِكَ، يَزْعُمُ أنَّ اللَّهَ أَرْسَلَهُ، قُلتُ: فَما يقولُ النَّاسُ؟ قالَ: يقولونَ: شَاعِرٌ، كَاهِنٌ، سَاحِرٌ، وَكانَ أُنَيْسٌ أَحَدَ الشُّعَرَاءِ.

“நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் “அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்” என்று கூறுகிறார்” என்று சொன்னார். நான், “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “(அவர் ஒரு) கவிஞர், சோதிடர், சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்” என்றார். ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்:

قالَ أُنَيْسٌ: لقَدْ سَمِعْتُ قَوْلَ الكَهَنَةِ، فَما هو بقَوْلِهِمْ، وَلقَدْ وَضَعْتُ قَوْلَهُ علَى أَقْرَاءِ الشِّعْرِ، فَما يَلْتَئِمُ علَى لِسَانِ أَحَدٍ بَعْدِي، أنَّهُ شِعْرٌ، وَاللَّهِ إنَّه لَصَادِقٌ، وإنَّهُمْ لَكَاذِبُونَ [صحيح مسلم ٢٤٧٣ ]

நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள் எனக் கூறினார். (முஸ்லிம் – 4878)

قالَ أُنَيْسٌ: لقَدْ سَمِعْتُ قَوْلَ الكَهَنَةِ، فَما هو بقَوْلِهِمْ، وَلقَدْ وَضَعْتُ قَوْلَهُ علَى أَقْرَاءِ الشِّعْرِ، فَما يَلْتَئِمُ علَى لِسَانِ أَحَدٍ بَعْدِي، أنَّهُ شِعْرٌ، وَاللَّهِ إنَّه لَصَادِقٌ، وإنَّهُمْ لَكَاذِبُونَ [صحيح مسلم ٢٤٧٣ ]

நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன். (நான் மட்டுமல்ல) வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள்தான் பொய்யர்கள் எனக் கூறினார். (முஸ்லிம் – 4878)

அறியாமைக் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் நவீகால அறிஞர்கள் தரத்தில் மதிக்கப்பட்டவர்கள்.

அவர்களே முஹம்மது நபியின் போதனைகளுக்கு முன்னால் சரண்டராகி இஸ்லாம் மார்க்கத்தை அங்கீகரித்துள்ளனர்; என்றால் அவர்களை விட மொழியில், அறிவில் பன்மடங்கு பின் தங்கிய தற்கால மக்கள் இஸ்லாம் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னதாகவே இஸ்லாம் சத்திய பார்க்கம் என்பதை முடிவு செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

பிற நாடுகளை அடிமைப்படுத்தி, பூமியின் ஜாம்பவான்களாக தம்மைப் பற்றி மார்தட்டிக் கொள்கின்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற கொடிய வல்லரசுகள் , விஞ்ஞான தொழில் நுட்பவியலில் முன்னோடியாக இருக்கும் ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் மனித கண்களால் பார்க்க முடியாத ( Corona) கொரோனாவுக்கு முன்னால் விழி பிதுங்கி, செய்வதறியாது கதிகலங்கி நிற்பது எதைச் சொல்கின்றது என நாம் சிந்திக்கவேண்டும்.

உண்மையில் விஞ்ஞானிகள் நிறைந்த காலத்தில் வாழும் இவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு முன்னால் எம்மாத்திரம் என நாம் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் பலவீனமானவர்கள், அறிவில்லாதவர்கள் என்பதைக் கூட குரோனா நம்மிடம் பாடம் சொல்லி விட்டதாகவே முஸ்லிம்களாகிய நாம் முடிவு செய்து விட்டோம்.

((4)) ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டது போன்று நமது படைப்பிடனைக்காக இஸ்ரவேலின் சந்ததிகள் மீது அல்லாஹ் அனுப்பியது போன்று தற்கால இறை மறுப்பாளர்கள் மீது தண்டனையாக அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகவும் இருக்கலாம். ( والله أعلم)

((5)) அல்லது வட்டி, விபச்சாரம் போன்ற மானக் கேடான காரியங்கள் உலகில் பகிரங்கமாக நிகழ்கின்ற போது அவற்றை எதிர்ப்பதற்குப் பதிலாக தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் அதற்கு சுதந்திரம் அளிப்பதைக் கூறலாம்.

வட்டி எடுப்பது, வட்டிப் பொருளாதார முறை இஸ்லாத்தில் மட்டும் அல்ல யூத, கிரிஸ்தவ மதங்களிலும் தடை செய்யப்பட்ட முறையாகும். இருந்தும் அதனை முன் நின்று நடத்துவோர்களாக யூதர்களளும் கிரிஸ்தவர்களளுமே இருக்கின்றனர்.

அல்லாஹ்வோடு ஒரு அடியான் போரிடுவதற்கு சமமான பொருளீட்டல் முறையே வட்டிக் கொடுக்கல் வாங்கல் முறை என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

நவீன உலகில் வட்டிப் பொருளாதாரம் இன்றி வர்த்தகம் இல்லை எனக் கூறப்படும் அளவிற்கு; வட்டி வங்கிகள் பன்றி குட்டியிடுவதைப் போன்று வங்கிக் கிளைகள் குட்டி போட்டுக் காணப்படுகின்றன.

خِصالٌ خَمْسٌ إذا ابتُلِيتُمْ بهِنَّ ، وأعوذُ باللهِ أن تُدْرِكُوهُنَّ : لم تَظْهَرِ الفاحشةُ في قومٍ قَطُّ ؛ حتى يُعْلِنُوا بها ؛ إلا فَشَا فيهِمُ الطاعونُ والأوجاعُ التي لم تَكُنْ مَضَتْ في أسلافِهِم الذين مَضَوْا {الألباني/ صحيح }

“ஐந்து பண்புகள். அவற்றை நீங்கள் அடைவதையிட்டு அல்லாஹ்விடம் பாதுகாக்க வேண்டுகின்றேன் . எந்த சமூகத்தில் விபச்சாரம் வெளிப்படையாகி விட்டதோ அவர்கள் மத்தியில் தாஊன் (கொடிய நோய்) பரவும், அவர்களின் முன்னோர்கள் மத்தியில் இல்லாத பசி பஞ்சம் இவர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அல்பானி- ஸஹீஹுல் ஜாமிஃ) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் செய்தி.

இன்று மனிதர்கள் ஜனநாயகம், உலகமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை போன்ற வழிமுறைகளால் மனித மிருகங்களாக மாறிவிட்டனர்.

மிருகங்களிடம் காணப்படுகின்ற கருச் சுதந்திரமானது; வெட்கம் கெட்ட மனித மிருகங்களிடம் கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் ஒருவர் தனது மனைவியை மற்றவரோடு பரிமாறிக் கொள்ளுதல் என்ற பெயரில் அறிமுகமான இக்காலத்தில் கொரோனா வைரஸோடு அல்லாஹ் நிறுத்துவது அவன் அன்பாளன் என்பதை இன்னும் எடுத்துக் காட்டுகின்றது.

குர்ஆனையும் அதன் சட்டங்களையும் குறைகாண்பது, அல்லாஹ்வைப் பரிகாசம் செய்வது, அவனுக்கு இணைவைப்பது, இறை நிராகரிப்பு, மறுமை வாழ்வை மறுப்பது, பிற நாடுகளை ஆக்கிரிமிப்பது, அவற்றின் மீது வீணாகப் போர் தொடுப்பது, சுதந்திரமாக வாழும் அப்பாவிகளை பட்டினி போடுவது போன்ற கொடிய பாவங்கள், மற்றும் குடிப்பது, வெறிப்பது, சூதாட்டம் என அல்லாஹ் விரும்பாத, கோபமடைகின்ற செயல்களை தனி மனித சுதந்திரத்தின் பேரில் அனுமதிப்பது போன்ற கொடுமைகள் அரங்கேற அவனது பூமியில் நடைபெற அவன் விரும்புவானா? எத்தனை நாட்களுக்குத்தான் அவன் அவகாசம் அளிப்பான் என நாம் சிந்திக்க வேண்டும்.

((6)) பூமியில் நடை பெறுகின்ற பாரிய அநீதி

இதுவும் கொடிய நோய்கள் பரவக் காரணமாக அமைகின்றன.

மனிதர்கள் மனிதர்களுக்கு அநீதி செய்வது ஒரு புறம் இருக்க, அவர்களைப் படைத்த இரட்சகனுக்கு அவர்கள் இழைக்கின்ற அநீதிகளில் மிகப் பெரிய அநீதி அவனுக்கு இணைவைப்பதில் தங்கி இருக்கின்றது.

ஆம்! அந்த நன்றி கெட்ட மனிதனை பல கோடி பெறுமதியான அழகிய உறுப்புக்களைக் கொண்டு அல்லாஹ் வடிவமைத்திருக்க , இவனோ; இல்லை – இல்லை, நானே தானாக உருவாகிக் கோண்டேன் என்றோ, அல்லது குரங்கில் இருந்துதான் மனித இனம் பிறந்தது என்றோ கூறுவதை விடப் பெரிய கொடுமை ஒன்று இந்த உலகில் இருக்கவே முடியாது.

وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ (الذاريات/ ٢١)

“நீங்கள் உங்களை பற்றி சிந்திக்க வேண்டாமா? என அல்லாஹ் கேட்கின்றான்.” (அத்தாரியாத் : 21)

என அல்லாஹ் கேட்பது பற்றி நோயில் பாதிக்கப்பட்ட போது சரி சிந்தித்தானா?

உலகில் மனிதன் உயரிய நோக்கத்துடன் படைக்கப் பட்டிருக்கின்றான். அந்த இலக்கு மாறாது வாழ வேண்டுமானால் அவன் தனது செயற்பாடுகள் தொடர்பாகவும், தான் மரணித்தின் பின்னர் செல்லப்போகின்ற இடம் பற்றியும், தனது இறுதி முடிவு பற்றியும் தினமும் சுய பரிசோதனை செய்வது அவசியமாகும்.

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏
(٦) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (٧) فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ (الإنفطار/٦- ٨)

“மனிதனே! (கொடையாளனாகிய) சங்கைமிக்க உன் இரட்சகனுக்கு மாறு செய்யும்படி உன்னை ஏமாற்றத்தில் தள்ளியதுதான் என்ன? அவன் எத்தகையவன் என்றால் அவனே உன்னைப் படைத்து, உன்னை அவனே சீராக்கி, உன்னை அவனே செப்பனிட்டான். அவன் தான் நாடிய உருவத்தில் உன்னை (இறுக்கமாகப்) பிணைத்தான்.” (அல்இன்ஃபிதார் : 6 – 8)

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} [هود: ١٠٢ )

“அல்லாஹ் அநியாயக்காரனுக்கு சில காலம் அவகாசம் வழங்கி நேரம் வரும் போது அவனைப் பிடித்தால் அவனது பிடியில் இருந்து அவனைத் தப்பிக்க சந்தர்ப்பம் அளிக்கவே மாட்டான் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, [“உமது இரட்சகன் ஒரு கிராமத்தில் உள்ள அநியாயக்காரர்களை பிடித்தால் அவனது பிடி அவ்வாறுதான். நிச்சயமாக அவனது பிடி கடுமையானதே”] (ஹூத் : 102) என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (புகாரி – 4686)

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌  وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ . [ آل عمران /١٧٨]

இன்னும், இறைமறுப்பாளர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) – நிராகரிப்பவர்களுக்கு – நல்லது என்று அவர்கள் எண்ண வேண்டாம்; பாவத்தை அவர்கள் அதிகமாக்கவே (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துகின்றோம். அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 3:178)

அநீதி இழைத்தோர் அழிக்கப்பட்டது தொடர்பாக நபிமார்கள் தொடர்பான சரித்திர வசனங்களில் அல்குர்ஆன் மிகத் தெளிவாக விளக்கி இருப்பதை அறிந்து முடியும்.

((7))உண்பதற்கு தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பூச்சி புழுக்களை உண்ணுதல் :

அல்லாஹ் உலகில் படைத்த பல நூறு படைப்புக்கள் மனித நன்மைக்காவே அன்றி, அது உண்பதற்காகப் படைக்கப்படவில்லை.

ويُحِلٌ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ ) (الأعراف/ 157.)

“அவர் (முஹம்மது நபி) உடல் நலனுக்கு உகந்தவைகள் அனைத்தையும் (ஹலால்) ஆகுமாக்குவார். அவ்வாறே, உடல் நலனுக்கு கேடு விழைவிப்பவைகள் அனைத்தையும் அவர் தடை செய்வார்.” ( அஃராஃப்- 157 )

“கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொரு வனமிருகங்களையும் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மனிதர்கள் உண்ணும் உணவு பற்றியும் தெளிவூட்டி இருப்பதை அவதானிக்கின்ற போது இஸ்லாம் மனிதர்களுக்கான மார்க்கம்தான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

: ( يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ … ) المائدة/ 4)

“நபியே! தமக்கு (உணவில்) எவை (எல்லாம்) ஆகுமாக்கப்பட்டுள்ளது என அவர்கள் கேட்கின்றனர். உடலுக்கு உகந்தவைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள என்று கூறுவீராக” (அல்மாயிதா : 04)

என அல்லாஹ் கூறுவதை மாத்திரம் சிந்தித்தால் பன்றி, பாம்பு, எலி, வெளவால் போன்ற இஸ்லாம் உண்ணத் தடை செய்த பிராணிகள், பறவைகள் மூலமான உணவுப் பழக்க வழக்கத்தால் பரவுகின்ற கிருமிகளைத் தாராளமாகக் கட்டுப் படுத்த முடியும்.

قال بعض العلماء : ” كل ما أحل الله تعالى ، فهو طيب نافع في البدن والدين، وكل ما حرمه، فهو خبيث ضار في البدن والدين ” انتهى من “تفسير ابن كثير” (3 /488) .

மேற்படி வசனத்தை விளக்கும் இமாம் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் : அல்லாஹ் அனுமதித்த ஒவ்வொன்றும் உடலுக்கும் மார்க்கத்திற்கும் பயனுள்ளதாகும், அல்லாஹ் தடைவிதித்த ஒவ்வொன்றும் உடலுக்கும் மார்க்கத்திற்கும் கேடுதரவல்லதாகும்
(தஃப்ஸீர் இப்னு கஸீர்)

என விளக்கி இருப்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

மனிதர்கள் இழைக்கிற இது போன்ற கொடுமைகளுக்காவும் அல்லாஹ் இவ்வாறான கொடிய வைரஸ்களை அனுப்பி மனிதர்களை சோதிக்கவோ தண்டிக்கவோ அவன் ஆற்றல் மிக்கவன்.

எனவே மனிதர்களின் கரங்களில்தான் அவர்களின் அழிவுக்கான தெரிவின் முடிவுகள் தரப்பட்டுள்ளன.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *