Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…

பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…

இந்தியாவில் PJ வை கொள்கைத் தலைவராக்கொண்டு இயங்கி வந்த அமைப்புதான் TNTJ என்ற அமைப்பாகும். அதனது வளர்ப்புப் பிள்ளையாக இலங்கையிலே தோற்றம்பெற்றது SLTJ எனும் அமைப்பு.

பீஜே வெளியேற்றத்தினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிலர் வெளியேறியதுடன் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டார்கள்.

அதன்பிற்பாடு வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தனித்தனியாக தமக்கென்றொரு அமைப்பை உருவாக்கி, அதற்கென்றொரு தலைவர் – உபதலைவர் – செயலாளர் என்றொரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள்.

அந்த அடிப்படையில்; இந்தியாவில்,

1- TNTJ (தமிழ் நாட்டு தௌஹீத் ஜமாத்)
இதற்கு தலைவர் : ஷம்சுல்லுஹா ரஹ்மானி

2- YMJ (ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்)
இதற்கு தலைவர் : ஹாஜா நூஹ்
(அல்தாபியை அடிப்படையாக வைத்துத் துவங்கியது)

3- PJ (பி. ஜைய்னுல் ஆபிதீன்)
தற்பொழுது TNTJவை விட்டு வெளியேறும் கிளைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைவதுடன், SLTJவை விட்டு வெளியேறி CTJ என்ற அமைப்பை உருவாக்கியதையிட்டும் மகிழ்ச்சியுடன் கருத்தும் வெளியிட்டுள்ளார். (இக்கருத்துக்கள் அவரின் அனுமதிபெற்று நடைபெறும் முகநூலில் கண்ட விடயங்கள்)

இலங்கையில் ;

1- SLTJ (ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்)
இதற்கு தலைவர் : ஹிஷாம்
(இந்த அமைப்பு TNTJ வின் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்படுகிறது)

2- CTJ (சிலோன் தௌஹீத் ஜமாத்)
இதற்கு தலைவர் : ரிசான்
(இந்த அமைப்பு PJ விற்கு வால் பிடிக்கும்)

என்ற அடிப்படையில் வெவ்வேறான பெயர்களை வைத்து இவர்கள் செயற்பட்டாலும்…. அனைவருமே ஹதீஸ் மறுப்புக்கொள்கை என்ற ஒன்றிலேயே உள்ளனர்.

கொள்கையில் தெளிவு கண்டு, ஹதீஸ் நிராகரிப்பு கொள்கைக்கு முரண்பட்டு வெளியேறியிருந்தால் இவர்களை வாழ்த்துவதிலும், போற்றுவதிலும், கை கோர்த்து செயற்படுவதற்கும் ஏற்ற அமைப்பு என்று கூறியிருக்கலாம்.

ஆனால், இவர்களோ நிர்வாகப் பிரச்சினையாலும், மனக்கசப்புக்களினாலும் வெளியேறி…. அதே ஹதீஸ் மறுப்புக்கொள்கையில் இருப்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.

அல்லாஹுத்தஆலாவே நேர்வழிகாட்டுவதற்கு போதுமானவன்.

இப்படிக்கு,
Razeen Akbar
24/09/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *