Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு (page 7)

உங்கள் சிந்தனைக்கு

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அமைதி இறங்க வேண்டுமா? அல்குர்ஆனை ஓதுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 038]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “அவசரப்படாமல் அமைதியாகவும் ஆராய்ந்துணர்ந்தும் அல்குர்ஆனை மனிதன் ஓதுகின்ற போது (அல்லாஹ்விடமிருந்து) அமைதி இறங்குகிறது! ஓதுபவரின் உள்ளத்தைச் சென்றடையும் வரைக்கும் அந்த அமைதி இறங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் உள்ளத்தில் அல்லாஹ்தான் அந்த அமைதியை இறக்கி வைக்கின்றான்.” { நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 04/651 } قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:- [ السكينة تنزل …

Read More »

அறிஞர்கள் நேசத்திற்குரியவர்கள்; ஆனாலும், சத்தியம் அதிக நேசத்திற்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 037]

அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் நன்நோக்கில்) சில அறிஞர்களுக்கும், கண்ணியவான்கள் சிலருக்கும் நாம் மறுப்புக் கொடுக்கின்றோம் என்றால் அவர்களை நாம் கோபிக்கின்றோம் என்பதோ, அல்லது அவர்களை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதோ அதனுடைய பொருளல்ல. நாம் தெளிவுபடுத்துவதெல்லாம் சரியான விடயத்தைத்தான்! இதனால்தான் சில அறிஞர்கள் தமது சக அறிஞர்களில் சிலர் தவறிழைக்கும்போது, ‘இன்னார் எமது நேசத்திற்குரியவர்; ஆனால், சத்தியம் எமக்கு அதைவிட அதிக …

Read More »

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 036]

நோன்பில் பொதிந்திருக்கும் மூன்று வகைப் பொறுமைகள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!) 2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!) 3 …

Read More »

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது: அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் …

Read More »

மனிதர்களின் இந்நிலைப்பாடு அழிவுக்கே வழிவகுக்கும்! [உங்கள் சிந்தனைக்கு… – 034]

இமாம் இப்னு குதாமா அல்மக்திஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “அறிந்து கொள்ளுங்கள்! மக்கள் பழிப்பார்கள் என்று பயந்ததாலும், அவர்களின் புகழ்ச்சியை விரும்பியதாலுமே மனிதர்களில் அதிகமானோர் அழிந்து போனார்கள். இவர்களின் அசைவுகள் அனைத்தும் மக்களின் திருப்திக்கு உடன்பட்டதாகவே மாறிவிட்டது. புகழை எதிர்பார்த்தும், பழிப்பைப் பயந்துமே இவ்வாறு இவர்கள் நடந்து கொள்கின்றனர். இது, அழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்களில் உள்ளதாகும். இதற்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்!” { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, …

Read More »

இறைவிசுவாசியை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இஸ்திஃfபார்! [உங்கள் சிந்தனைக்கு… – 033]

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “-இஸ்திஃfபார்- எனும் பாவமன்னிப்புக் கோருதல், மனிதனை வெறுக்கப்பட்ட செயலிலிருந்து வெளியேற்றி விருப்புக்குரிய செயலுக்கு இட்டுச் செல்கிறது; குறைபாடுடைய செயலிலிருந்து பூர்த்தியான செயலுக்கு அவனைக் கொண்டு செல்கிறது; மேலும், தாழ்ந்த இடத்திலிருந்து அதை விட உயர்ந்த இடத்திற்கும், பூரணத்துவமான நிலைக்கும் மனிதனைக் கொண்டு செல்கின்றது!” { நூல்: ‘மஜ்மூஉல் fபதாவா’, 11/696 } قال شيخ الإسلام إبن تيمية رحمه الله …

Read More »

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …

Read More »

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கெதிராக அல்லாஹ்வின் முன்னிலையில் வாதிடக்கூடாது! [உங்கள் சிந்தனைக்கு… – 031]

“உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் அவர்களை நீங்கள் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லவில்லை என்றோ, அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை ஏன் அவர்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்றோ, அல்லது உடற்பயிற்சி கிளப்களில் அவர்களை நீங்கள் ஏன் சேர்த்துவிடவில்லை என்றோ, அல்லது மார்க்கெட்டுகளுக்கு ஏன் அவர்களை நீங்கள் கூட்டிச்செல்லவில்லை என்றோ நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் உங்களைப் பற்றி முறைப்பாடு செய்யவேமாட்டார்கள். என்றாலும் அவர்கள், அல்லாஹ்விடம் தமது முறைப்பாடுகளை இப்படிக் …

Read More »

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது. { நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 } قال …

Read More »

இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!” { நூல்: ‘அத்தஸ்கிரா’, பக்கம்: 103 } قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:- [ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب …

Read More »