Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ்களில் பித்தலாட்டம் | ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படும் என்று ஹதீஸை மறுத்தார்களா?

ஹதீஸ்களில் பித்தலாட்டம் | ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படும் என்று ஹதீஸை மறுத்தார்களா?

இந்த கட்டுரையை படிக்கும் முன் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியவை:

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாங்கள் மட்டுமா மறுத்தோம்? என்று பில்டப் கொடுத்து அந்த பில்டபுக்கு பக்க துணையாக ஸஹாபாக்கள் / ஸஹாபிய பெண்மணிகள் ஏன் உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களே மறுத்தள்ளார்கள் என்று அப்படமான அவதூறுகளை அள்ளி விசியவர்தான் பீஜே என்ற பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தனது முகல்லிதுகளாளேயே தூக்கிய எறியப்பட்டவர். அப்படி தூக்கியெறியப்பட்ட தலைவனே கொள்கை, அதாவது கொள்கையே தலைவன் என்ற கோட்பாட்டை கொண்ட தக்லீத்வாதிகள் அதையே தமது வீர முழக்கமாக மேடைதோறும் முழங்கி வந்தனர். ஏன் சொல்லுகின்றோம் என்றால் நாம் இன்று பார்க்க போகும் ஹதீஸ், பல அறிவிப்புகளின் வாயிலாக வந்த ஒன்று மேற்பட்ட செய்திகளை ஒன்றாக தொகுத்து அந்த ஹதீஸை எப்படி சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என சகோ. அபூ மாலிக் விளக்கியுள்ளார். கொள்கையே பீஜெ, பீஜெ-யே தலைவன் என்றுள்ளவர்கள் அவர் கூறியதை எந்தவித ஆய்வுக்குட்படுத்தாமல் அப்படியே விளம்பியுள்ளதை காணலாம். குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ் மறுப்பு என்ற பித்தலாட்ட கொள்கையின் ஜாம்பவான் இன்று பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு எகிறி தலைகுப்புற விழுந்து கிடக்கும் நிலையில் இந்த பதிவு அவசியம் என கருதுகின்றோம்.

(இவர்கள் சொந்தமாக ஆய்வு செய்து இருந்தால் கீழ் கண்ட விளக்கம் கிடைத்திருக்குமா? இல்லையா? என்பதை கட்டுரை முடிவில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)

இஸ்லாம்கல்வி ஊடக குழு

எந்த ஹதீஸா இருந்தாலும் அறிவிப்பாளர் அடிப்படையில் மட்டுமே ஹதீஸ்களைத் தரம் பிரிக்க நமக்கு அனுமதியுள்ளது. ஏன்னா, சாட்சியம் (அறிவிப்பாளர்) மட்டும் தான் மார்க்க ஆதாரங்களை அளக்கும் அளவுகோள். அந்த அளவுகோளின் அடிப்படையில் மட்டுமே மொத்த ஹதீஸ் கலையும் வகுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் நிலைநிறுத்திக்கொள்ளவும்.

ஹதீஸ்கள் பலவீனம் என்று ஓரங்கட்டப்படுவது கூட சாட்சியம் பலவீனமானது என்ற அடிப்படையில் மட்டுமே. மற்றப்படி அதன் கருத்தின் அடிப்படையில் ஓர் எழுத்தைக் கூட அசைக்கும் அதிகாரம் எவனுக்குமே இல்லை.

குர்ஆனில் சில கருத்துக்கள் நமக்கு நெருடலா இருக்குன்னு அதை யாருமே கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து மறுப்போமா? இல்லை தானே? அதே போல தான் ஹதீஸ்களையும் கருத்தின் அடிப்படையில் நோண்ட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இப்போது இவர்கள் கூறும் ஹதீஸுக்கு வருவோம், இப்னு உமர் (ரழி) அவர்கள், குடும்பத்தார் அழுவதால் மய்யித்து வேதனை செய்யப்படும் என்று சொன்ன ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி மறுத்தார்களா?

உண்மையில் ஆயிஷா (ரழி) அந்த ஹதீஸை நிராகரிக்கவும் இல்லை; குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸை மறுக்கவும் இல்லை. இது உம்முல் மூஃமின் ஆயிஷா (ரழி) மேல் பொய்யாக இட்டுக்கட்டபட்டது.

ஹதீஸ் மறுப்பளர்களது வாதம் 1:
ஆயிஷா (ரழி) குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸ்களை மறுத்தார்கள்.

சம்பவம் 1 – மய்யித்து வேதனை செய்யப்படுதல்:
இப்னு உமர் (ரழி) அவர்கள், குடும்பத்தார் அழுவதால் மய்யித்து வேதனை செய்யப்படும் என்று சொன்ன ஹதீஸை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி மறுத்திறுக்கிறார்கள்.

முதலில் இந்த ஹதீஸை ஒருதடவை பார்த்து விடுவோம்:

அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(உமர் (ரழி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராக இருந்த போது நடந்த சம்பவம்)
……………… அப்போது வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்ரிடம் “நீங்கள் எழுந்து சென்று, அவர்களை அழ வேண்டாம் எனத் தடை செய்யுங்கள்” என்று சைகை செய்துவிட்டு, “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் பொதுப்படையாக தான் கூறினார்கள்.

(இதை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகின்றார்கள்:)

உடனே நான் எழுந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்; இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்ன ஹதீஸை அவர்களிடம் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! “எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்துவிட்ட மனிதர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூற வில்லை. மாறாக “குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைமறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகின்றான்’ என்றே கூறினார்கள்.
அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான் (53:43).
ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (35:18)” என்று கூறினார்கள். <முஸ்லிம் 1693>

இந்த ஹதீஸைத் தான் பிரதான ஆதாரமாகக் காட்டி, இதில் ஆயிஷா (ரழி) அவர்கள், குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஒரு செய்தியை மறுத்தார்கள் என்று இவர்கள் வாதம் வைக்கிறார்கள்.

இனி இதே ஹதீஸ் இன்னும் இரண்டு அறிவிப்புகளில் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்து விடுவோம்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டு மயக்கமுற்றிருந்தபோது, வேகமாக அழுகுரல் கேட்டது. மயக்கம் தெளிந்ததும் அவர்கள், “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறிய வில்லையா?” என்று கேட்டார்கள்.
– முஸ்லிம் 1689

இந்த ஹதீஸில் கூறப்பட்டிருக்கும் “வேகமாக அழுகுரல் கேட்டது” என்ற வாசகத்தை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த இடத்தில் தான் ஹதீஸ் மறுப்பாளர்களின் பித்தலாட்டம் ஒளிந்திருக்கிறது. இனி அடுத்த ஹதீஸைப் பார்ப்போம்.

1691 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப் பட்டு) காயமுற்றிருந்தபோது, ஸுஹைப் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலிருந்து உமர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, அவர்களுக்கு எதிரில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் …………. “அல்லாஹ்வின் மீதாணையாக! “எவருக்காக அழப்படுகின்றதோ அவர் வேதனை செய்யப்படுவார்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறிந்தே உள்ளீர்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் “இதுவெல்லாம் அந்த யூதர்களுக்காகத்தான் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார் கள்” என்றார்கள்.
– முஸ்லிம் 1691

இந்த ஹதீஸில் “இதெல்லாம் அந்த யூதர்களுக்காகத் தான் என ஆயிஷா (ரழி) கூறி வந்தார்கள்” என்ற வாசகத்தையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த மூன்று ஹதீஸ் அறிவிப்புகளையும் ஒன்றாகத் தொகுத்து, இந்தச் சம்பவத்தின் கருத்து என்னவென்பதை ஒருங்கிணைத்துப் பார்த்தால் என்ன புரிகிறது?

ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுகிறதென்று மறுத்தார்களா? மறுக்கவேயில்லை. இந்த ஹதீஸை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தைத் தான் சொன்னார்கள். “இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக இருக்கிறது. எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி” என்ற கருத்தில் இங்கு எந்த வாசகமும் இல்லை.

“அல்லாஹ்வின் தூதர் இப்படிச் சொல்லவேயில்லை” என்று ஆயிஷா (ரழி) கூறிய வாசகத்தை வைத்துக் கொண்டு தான் ஹதீஸ் மறுப்பாளர்கள், ஆயிஷா (ரழி) இந்த ஹதீஸை மறுத்தது போல் ஒரு பிரமையைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.

இந்த வாசகத்தின் மூலம் ஆயிஷா (ரழி) அவர்கள் ஹதீஸை மறுக்கவில்லை; ஹதீஸை விளங்கிக் கொண்டதைத் தான் தப்பென்று சுட்டிக் காட்டி, அதைத் திருத்திக் காட்டினார்கள். அது என்ன தவறு என்பதை இனி விலாவாரியாகப் பார்க்கலாம்:

இதன் அறிவிப்பாளர்கள் எல்லோரும் ஒரே செய்தியைத் தான் அவரவர் பாணியில் அறிவித்திருக்கிறார்கள். இதில் ஒருவரது அறிவிப்பில் “யூதர்கள் அழுவது போல், ஒப்பாரி வைத்து அழுவதைத் தான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்…” என்ற கருத்து மூடலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றத் தகவல்களெல்லாம் சரியாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன.

இந்த மூடலான வாசக அமைப்புத் தான், ஹதீஸைத் தவறாகப் புரிந்து கொள்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

அந்த மூடலான வாசகத்தின் சரியான விளக்கத்தைத் தான் ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த விளக்கம் தான் சரியானது என்பதை இன்னும் ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டும் விதமாகவே குர்ஆன் வசனங்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அவ்வளவு தான். குர்ஆன் வசனங்களோடு இந்த ஹதீஸை மோத விட்டு முரண்பாடு கற்பிக்கும் நோக்கத்தில் இங்கு ஆயிஷா (ரழி) நடந்து கொள்ளவேயில்லை. அப்படி நடந்து கொண்டதாகா யாராவது சொல்வார்களென்றால், அவர்கள் தாம் நிச்சயமாக ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அவதூறாக இட்டுக்கட்டுகிறார்கள் என்று அர்த்தம்.

இதே சம்பவத்தையொட்டிய ஹதீஸ் மறுப்பாளர்களின் இரண்டாவது வாதம்:

இதில் ஆயிஷா (ரழி) “ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார்” என்ற குர்ஆன் வசனத்தைக் கூறி தான் ஹதீஸை மறுக்கிறார்கள். இது முரண்பாடு கற்பிக்கும் செயல் இல்லாமல் வேறென்ன?

பதில்:
இதைக் கூட இவர்கள் அரைகுறையாகத் தான் புரிந்திருக்கிறார்கள். ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இதுவும் புரிந்து விடும். யாரோ செத்ததற்காக வருகிறவன் எல்லாம் ஒப்பாரி வைத்தால், அதற்கு மய்யித்து தண்டிக்கப்படுமென்று நபியவர்கள் சொல்லவில்லை; “குடும்பத்தார்” ஒப்பாரி வைப்பதால் மய்யித்து தண்டிக்கப் படுகிறது என்று தான் கூறியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன?

மரணித்த அந்த மனிதன், தன் மனைவி மக்களுக்கு இஸ்லாத்தைச் சரியாகக் கற்றுக் கொடுத்திருந்தால், அவன் இறந்த பிறகு, அதற்காக அவர்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள்; தமது மனக்கவலையை இஸ்லாம் காட்டித்தந்த வரம்புக்குள் நின்று தான் வெளிப்படுத்துவார்கள். அதாவது மௌனமாகக் கண்ணீர் விட்டு அழுவார்கள்.

இதற்கு மாற்றமாக, இறந்து போன அந்த மனிதன் தன் குடும்பத்துக்கு மார்க்கத்தின் சரியான பயிற்சியைக் கொடுக்காமல் பொடுபோக்காக இருந்திருந்தால், அவன் இறந்த பின் அவர்கள் அறியாமையில் ஒப்பாரி வைப்பார்கள்.

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புதாரர்கள். உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவீர்கள்” என்ற ஹதீஸின் அடிப்படையில், மரணித்தவன் தன் பொறுப்பை அவன் குடும்பத்தார் விசயத்தில் நிறைவேற்றவில்லை என்ற குற்றத்துக்காகத் தான் அவர்கள் ஒப்பாரி வைக்கும் அளவுக்கு, அதற்குக் காரணமாக அமைந்த மய்யித்து தண்டிக்கப்படுகிறது. இன்னொருவர் சுமையை சுமப்பதால் அல்ல.

இதையெல்லாம் சரியாகப் புரிந்து வைத்திருந்ததால் தான் உமர் (ரழி) அவர்கள் மரணத் தருவாயில் கூட குடும்பத்தாரைப் பார்த்து “ஓலமிட்டு அழ வேண்டாம்; மய்யித்து தண்டிக்கப் படும்” என்று எச்சரித்தார்கள். மரணிக்கும் தருவாயில் கூட இந்த மார்க்கத்தின் போதனைகளைக் குடும்பத்தாருக்கு சரியாக எத்தி வைத்த ஒரு சரியான பொறுப்புதாரராக அவர்கள் மரணித்தார்கள்.

இது தான் இந்த ஹதீஸ் பற்றிய உண்மை நிலை. இந்த உண்மைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, சம்பவத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டி, அதன் மூலம் இல்லாத ஒரு ஃபித்னாவை மார்க்கத்துக்குள் உண்டாக்குவதற்காகவே ஹதீஸ் மறுப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள்.

– அபூ மலிக்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *