Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஷைத்தானின் வியாக்கியானம்

ஷைத்தானின் வியாக்கியானம்

“ஷைத்தானிடம் ஆயத்துல் குர்ஸீயை அபூ ஹுரைரா (ரழி) கற்றது போல், கெட்டவராக இருந்தாலும், பீஜேயின் மார்க்க விளக்கங்களை இனியும் நாம் ஏற்போம்.” இப்படியொரு புது வியாக்கியானம் முளைத்துள்ளது.
.
அப்பாவி மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே இது போன்ற திசைதிருப்பல் முயற்சிகள். மக்கள் உஷார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போல், பீஜேயின் கொள்கை பொய் என்பதை அறிந்து கொள்ள அவர் பொய்யர் என்று நிரூபனமானதே போதும்.
.
ஷைத்தானிடம் ஆயத்துல் குர்ஸீ பற்றி அபூ ஹுரைரா (ரழி) கற்றதும், பீஜேயின் நூதனக் கொள்கையை இவர்கள் சரிகாண்பதும் ஒன்றா? நிச்சயமாக இல்லை.
.
ஆயத்துல் குர்ஸீயின் சிறப்பை ஷைத்தான் சொல்ல, அதை நபியிடம் வந்து அபூ ஹுரைரா (ரழி) கேட்க, நபி அதை உறுதிப்படுத்திய பிறகே அபூ ஹுரைரா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள்.

ஆக, அபூ ஹுரைரா (ரழி) ஏற்றது ஷைத்தானின் கூற்றை அல்ல; நபியின் கூற்றை.

மேலும், ஆயத்துல் குர்ஸீயை ஷைத்தான் அவனாக இயற்றிக் கற்றுக் கொடுக்கவில்லை; குர்ஆன் வசனத்தின் சிறப்பை மட்டுமே சொல்லியுள்ளான்.

ஆனால், பீஜே கொண்டு வந்த நூதன ஹதீஸ் கலை விதிகள், முஃதஸிலாக்களுக்குப் பிறகு பீஜே மீண்டும் புதிதாக உருவாக்கிய ஒரு பித்அத். இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான ஒரு வழிகேட்ட சித்தாந்தமே பீஜேயின் கொள்கை.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் ஆயத்துல் குர்ஸீயோடு பீஜேயைக் கோர்த்து கண்டபடி உளற வேண்டாம். தனி மனித ஆராதனையின் விளைவாகப் புத்தி கெட்டுப் போன நீங்கள் மடையர்கள் என்பதற்காக எம்மையும் உங்களைப் போன்ற மடையர்களென்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு இப்படி உளறி அவமானப் பட வேண்டாம்.

மார்க்கத்தின் அடிப்படை மிகத் தெளிவானது:

ஒருவன் நம்பகம் இல்லாதவன் என்பது நிரூபனமாகி விட்டால், அடுத்த கணமே அவன் கூறும் சாட்சியம், செய்திகள், விளக்கங்கள் அனைத்தையும் மொத்தமாகவே குப்பையில் போட வேண்டும்; அதில் நல்லவை இருந்தாலும் சரியே. இனிமேல் ஒருபோதும் அவனது கூற்றுக்களை நம்பி ஏற்கவே கூடாது. இதுவே மார்க்கத்தின் தெளிவான கட்டளை.

பொய்யாக சாட்சி சொன்னதாக ஒருவன் நிரூபிக்கப் பட்டு விட்டால், அவன் உண்மையே கூறினாலும் ஏற்றுக் கொள்ளவே கூடாது. இதுவே அல்லாஹ்வின் கட்டளை.

சொல்லப்படும் செய்தியைப் பார்ப்பதை விட, சொல்பவன் நம்பகமானவனா என்று முதலில் பார்க்க வேண்டும். இதுவே மார்க்கம் வலியுறுத்தும் நிலைபாடு.

இந்த நிலைபாட்டின் அடிப்படையிலேயே ஹதீஸ்கலை விதிகள் அனைத்தும் அமைந்துள்ளன.

ஒருவன் பொய்யன் என்பது நிரூபனமாகி விட்டால், அவன் அறிவிக்கும் எந்தச் செய்தியையும் ஹதீஸ் கலையில் அறவே ஏற்க மாட்டார்கள்.

பீஜே ஒரு பச்சைப் பொய்யன் என்பது 100% நிரூபனமாகி விட்டது. அவரது மார்க்க விளக்கங்கள், ஹதீஸ்களில் கற்பித்த முரண்பாடுகள், குர்ஆன் வியாக்கியானம் ஆகிய அனைத்துமே, அவர் அறிவித்திருக்கும் செய்திகள் தாம்.

பீஜே இட்டுக்கட்டியவர் என்பது இப்போது நிரூபனமாகி விட்டதால், அவரது செய்திகள் எதையும் ஏற்க முடியாது. அனைத்தையும் குப்பையில் தூக்கி வீசி விட்டு, புதிதாக அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதுவே குர்ஆன், ஹதீஸ் வலியுறுத்தும் மார்க்க நிலைபாடு.

இந்த நிலைபாட்டுக்குத் தலைகீழாக அமைந்திருப்பதே அபூ ஹுரைரா (ரழி)யிடம் ஆயத்துல் குர்ஸீ பற்றி ஷைத்தான் சொன்னதை உதாரணம் காட்டும் நவீன ஷைத்தான்களின் வியாக்கியானம். விழிப்போடு மக்கள் சிந்திக்க வேண்டும். யாரிடமும் இனியும் ஏமாற வேண்டாம்.

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கிறதென்றே தெரியாது. ஒரு பாம்பு கண்டறியப் பட்டு விட்டது. இன்னும் ஏராளமான பாம்புகள் TNTJ / SLTJ இற்குள் ஒளிந்துள்ளன. எனவே, எவனையும் நம்ப வேண்டாம். என் கருத்துக்களைக் கூட கண்மூடி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நானும் நாளை ஒரு பாம்பாக மாறலாம் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்).

நேரடியாக குர்ஆன் / ஹதீஸுக்கு மட்டுமே மீண்டு விடுங்கள். எந்தத் தனிமனித விளக்கங்களையும் அப்படியே நம்பி நிலைபாடுகளைத் தீர்மாணிக்க வேண்டாம். அது அழிவுக்கு இட்டுச் செல்லும். இதற்கான ஓர் எச்சரிக்கையே பீஜே விவகாரம்.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *