Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்

நபித்துவச் செய்தியை சுமப்போரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்

அல்லாஹ் பரிசுத்தமானவன். அவனது தூதுச் செய்திகளும் மிகவும் பரிசுத்தம் நிறைந்தவைகளாகும்.

எனவே அதனை சுமப்பவர்களாக இருந்த நபிமார்கள் மனிதர்களாக இருந்தும் அவர்களில் புனிதர்களாகவும், உயரிய பண்புகளைக் கொண்டவர்களாகவும் அந்த சமூகத்தில் அறியப்பட்டிருந்தனர்.

அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கும் உலகுக்கும் முன்வைக்க பரிசுத்தமான அல்லாஹ்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறு பிராயம் முதல் மரணிக்கின்றவரை நல்லவர்களாக, நேர்மை, நம்பிக்கை, வாய்மை, நாணயம் என அனைத்து விதமான உயரிய பண்புகளுக்கும் முன்மாதிரிகளாக வார்த்தெடுக்கப்பட்டனர்.

இறுதி நபி ஸல் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பொய் பேசாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பது மக்கா வாழ் காஃபிர்களின் வாக்குமுலமாகும். இந்த உண்மை பற்றி புகாரி, முஸ்லிமில் பதியப்பட்டுள்ள பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கின்றது.

அஷ்ஷஅரா 214 வசனமாகிய ”
وأنذر عشيرتك الأقربين

“நபியே உமது நெருங்கிய உறவினர்களுக்கும் (இத்தூதைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என்ற இறைமறை வசனம் நபி ஸல் அவர்கள் மீது இறங்கியதும் உடனே அவர்கள் ஸஃபா மலைமீதேறி அவசிய உதவிக்கு அழைக்கின்ற வார்த்தைகள் மூலம் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், குடும்பங்கள், கோத்திரங்கள் என அனைவரையும் கூவி அழைத்து

«أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم، أكنتم مصدقي؟» قالوا: نعم، ما جربنا عليك إلا صدقا، قال: «فإني نذير لكم بين يدي عذاب شديد» فقال أبو لهب: تبا لك سائر اليوم، ألهذا جمعتنا؟ فنزلت: {تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب} [المسد: ٢]

இதோ பின்னால் இருக்கின்ற பள்ளத்தாக்கிற்குப் பின்புறமாக இருந்து குதிரைப் படை ஒன்று உங்கள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகின்றது என நான் (முஹம்மத்) சொன்னால் நீங்கள் என்னை உண்மைப்படுத்துவீர்களா எனக் கேட்டார்கள். அந்த மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில்: ஆம். (உண்மைப்படுத்துவோம்), ஏனெனில் உண்மையைத் தவிர வேறெந்த செயல்பாட்டையும் நாம் உம்மிடம் கண்டதில்லை எனக் கூறினார்கள். (புகாரி)

புகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்

… فاجتمعوا إليه، فقال: «أرأيتم إن أخبرتكم أن خيلا تخرج من سفح هذا الجبل، أكنتم مصدقي؟» قالوا: ما جربنا عليك كذبا

அம்மக்கள் அவர்களை நோக்கி வந்து ஒன்று கூடியதும் இந்த மலை உச்சியில் பின் இருந்து குதிரைப் படை ஒன்று உங்கள் மீது போர் தொடுக்க ஆயத்தமாகின்றது எனக் கூறினால் நீங்கள் என்னை உண்மைப்படுத்துவீர்களா எனக் கேட்க, அவர்கள் நீர் பொய்யுரைப்பதை நாம் உம்மிடம் அவதானித்தில்லையே எனக் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. (புகாரி)

பாடம் :
மேற்படி சரித்திரம் இறைத்தூதர்கள் என்போர் பொய் பேசாதவர்கள். அவர்களின் வழிவந்த மக்களாகிய நாங்கள் குறிப்பாக தாயிக்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்வோர் உண்மையாளர்களாக இருப்பது அவசியமாகும்.
இப்படிப் பார்க்கின்ற போது தஃவாக் களங்கள், பிரச்சார மேடைகள், பேஸ்புக், வாட்ஸ்அப், பத்திரிக்கைகள் என தாவா ஊடகங்களில் இஸ்லாத்தை வளர்ப்பதற்காகக் கூறிக்கொண்டு தெரிந்து கொண்டே பொய்பேசுவோரில் அதிகமானவர்கள் மௌலவி, ஷேகுனா, ஹஸரத் போன்ற சமூக மரியாதை உள்ள பட்டங்களை சுமப்போராக இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.

இவ்வாறானவர்கள் ஹதீஸ் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஹதீஸ் கலை நிபுணர் குழுவினால் மறுக்கப்படும், அவர்களின் அறிவிப்பின் தன்மை பற்றி அறிவதற்காக அவைகள் படிப்பினைக்காகப் பதியப்படும் என்ற சட்ட விதி இருக்கின்ற போது பொய்யர் என மக்களால் ஓரங்கட்டப்பட்ட P.J. வின் உரைளையும், விளக்கங்களையும் மறுப்புரைகளையும் எவ்வாறு அங்கீகரித்து அமுல் செய்யலாம் என அவரைத் தக்லீத் செய்யும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

மார்க்கத்தில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவைத் தருவானாக!

பதிவு : ரிஸ்வான் மதனி
13/05/2018

One comment

  1. அல்லாஹ் பரிசுத்தமானவன். அவனது தூதுச் செய்திகளும் மிகவும் பரிசுத்தம் நிறைந்தவைகளாகும்.

    எனவே அதனை சுமப்பவர்களாக இருந்த நபிமார்கள் மனிதர்களாக இருந்தும் அவர்களில் புனிதர்களாகவும், உயரிய பண்புகளைக் கொண்டவர்களாகவும் அந்த சமூகத்தில் அறியப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *