Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » அல்தாஃபியின் எலிக்கறி ஃபத்துவாவும் – அதன் வாபஸ் பின்னணியும்

அல்தாஃபியின் எலிக்கறி ஃபத்துவாவும் – அதன் வாபஸ் பின்னணியும்

பிஜேயிடமோ, அவரிடம் பாடம்படித்த அல்தாஃபி மற்றும் ததஜவின் மைக் பிரியர்களிடமோ, கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் இவர்களில் யாரும் ஒருநாளாவது தெரியாது என்றோ, அல்லது (ஏதாவது) பதிலை சொல்லிவிட்டு அல்லாஹ் அஃலம் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) என்றோ, அல்லது எனக்குத் தெரியாது என்றோ, பார்த்து சொல்லுகின்றேன், கேட்டு சொல்லுகின்றேன் என்றோ இவர்கள் சொன்னதில்லை. காரணம் கற்றுக்கொடுத்த ஆசானிடம் இந்த பண்பு இருந்ததில்லை.

நமக்கு முன்சென்றுபோன இமாம்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிளைப்பார்ப்போம்:

ஒருமுறை இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்பதற்காக ஆறு மாதங்களாகப் நான் பயணம் செய்து வந்திருக்கின்றேன். அது பற்றி எனக்கு விளக்க வேண்டும் என்று கூறினார். இமாம் மாலிக் பின் அனஸ் அவர்கள் அவர் கேட்ட கேள்விக்கான சரியான விடையைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இறுதியாக கேள்வி கேட்ட அந்த மனிதரிடம், நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை. அது பற்றி எனக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். கேள்வி கேட்ட அந்த மனிதர் கூறினார், இமாம் மாலிக் அவர்களே..! நான் இதற்கான பதிலைப் பெறுதவற்காகவே ஆறு மாதம் பயணம் செய்து வந்திருக்கின்றேன், நான் திரும்பிச் சென்று என்னுடைய மக்களுக்கு இது குறித்து என்ன விளக்கத்தைக் கூறுவேன் என்றார். அதற்கு இமாம் மாலிக் பின் அனஸ் அவர்களோ..! நண்பரே..! மாலிக் பின் அனஸ் அவர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்று சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். (நூல்: இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வரலாறு)

ஒரு உண்மையான மார்க்க அறிஞருக்கு இருக்க வேண்டிய தைரியமான பண்பு இது, எதைப்பற்றித் தனக்குத் தெரியாதோ, அதைப்பற்றி பிறர் வினவும் பொழுது, “இது பற்றி எனக்குத் தெரியாது” என்று தெளிவாக் கூறக் கூடிய தைரிமும் அவர்களிடம் இருந்தது. இதை தனது மாணவர்களிடம் வலியுறுத்தக் கூடியவராகவும் இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) இருந்தார்கள்.

இமாம்கள் என்ற பெயரைக்கேட்டாலே தங்கள் ஜமாஅத்தினருக்கு ஒருவிதமான அலர்ஜியை ஏற்படுத்தியவர் பிஜேயும் அவரது அடிச்சுவடை பின்பற்றும் ததஜவின் மைக் பிரியர்களும். இவர்களின்  சவடால் பேச்சை விளங்காத மக்கள் இவர்களையே சிறந்த இமாம்களாகக் கருதினர்.

அறியாததை அறிந்தவரிடம் கேட்பதும் – அறிந்தவர் மட்டுமே பதிலளிப்பதும்:

فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். (அல்குர்ஆன்:16:43) என்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ததஜவினரை பொறுத்தவரை மார்க்க அறிவு பெற்றவர்கள் பிஜேயும், அவரிடம் பயிற்சி பெற்ற ததஜவின் மைக் பிரியர்கள் மட்டும்தான்.

وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ‌ؕ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன்:16:116)

அறியாதவர், அறிந்தவரிடம்தான் கேட்கவேண்டும் என்பதுபோலவே, கேட்கப்படும் சந்தேகங்களுக்கு அறிந்தவர் மட்டும்தான் பதிலும் அளிக்கவேண்டும். ஆனால் பிஜேயும், அவரிடம் பயிற்சி பெற்ற மைக் பிரியர்களையும் பொறுத்தவரை பதிலளிப்பதற்கு தகுதியானவர்கள் இவர்கள் மட்டும்தான்.

சரியான மார்க்க அறிவு உள்ளவர்கள் யார்? என்பதை பிரித்து அரியத்தெரியாத ஆண்களும், பெண்களும் இவர்களையே மிகப்பெரிய அறிவுள்ளவர்களாக கருதினர். இந்த அடிப்படையில் அல்தாஃபியிடம்  கேட்கப்பட்ட கேள்விதான் எலிக் கறி உண்ணலாமா? என்று.

அதற்கு அவரும் (அல்தாஃபியும்) எலிக் கறி உண்ணலாம் என்று ஃபத்துவா வழங்கினார். அதற்கு அவரது ஆசானும் (பிஜே) முன்னாள் சகாக்கள் ததஜ பேச்சாளர்களும் அவரது ஃபத்துவாவை மறுத்துப் பேசினார், மீண்டும் அல்தாஃபி அதை மறுத்தார், மீண்டும் அவர்கள் அதற்கு அவர்கள் மறுப்பளித்தனர், இவ்வாறாக பல வாரங்கள் எலிக்கறி தொடர்ந்தது, இதற்கிடையில் கிண்டலும், கேலியும், நையாண்டியும் அவர்களுக்குள்ளேயே  அவர்களுக்கே உரிய பாணியில் செய்துகொண்டனர்.

கடைசியாக அல்தாஃபியின் ஆசான் பிஜே, ஃபுசூக் என்ற வார்த்தையின் பொருள்  என்ன? அதை எவ்வாறு புரிந்துகொள்வது என்று அவருக்கு பாடம் நடத்தினார். அதன்பிறகு அல்தாஃபி அதை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதுதான் எலிக் கறி வாபஸின் சுருக்கமான பின்னணியாகும்.

வஹியை மறுக்கும் விசயத்தில் பிஜேயை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்றும் அல்தாஃபி, வஹி மறுப்புக் கொள்கையில் வாபஸ் பெறவேண்டியவை எவ்வளவோ உள்ளது:

ஸஹீஹுல் புகாரியில் வரக்கூடிய கண்ணேறு பற்றிய ஹதீஸ், சூனியம், அஜ்வா பேரித்தம் பலம், கருஞ்சீரகத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ், சுலைமான் (அலை) தனது நூறு மனைவிகளிடம் செல்லும் ஹதீஸ், விவசாயக் கருவி இருக்கும் வீடு, பல்லியைக் கொள்ளுமாறு வரும் ஹதீஸ் இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை பிஜெயோடு சேர்ந்து மறுத்த அல்தாஃபிக்கு ஷைய்க். இஸ்மாயில் ஸலஃபி விளக்கம் கொடுத்துள்ளார், ஷைய்க். முபாரக் மதனி, சகோதரர். முஜாஹித் ரஸீன் விளக்கியுள்ளார், சகோதரர். அப்பாஸ் அலி விளக்கியுள்ளார், இன்னும் எத்தனையோ ஆலிம்கள் விளக்கியுள்ளனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாத  அல்தாஃபி, தனது ஆசான் பிஜே எலிக் கறிக்கு மறுப்பளித்ததும் பதறிப்பதறி மீளாய்வு செய்து வாபஸ் வாங்கிவிட்டார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ஸஹீஹுல் புகாரியை தொகுக்கும்போது, ஒவ்வொரு ஹதீஸையும் எழுதும்போது அழகிய முறையில் ஒழு செய்துவிட்டு, இரண்டு ரகாஅத் தொழுதுவிட்டு அல்லாஹுவிடம் பிரார்த்தனை செய்து, அல்லாஹ்வோடு இருக்கும் தொடர்பை வலுப்படுத்திய நிலையில் ஹதீஸ்களைப் பதிந்தார்கள் என்று ஸஹீஹுல் புகாரியை தொகுக்கப்பட்ட வரலாற்றில் பார்க்கின்றோம்.

ஆபாசமான குறைகளை சொல்லி ஸஹீஹுல் புகாரியில் உள்ள ஹதீஸ்களை மறுத்த இவர்கள், அன்னியப் பெண்களோடு உள்ள தொடர்பை வலுப்படுத்தியவர்கள் என்பதை உலகமே அறிந்து. இவர்களை காரி உமிழ்கிறது.

உங்கள் விஷயத்தில் நான்கு சாட்சிகள் தேவையில்லை என்று, அல்லாஹுவின் வசனங்களை மறுத்து தீர்ப்பு வழங்கிய பீஜேயின் எலிக் கறி ஆய்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கிய நீங்கள் (அல்தாஃபி) எலிக் கறி ஃபத்துவாவை மீளாய்வு செய்ததுபோல் ததஜவில் இருக்கும்போது மறுத்த ஸஹீகாண ஹதீஸ்களையும் உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும்.
—————–
S.A.Sulthan,
19/01/2019,
#Jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *