Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!

இன்றைய TNTJ இளைஞர்களே, உங்கள் கனிவான கவனத்திற்கு!

TNTJ-வின் பரிணாம வளர்ச்சி “கொள்கையே தலைவன்” – யார் அங்கே?

தவ்ஹீத் பிரச்சார களத்தின் ஆரம்பகாலத்தில் நல்ல மனிதர்களோடு இருந்த பீஜெ என்ன கொள்கையில் இருந்தார், இன்று பொய்யராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு தன்னுடைய இயக்கத்தினராலேயே தூக்கியெறியப்படும் இழிநிலையை ஏன் அடைந்தார்? என்பதனை அறிந்துகொள்ள பீஜெ என்பவர் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அதுவும் நேரடியாக ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், ஆடியோ போன்றவற்றிலிருந்து அறிய முற்படுங்கள் மேலும் அவருடை ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு எதிரானவர்களின் ஆக்கங்களையும் வாசியுங்கள் தெளிவுபெறுங்கள். பீஜேயை தூக்கியெறிந்துவிட்டு TNTJ இன்று தனது கொள்கையாக சொல்லிக்கொள்ளும் “கொள்கையே தலைவன்” என்பது பீஜெ கொண்டுவந்த கொள்கைதான் என்பதனை ஆழ்மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள். இதுதொடர்பாக இங்கு பதியப்படும் கட்டுரைகளை வாசிக்க முற்படுங்கள்.

1988 ஆண்டு பீஜெ-யின் கொள்கை

காதியானிகளின் கல்லறைப் பயணம்’ என்ற தலைப்பில் 1988-ம் ஆண்டு அக்டோபர் மாத அல்-ஜன்னத் இதழின் அன்றைய ஆசிரியர் பீ. ஜைனுல் ஆபிதின் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு தடம்புரண்டவர்கள் யார்? இன்றைய பொய்யராக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கும் பீஜெ-யா? அல்லது TNTJ-யின் பட்டியலில் உள்ள தமிழக தவ்ஹீத் உலமாக்களா?

அன்று 1988 நேரான கொள்கையுடவைர்களுடன் இருந்தபோது காதியானிகளுடன் செய்த விவாதம் தான் மிக பெரிய சாதனை என்று மார்தட்டி கொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்களே. அன்று பீஜெ எழுதிய கடிதம் பற்றிய தெரியுமா? இதோ இதிலிருந்து ஒரு பகுதி

27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக “திருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும்” என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை (1988 PJ). திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம்………..” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.

கொள்கையே தலைவன் என கூக்குரல் இடுபவர்கள் இது பற்றிய எதாவது பீஜெ-யிடம் கேட்டது உண்டா?

2001 ஆண்டு பீஜெ-யின் கொள்கை

2001 ல் பி.ஜெய்னுலாப்தீன் மொழிபெயர்க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் ‘அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும்’ என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை இன்றை பொய்யராக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கும் பீஜெ அளித்துள்ளார்.

அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றார். அவை:

1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம். (சுனன் திர்மிதி நூல் அறிமுகம் A25).

பார்க்க: Attachment-1

மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று பி.ஜெய்னுலாப்தீன் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.

கொள்கையே தலைவன் என கூக்குரல் இடுபவர்கள் இது பற்றிய எதாவது பீஜெ-யிடம் கேட்டது உண்டா?

2003 ஆண்டு பீஜெ-யின் கொள்கை [பொய்யை உரக்க சொல்லும் பீஜெ]

(2nd Edition April 2003 Page 1198-1199) Attachment-2

குர்ஆனைப்போலவே ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் மிகச்சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ள. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் சுமார் 50க்கும் குறைவான உள்ளன.

இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.

(10th Edition Jan 2012 Page 1489) Attachment-3

…கருத்துக்கள் குர்ஆனுக்கு ஏதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புகளில் முரண்பாடுகள் இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய ஹதீஸ்கள் உள்ளன அவற்றை மட்டும் தான் ஏற்கக்கூடாது என்று தக்க காரணத்துடன் கூறுகின்றோம்…..

உண்மையில் பீஜெ-யினால் மறுக்கப்பட்ட ஹதீஸ்கள் எண்ணிக்கை 78 (இது 2014 ஆண்டு கணக்குப்படி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கொள்கையே தலைவன் என்ற கோஷம் சரியானதா? அல்லது பீஜெ-யே தலைவன் பீஜெ-யே கொள்கை என்பது சரியா? என்பதனை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகின்றோம்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மறுப்பது பற்றிய ஏனையே கட்டுரைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

தொகுப்பு: அபூ சஅத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *