Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தெளிவான குப்ரை நோக்கிய ஒரு பயணமாகும் அதிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளுவதற்குரிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் TNTJ & SLTJ சகோதரர்களுக்கு வழங்கியுள்ளான்.

இந்த வழிகெட்ட கொள்கையை உருவாக்கியவரை கண்மூடித்தனமாக தக்லீத் செய்த சகோதரர்கள் இன்று அவரை மோசமானவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர் என்று சாடுகின்றார்கள் அவரோ இவர்களை ஆட்டு மந்தை என்கின்றார்.

அவரை தூக்கி எறிந்தவர்கள் அவரிடமிருந்து பெற்ற கொள்கையை தலையில் வைத்துக் கொண்டிருந்தால் அவர் இவர்களை ஆட்டு மந்தை என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

உண்மையான அறிவு என்பது மார்க்கமாகும், உங்களது மார்க்கத்தை நீங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றீர்கள் என்பதில் அவதனாமாக இருந்து கொள்ளுங்கள்.
இமாம் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ். (ஸஹீஹு முஸ்லிமின் முன்னுரை)

ஸஹாபாக்கள், இமாம்களை புறந்தள்ளிவிட்டு புதிதாக ஒரு கொள்கையை வகுத்து அந்த நூதன வழியில் பயணிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை பெற்றுத்தரும் மிகவும் பயங்கரமான செயலாகும் என்பதனையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நபித்தோழர்கள், இமாம்கள் வாழ்நாள் முழுக்க செலவு செய்து எம்மிடம் ஒப்படைத்த வஹியின் அறிவை வைத்துக்கொண்டு அவர்களையே மட்டம் தட்டிப்பேசினால் அதன் பாரதூரமான விளைவை யாருக்கு முன் பேசினோமோ அவர்களுக்கு முன்நிலையில் இந்த உலகிலேயே காண வேண்டி வரும்.

இமாமுனா இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்;

தனது சொந்த பகுத்தறிவின் மூலம் வஹியை ஒருவர் மறுத்தால், அவரை அறிவாளிகள் பார்த்து சிரிக்கின்ற அளவுக்கு அவரது மூளையை அல்லாஹ் சீர்குலைத்து விடுவான்.

முக்தஸரு ஸவாஇகில் முர்ஸலா – 2/376)

மனோ இச்சையை தூக்கி எறிந்து விட்டு சத்தியத்தை நோக்கி நகரக்கூடிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!

By – Shk TM Mufaris Rashadi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *