Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » “கொள்கையே தலைவன்” மாயை

“கொள்கையே தலைவன்” மாயை

பீஜே அபிமானிகளே,
உங்க “கொள்கை”யும், பீஜே விதைத்த கருத்துக்களும் அடிப்படையிலேயே இரண்டறக் கலந்துள்ளவை.
.
ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது.
.
பீஜே விதைத்த கருத்துக்களை முடிஞ்சா தனியா பிரிச்சிட்டு உங்கள் கொள்கைையை ஒரு தரம் உத்துப் பாருங்க; பெரிசா அதில் எதுவுமே இருக்காது.
.
மிஞ்சிப் போனா, சில குர்ஆன், ஹதீஸ் போதனைகள் ஆங்காங்கே இருக்கும். அவ்வளவு தான். அது நாமும் உடன்படுபவை தாம்.
.
மற்றப்படி உங்கள் “கொள்கை”யின் அடி நாதமே பீஜே எனும் தனி மனிதனின் சிந்தனை வெளிப்பாடு மட்டுமே.
.
இதனால் தான் “கொள்கையே தலைவன்” எனும் போலிக் கோஷத்தை எதிர்க்கிறோம்.
.
பீஜேக்காக நாம் உங்கள் கொள்கையை எதிர்க்கவில்லை; “கொள்கையே பீஜே” எனும் உள்ளார்ந்த யதார்த்தத்தையே இங்கு எதிர்க்கிறோம்.
.
பீஜே சிந்தனையை கழிச்சிட்டுப் பார்த்தா, எதிர்க்கும் அளவுக்கு உங்களிடம் கொள்கைன்னு எதுவுமே பெரிசா இல்லை.
.
உங்கள் கொள்கையே பீஜேயின் சிந்தனை என்றிருக்கும் போது, பீஜேயே ஒரு பொய்யர் என்று இப்போ தெரிய வந்து விட்டது.
.
அறிவுடையோராக இருந்தால் இப்போ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
.
உங்கள் கொள்கையை முழுசாக மறுபரிசீலனை செய்யனுமா இல்லையா?
.
ஏனென்றால், ஒரு பொய்யர் விதைத்த கருத்துக்களின் அடிப்படையில் தானே உங்கள் கொள்கையே நிறுவப் பட்டுள்ளது? குர்ஆன் ஹதீஸைக் கூட நீங்கள் அணுகுவது அந்தப் பொய்யர் காட்டித் தந்த வழிமுறைப்படி தானே?
.
இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது சுய சிந்தையுள்ள அனைவருக்கும் புரியும்.
.
அப்படியிருந்தும், இது எதையுமே புரிஞ்சும் புரியாத மாதிரி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நடிச்சே காலம் தள்ளப் போறீங்க?
.
மனச்சாட்சிக்குப் புறம்பாக நடித்து மனிதர்களை ஏமாற்றி வேணும்னா தற்காலிகமாகத் தப்பிச்சிடலாம்.
.
அனைத்தையும் நுணுக்கத்தோடு அவதானித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்விடம் இந்தப் நடிப்பு எடுபடாது!.
.
அவனது கோபப் பார்வைக்கு ஆளாகி நாசமடையும் முன் இப்பவே உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்லியே இவ்வளவு வற்புறுத்துகிறோம்.
.
எங்க இயக்கத்துக்கு வாங்கன்னு உங்கள வெத்தல பாக்கு வச்சிக் கூப்பிடுறதுக்காக இதெல்லாம் சொல்லல.
.`
அப்படிச் சொல்றதுக்கு எங்களுக்கு அப்படியெந்த இயக்கமும் இல்ல.
.
இயக்கங்களே வேண்டாமென்று வெறுத்து ஒதுங்கியவர்கள் நாங்கள்.
.
நல்லதை ஏவி, தீயதைத் தடுப்பது மட்டுமே எங்கள் நோக்கம். புரிஞ்சா உங்களுக்கு நல்லது. புரியலேன்னாலும் உங்களுக்கே கேடு.
.
எப்படிப் பார்த்தாலும் எங்களுக்கு இதில் எந்த நஷ்டமுமில்லை. எமது கடமையைச் செய்கிறோம்.
.
– அபூ மலிக்

Mohamed Sadath
May 28 at 8:04pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *