Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » (பீஜே ஜமாத்துடன்) விவாதம் செய்யணுமா?

(பீஜே ஜமாத்துடன்) விவாதம் செய்யணுமா?

பீஜே கொள்கையைச் சரிகாண்போரில் பலர், அதன் கொள்கையை எதிர்த்து நம்மைப் போன்றோர் பதிவேற்றும் போது சில சமயம்  கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைப்பதுண்டு.
.

“உண்மையிலேயே எங்கள் கொள்கை பிழை என்றால், எங்கள் ஜமாத்தை அணுகி, ஒரு விவாத ஒப்பந்தம் செய்து, விவாதத்தில் எமது கொள்கையைப் பிழையென்று நிரூபித்துக் காட்டுங்கள்; அடுத்த கணமே நாம் கொள்கை மாறத் தயார். அதை விடுத்து இப்படி வெறுப்பைக் கொட்டுவது போல் பதிவேற்றம் போடுவது நியாயம் இல்லை”.

.
வெளிப் பார்வைக்கு மேற்கண்ட கோரிக்கை நியாயமான ஒன்றாகத் தோன்றும்.
.
ஆனால், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது, பீஜே ஜமாத்தைப் பொருத்த மட்டில் அனேக சந்தர்ப்பங்களில் ஓர் அர்த்தமற்ற விடயம்.
.
பீஜே ஜமாத் சார்ந்தவர்களே, உங்கள் ஜமாத்தின் இலங்கை மண்டலத்தோடு பகிரங்க விவாதம் செய்தவன் என்ற அனுபவத்தில் இது குறித்த சில உண்மைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.
.
உங்களோடு விவாதம் செய்து சத்தியத்தை நிரூபிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன.
.
விவாதம் / தர்க்கம் என்பது பொதுவாக இரண்டு அடிப்படைகளில் நடப்பது வழமை.
.
1. நடுவர்கள் மூலம் முடிவு தீர்மாணிக்கப் படுவது.
2. பார்வையாளர்கள் முடிவைத் தமக்குள் தீர்மாணித்துக் கொள்வது.
.
நீதியான நடுவர்களை வைத்து விவாதம் செய்யும் போது, விவாதத்தின் இறுதி முடிவை நீதியாக அறிவுக்கும் பொருட்டு அதில் சில ஒழுங்குகளை நடுவர்கள் கடைப்பிடிப்பதுண்டு.
.
இரு தரப்பும் வைக்கும் வாதங்களை நடுவர்கள் கணக்கில் எடுப்பார்கள்.
.
உதாரணத்துக்கு ஒரு தரப்பு பத்து வாதங்களை வைத்திருந்தால், அதில் எத்தனை வாதங்களை எதிரணி முறியடிக்கிறது? எத்தனை வாதங்கள் பதிலில்லாமல் மழுப்பப்படுகிறது? என்பது கணக்கில் சேர்க்கப்படும். அதே போல் அடுத்த அணியின் வாதங்களும் கணக்கில் சேர்க்கப்படும்.
.
மேலதிகமாக, ஒவ்வொரு தரப்பும் முன்வைக்கும் ஆதாரங்களின் எண்ணிக்கை, உறுதித் தன்மை ஆகியனவும் கருத்திற் கொள்ளப்பட்டு ஒப்பிடப் படும். இரண்டு தரப்பில் எந்தத் தரப்பு அதிகம் ஆதாரங்களை வைத்துள்ளது? எந்தத் தரப்பின் ஆதாரங்களுக்கு உறுதித் தன்மை அதிகம்? இது போன்றவையும் கருத்திற் கொள்ளப்பட்டு, அவற்றுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.
.
அனைத்தையும் தொகுத்து, இறுதியில் இரு தரப்பு வாதங்கள் + ஆதாரங்களது எண்ணிக்கை, தரம், வாதங்களோடு ஆதாரங்களைப் பொருத்தும் நுணுக்கம்… ஆகிய அணைத்தையும் கணித்து, அதிக புள்ளிகள் பெறும் தரப்பை நடுவர்கள் வெற்றி பெற்ற தரப்பாக அறிவிப்பார்கள்.
.
இதில் குறிப்பாக, விவாதத்தின் இறுதி முடிவை அறிவிக்கும் வரை இரண்டில் எந்தத் தரப்பு பக்கமும் நடுவர்கள் சாய மாட்டார்கள். நூல் பிடித்தாற்போல் நடுநிலையில் நின்றே முடிவை எட்டுவார்கள்.
.
அதிக சத்தத்தில் கத்திப் பேசுதல், அதிகம் வேடிக்கையாகப் பேசி சபையைச் சிரிக்க வைத்தல்… இது போன்ற அம்சங்கள் பார்வையாளர்களைக் கவர மட்டுமே உதவும். நடுவர்களை இவை கவராது. ஏனெனில், நீதியான தீர்ப்புக்கு இவை எப்போதும் இடையூறாகவே இருக்கும்.
.
ஒரு விடயத்தின் உண்மையை அறிவதற்காக செய்யப்படும் விவாதங்களில் யார் தரப்பு வாதங்கள் சரியானவை என்பதைத் தீர்மாணிக்க மிகப் பொருத்தமான முறை இது தான்.
.
ஆனால், மார்க்க விடயங்களில் சத்தியத்தைக் கண்டறிவதற்காக நாம் செய்யும் விவாதங்களில் நடுவர்கள் வைப்பதில்லை. ஒவ்வொரு பார்வையாளனும் அவரவர் அளவில் ஒரு நீதியான நடுவனாக இருந்து தமது மனசாட்சிக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
.
ஆகவே, சத்தியத்தை நிரூபிக்கும் விவாதங்களுக்குப் பார்வையாளர்களாக வரும் ஒவ்வொருவரும், ஒரு நீதியான நடுவரின் மனநிலையில் தான் வர வேண்டும். அவ்வாறு வருவோர் மட்டுமே அந்த விவாதத்தின் சரியான முடிவைக் கண்டறிவார்.
.
உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்; இந்த மனநிலையில் தான் நீங்கள் விவாத அரங்கில் வந்து பார்வையாளராக அமர்கிறீர்களா? அல்லது அனேக எதிர்த் தரப்புப் பார்வையாளர்கள் தான் அப்படி வந்து அமர்கிறார்களா? இல்லை.
.
இதில் ஏனைய பிரிவினரை விடவும் பீஜே ஜமாத்தாராகிய நீங்கள் தான் பல மடங்கு அநீதியாக நடந்து கொள்வது வழமை.
.
நடுநிலையான பார்வையோடு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற உணர்வோரு வருவதற்குப் பதிலாக, ஏதோ தமது அணி சார்பாக விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் பார்வையாளர்களின் மனநிலையில் மட்டுமே வந்து அமர்கிறீர்கள்.
.
உங்கள் தரப்பு வாதிகளில் யாராவது ஏதாவது முசுப்பாத்தியா சொல்லும் போது அதை உற்சாகப் படுத்துவதிலும், எதிர்த் தரப்பை ஏதாவது சொல்லி ஏளனம் செய்யும் போது வாய் கிழிய சிரிப்பதிலும் மட்டுமே உங்களில் அனேகமானோரது மொத்தக் கவனமும் இருக்கும்.
.
இப்படியிருக்கும் நீங்கள் நீதியான நடுவராக எப்படி உண்மையைக் கண்டறியப் போகிறீர்கள்? கியாம நாள் வரை முயற்சித்தாலும் உங்களால் இந்த வழிமுறையில் எந்த விவாதத்திலும் சத்தியத்தைக் கண்டறியவே முடியாது.
.
விவாதத்துக்கு வந்து அமரும் போதே “நாம் தான் சரி. எதிரி பிழை” என்றும், “நம்ம தரப்பு தான் ஜெயிக்கணும்; எதிரியை எப்படியாவது பந்தாடிடணும்” என்றும் முன்கூட்டியே தீர்மாணித்துக் கொண்டு, முழுக்க முழுக்க ஒருபக்கச் சார்பான மனநிலையோடு உட்கார்ந்தால், உங்களுக்கு எங்கே சத்தியம் புலப்படப் போகிறது? உங்கள் தரப்பு, எதிர்த் தரப்பு வாதங்களை ஒவ்வொன்றாக எடை போட்டு உண்மையைக் கண்டுபிடிக்கும் நீதி, நிதானம் உங்களுக்கு எங்கே பிறகு இருக்கப் போகிறது?
.
எல்லாம் முடிந்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறும் போது “நம்ம ஜமாத்துக்கு ஜே…” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே வீடு செல்வது தானே உங்கள் கலாச்சாரத்தில் ஊறிப் போய் விட்டது? இனி எங்கே சத்தியம் புலப்பட?
.
இணையத்தில் விவாதம் பார்ப்போர் நிலையும் இதே தான். இரு தரப்பு ஆதரவாளர்களும் விவாதத்தில் கவனம் செலுத்துவதை விட, பின்னூட்டச் சண்டையில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் உங்களுக்கு மட்டும் சுமத்தவில்லை; எம்மைப் போன்ற எதிர்த் தரப்பினரிலும் ஏராளமானோர் நிலை இது தான். இருந்தாலும் ஏனைய தரப்புகளை விடவும் இதில் பல மடங்கு மோசமாக நடந்து கொள்வது பீஜே ஜமாத்தாராகிய நீங்கள் தாம்.
.
இந்த லட்சணத்தில் இருக்கும் நீங்கள், “ஒரு விவாதம் செய்து நமது கொள்கையைப் பிழையென்று நிரூபியுங்கள்; ஏற்றுக் கொள்கிறோம்” என்று சொன்னால், அதை நம்புவதற்கு எல்லா அறிஞர்களும், உங்களை நம்பி விவாதிக்க வந்து ஏமாற்றம் கண்ட எங்களைப் போன்ற ஏமாளிகளா என்ன?
.
அல்லாஹ்வுக்குப் பொதுவாக ஒரு விவாதத்தின் மூலம் உண்மையைக் கண்டறிவது தான் உங்கள் நோக்கம் என்றிருந்தால், ஏற்கனவே உங்கள் ஜமாத்தோடு நாம் செய்த மூன்று நாள் விவாதமே உங்களுக்குப் போதும். உங்கள் கொள்கையின் வழிகேட்டை இனம்கான அதற்கு மேலும் ஒரு விவாதம் அவசியமில்லை. அப்படி இனம்கண்டோரில் பலர் அல்லாஹ்வின் அருளால் ஏற்கனவே உங்களை விட்டு விலகியும் விட்டார்கள்.
.
– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *