Featured Posts
Home » Tag Archives: சிறுவர்கள்

Tag Archives: சிறுவர்கள்

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »

மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் …

Read More »

அழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2 -அஷ்ஷெய்க்  S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது! யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது …

Read More »

காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-1]

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.” “என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது …

Read More »

சிறுவர்களும் உளச்சோர்வும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும்.

Read More »

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.

1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?’ என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். ‘அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்’ என்றோ அல்லது ‘மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்’ …

Read More »

சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.

1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 6247 அனஸ் (ரலி).

Read More »