Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பீஜேயிஸத்திற்கும் தூய இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் – 01

பீஜேயிஸத்திற்கும் தூய இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் – 01

1. மூலாதாரங்கள் பற்றிய நம்பிக்கை

பீஜேயிஸத்தின் மூலாதாரங்கள்:
அல் குர்ஆன்: (பீஜேயின் மொழிபெயர்ப்பு & விளக்கம் )
அல் ஹதீஸ்: (பீஜேயின் மண்டை ஸஹீஹ் என்று ஏற்றவை )
அல் அக்ல்: (பீஜேயின் மூளை சரி கண்டவை)

தூய இஸ்லாத்தின் மூலாதாரங்கள்:
அல்குர்ஆன், அல்ஹதீஸ் மாத்திரமே

2. அல் குர்ஆன் பற்றிய நம்பிக்கை

பீஜேயிஸம்: அல் குர்ஆன் வசணமாயினும் எங்கள் சுய சிந்தனையுடன் உறசிப் பார்த்தே அதனை நம்ப வேண்டும்

தூய இஸ்லாம்: அல்குர்ஆனை இறக்கியவன் அல்லாஹ் என்பதற்காக அதனை நாம் சுய சிந்தனைக்குப் படாவிட்டாலும் நம்ப வேண்டும்

3. அல்ஹதீஸ் பற்றிய நம்பிக்கை 01

பீஜேயிஸம்: நம்பகமான ஹதீஸ்களாயினும் பகுத்தறிவுக்குப் புலப் படாவிட்டால் அவற்றை ஏற்கக் கூடாது

தூய இஸ்லாம்: பகுத்தறிவுக்கு புலப்படா விட்டாலும் நம்பகமான ஹதீஸ்களை ஏற்க வேண்டும்

4. அல்ஹதீஸ் பற்றிய நம்பிக்கை 02

பீஜேயிஸம்: தீஸை சரி காண்பதற்கு அறிவிப்பாளர் வரிசை அவசியம் கிடையாது.

தூய இஸ்லாம்: அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் ஹதீஸ்களை தரம் பிறிக்க முடியாது.

5. அல்ஹதீஸ் பற்றிய நம்பிக்கை 03

பீஜேயிஸம்: ஹதீஸ் கலை அறிவில்லாதவர்களும் தங்கள் சிந்தனையை வைத்து ஹதீஸ்களை சரி காண முடியும்

தூய இஸ்லாம்: ஹதீஸ் கலை அறிவுள்ளவர்களால் மாத்திரமே ஹதீஸ்களை தரம் பிறிக்க முடியும்

6. சூனியம் பற்றிய நம்பிக்கை 01

பீஜேயிஸம்: சூனியத்திற்கு தாக்கம் உண்டு என நம்பியவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன் (முஷ்ரிக்)

தூய இஸ்லாம்: அல்லாஹ் நாடினால் சூனியத்தால் தாக்கம் ஏற்படும் என்று நம்பியவன் முஸ்லிம்

7. சூனியம் பற்றிய நம்பிக்கை 02

பீஜேயிஸம்: சூனியத்தை நம்பிவன் பின்னால் நின்று தொழ முடியாது

தூய இஸ்லாம்: அல்குர்ஆன் அடிப்படையில் சூனியத்தை நம்பிவன் பின்னால் நின்று தொழ முடியும்

8. அல்லாஹ் பற்றிய நம்பிக்கை

பீஜேயிஸம்: அல்லாஹ்வின் பன்புகளையும் புத்திக்கு ஏற்ப நம்ப வேண்டும் (உ+ம்) அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குவதில்லை,
அவனது அருள்தான் இறங்குகிறது.

தூய இஸ்லாம்: எங்களது சிந்தனைக்குப் படா விட்டாலும் அல்லாஹ்வின் பன்புகளை இஸ்லாம் சொல்லுவது போல் நம்ப வேண்டும்.

9.நபியவர்கள் பற்றிய நம்பிக்கை

பீஜேயிஸம்: நபியவர்கள் அறியாமல் இணை வைத்துக் கொண்டிருந்தார்கள்

தூய இஸ்லாம்: ஜாஹிலியாக் காலம் தொட்டே நபியவர்களை அல்லாஹ் இணை வைப்பிலிருந்து பாதுகாத்தான்

10.சஹாபாக்கள் பற்றிய நம்பிக்கை 1

பீஜேயிஸம்: சஹாபாக்கள் எங்களை விடக் கொஞ்சம் குறைவாகவே ‘பாவம் செய்பவர்கள்’

தூய இஸ்லாம்: சஹாபாக்கள் பெரும்பாலும் பாவங்கள் செய்யாதவர்கள் மற்றும் அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப் பட்டவர்கள் அவர்கள் பற்றி எந்த குறையும் பேச கூடாது

11. சஹாபாக்கள் பற்றிய நம்பிக்கை 2

பீஜேயிஸம்: அன்ஸாரிகள் முஹாஜிரீன்களை ஒரு நிர்ப்பந்தத்திற்காவும் சுயநலத்திற்காவும் ஆதரித்தார்கள்

தூய இஸ்லாம்: தங்களுக்குத் தேவைகளிருந்தும் அன்ஸாரிகள் முஹாஜிரீன்களுக்கு அல்லாஹ்வுக்காக முன்னுரிமை கொடுத்தார்கள்

12. சஹாபாக்கள் பற்றிய நம்பிக்கை 3

பீஜேயிஸம்: நாம் நபித்தோழர்கள் என இன்று எண்ணி ரழியல்லாஹு அன்ஹூ கூறுவோரில் முர்தத்களும் உள்ளனர்

தூய இஸ்லாம்: நபித்தோழர்கள் என்ற வரைவிளக்கனத்துக்கு உட்பட்ட காரணத்தால் நாம் ரழியல்லாஹு அன்ஹும் வரலூ அன்ஹு கூரும் எந்த நபித்தோழர்களும் முர்தத் இல்லை

13. சஹாபாக்கள் பற்றிய நம்பிக்கை 4

பீஜேயிஸம்: பதவி ஆசையில் அண்ணன் எப்ப சவான் திண்ணை எப்போ காலி என்று கூறுவது போல நபிகளாரின் மரணத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள் தான் அன்சாரிகள்

தூய இஸ்லாம்: ங்களின் உயிர் உடமைகள் அனைத்தயும் அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக தியாகம் செய்து நபிகளாரை தங்களின் உயிரை விட நேசித்தவர்கள் அன்சாரிகள்

14 இஜ்திஹாத் பற்றிய நம்பிக்கை

பீஜேயிஸம்: ஏனைய உலமாக்கலால் இஜ்திஹாத் செய்யப்பட்ட ஆய்வு பீஜேயின் ஆய்வுக்கு முரணாயின் அது வழிகேடு மற்றும் பாவமானது

தூய இஸ்லாம்: இஜ்திஹாத் செய்து எடுக்கப் பட்ட முடிவு சரியாயின் அதற்காக இரண்டு கூலிகள் கிடைக்கும், தவறாக இருந்தாலும் அதற்காக ஒரு கூலி கிடைக்கும், அது வழிகேடு அல்ல

பீஜேயிஸத்தின் ஸ்தாபகர் இன்னும் பல விசங்களில் தூய இஸ்லாத்துடன் முறன் படுவதால்….

விடு பட்ட மற்ற முரண்பாடுகளை வேறு இரண்டாம் பகுதியில் எதிர் பார்க்கும் படி வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்!

✍இவன்,
இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *