Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வீராப்பு பேசும் அசத்தியம்

வீராப்பு பேசும் அசத்தியம்

“பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” என்று இப்போ பெரிய இவனாட்டம் தம் கட்டி டயலோக் விடுவதால் எல்லாம் உங்கள் அசத்தியக் கொள்கை சத்தியம் என்று ஆகி விடாது.

இப்படிச் சொல்லி சமூகத்துக்கு இன்னொரு முறை காது குத்தி விடலாம்னு நெனப்போ? அது நடக்காது.

பீஜே என்ற மனிதர் மட்டுமே உங்க ஜமாத்தை விட்டு விலகியுள்ளார். அவர் கொண்டு வந்த அசத்தியம் இன்னமும் உங்கள் ஜமாத்தை ஆண்டு கொண்டு தான் உள்ளது. புரியலியா? சொல்லிக் காட்டுறேன்.

இந்த நூற்றாண்டில் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைத் தமிழுலகுக்குக் கொண்டு வந்ததே பீஜே தான்; செய்யது இபுறாஹீமோ, அல்லது வேறெந்த அள்ளக்கையோ கொண்டுவரவில்லை. நவீன முஃதஸிலா கொள்கையின் நிறுவனர் பீஜே தான்.

அவர் கொண்டு வந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே உங்கள் ஜமாத்தின் மொத்த பைலாவுமே வகுக்கப் பட்டுள்ளது.

அவர் கொண்டு வந்த வஹீ மறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே உங்கள் ஜமாத்தின் மொத்த நிலைபாடுமே இன்றும் அமைந்துள்ளது.

பீஜே ஒரு பச்சைப் பொய்யர் என்பது இப்போது 100% நிரூபனமாகி விட்டது. ஒரு பொய்யர் முன்வைக்கும் கொள்கையிலும் நிச்சயம் பல பொய்கள் இருந்தே தீரும். இதை எவனுமே மறுக்க முடியாது. பொய்யர் பொய் சொல்லாம உண்மையா சொல்லப் போறான்?

இந்த அடிப்படையில், பீஜே அறிமுகப் படுத்திய கொள்கையும் பொய்கள் நிறைந்த அசத்தியம் என்பதும் சேர்த்துத் தான் இங்கு நிரூபனமாகியுள்ளது.

பீஜே எனும் பொய்யர் கொண்டுவந்த அசத்தியத்தைப் பின்பற்றிக் கொண்டே, “பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” என்று வீராப்பு பேசுவதும், “நாங்கள் தக்லீத் வாதிகள் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம்” என்று பச்சையாகப் புளுகுவதும் உலக மகா காமெடிகள்.

பீஜேயை நீங்கள் தூக்கிக் கடாசுவது உண்மையென்றால், அவர் கொண்டு வந்த அசத்தியக் கொள்கையையும் சேர்த்தே கடாசி விட்டு, வேறொரு கொள்கைக்கு நீங்கள் மாற வேண்டும். அந்தக் கொள்கை, பீஜேயின் கொள்கையிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் தக்லீத் வாதிகள் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ள முடியும். இல்லாத பட்சத்தில் ஒரு பொய்யனின் பொய்யையே இன்னமும் பின்பற்றும் அதே அள்ளக்கைகள் தான் நீங்கள் என்பது வெளிப்படை உண்மை.

கேக்குறவன் கேனயனா இருந்தால் எருமை மாடு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம். அந்த மாதிரி இப்போ சில எருமைகள் ஏரோப்ளேன் ஓட்டும் முயற்சி தான் “பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” / “கொள்கையே தலைவன்” எனும் வெற்று வாசகங்கள். எவனாவது இளிச்சவாயனிடம் போய் இதெல்லாம் சொல்லுங்க. வெட்கம் கெட்டவனுங்க பேச்சப் பாரு.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *