Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?

கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?

பீ.ஜே என்பவர் தனக்கு தேடிக் கொண்ட அவப் பெயரை பக்தர்கள் மறைப்பது ஒரு பக்கம் இருக்க அவரது வழிகேடுகளை நியாயப்படுத்தியும் சரிகண்டும் பிரச்சாரத்தினை பல வழிகளிலும் முடுக்கிவிட்டிருப்பதைப் பார்க்கின்ற போது தரீக்கா மற்றும் ஹுப்புல் அவ்லியா மக்கள் தமது ஷேக்குகளையும் தப்லீக் ஸகரிய்யா ஸாஹிப் அவர்களையும், ஷீஆக்களின் இமாம்கள் போன்றரோரையும் பாவங்கள் தவறு செய்யாத معصوم பாவங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்வது போன்று இவர்களும் நம்பிக்கை கொள்கின்றனர் என்ற முடிவுக்கே இப்போது வரவேண்டி இருக்கின்றது.

பீ.ஜே ஒரு கிரிமினல்
நபித்தோழர் அம்று பின் ஆஸ் ரழி அவர்களை ஒரு கிரிமினல் என வர்ணித்த அயோக்கியர் பீ.ஜே ஒரு கிரிமினல் மட்டுமின்றி முஸ்லிம் சமூக அறிஞர் பெருமக்களை மட்டம் தட்டி பிறரின் குறைகளை காற்றில் பறக்க விட்ட படுபாவி.

இவரது செயற்பாடுகளை அவரது பக்தர்கள் முடக்கியதாகவும், அவர் பேரில் நீதியை நிலைநாட்டியதாகவும் வாய்ச்சவடால் விடுவது வெறும் நாடகமே!

இவருக்கு எதிராக ஜமாத் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதி மன்றம் நாடவும் தாம் தயாராக இருப்பதாக சம்மந்தப்பட்ட பெண் தரப்பினர் எச்சரிக்கை மணி அடித்த பின்பே இவருக்கு எதிராக ஜமாத் கிழிச்ச கிழி வெளிவந்தது.

முகம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற நிலை தம்பிகளின் நிலை. தக்லீதின் உச்சியில் தம்பிகள் இருப்பதால் மத்ஹப் வெறியர்கள் போன்று மாறி விட்டனர்.

கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?
நபி ஸல் அவர்களின் அவர்கள் இஸ்லாமிய கட்டமைப்பை சீர் குலைப்பதை எச்சரிக்கை செய்தது உண்மைதான். தம்பிமார்கள் இப்போது பேசும் வீராய்ப்பு வசனங்களை கொஞ்சம் செவிமடுத்துப் பாருங்கள்.

யார் ஒருவர் அமைப்பை (ஜமாத்தை) விட்டும் ஒரு சாண் அளவேனும் வெளியைறிச் சென்று விடுகின்ற நிலையில் மரணித்து விடுகின்றானோ அவன் அறியாமைக்கால மரணத்தை தழுவுகின்றான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி)

தம்பிகளா இந்த ஹதீஸ் பற்றிய விளக்கம் நீங்கள் இப்போது கூற வரும் விளக்கம் இல்லை என்பதை அண்ணன் அண்ணல் அவர்கள் உமர் அலியோடு விவாதம் செய்த போதும் JAQH அமைப்பை விட்டும் பிரிந்த போதும் விளக்க இருந்ததை நீங்கள் அறியாது பைசுகின்றுர்கள் என நினைக்கின்றேன்.

அண்ணன் JAQH என்ற அமைப்பை விட்டும் வெளியேறிபின் ” அமீருக்கு கட்டுப்படுதல் ” என்றே அந்த மாத இதழின் தலைப்பை ஆய்வு செய்ததோடு அமைப்புக்கு அல்ல , அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே கட்டுப்பட வேண்டும் எழுதி, தனது வெளியேற்றத்திற்கு பரிகாரம் தேடினார். அதுவல்லாம் இப்போது மாற்றப்பட்ட சட்டங்களாகவிட்டதோ? கட்டுப்படுதல் யாருக்காக?

{يا ايها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم} [النساء: ٥٩]

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள், இத்தூதருக்கும் உங்களில் அதிகாரம் வழங்கப்பட்டவர்களுக்கும் கட்டுப்படுங்கள் ( அந்நிஸா 59)

عن عبد الله رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، قال: «السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره، ما لم يؤمر بمعصية، فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة ( البخاري / ٧١٤٤)

ஒரு முஸ்லிம் அவன் பாவமான ஒன்றைக் கொண்டு ஏவப்படாதிருக்கும் காலமெல்லாம் அவன் விரும்பும் வெறுப்புக் கொள்ளும் எதுவானாலும் அவன் செவிசாய்த்து, கட்டுப்பட்டு நடப்பது அவன் மீதுள்ள கடமையாகும். பாவமான காரியத்தைக் கொண்டு ஏவப்பட்டால் அவன் செவிசாய்க்க, கட்டுப்பட வேண்டியதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

கட்டுப்படுதல் என்பது ஜமாத்திற்காக அல்ல. மாறாக அல்லாஹ்வுக்காகவே!

عن عائشة رضي الله عنها، عن النبي صلى الله عليه وسلم قال: «من نذر أن يطيع الله فليطعه (أخرجه البخاري/ ٦٦٩٦)

யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட நேர்ச்சை செய்தானோ அவன் அவனுக்கே கட்டுப்படவும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி)
ஒருவர் அல்லாஹ்வின் போதனைக்கு அமைவாக இயங்கும் ஜமாத்தோடு சேர்ந்து நடப்பதை நபி ஸல் அவர்கள் கடமையாக்கினார்கள். பிற்காலத்தில் தோன்றும் பிரிவுகள் தொடர்பான செய்தி ஒன்றின் தொடரில் تلزم جماعة المسلمين وإمامهم நீ முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களின் தலைவரையும் பற்றிக் கொள் எனக் கூறியதால் தலைவராக இருப்பவர் அல்லது அமைப்பு அல்லாஹ், ரசூலின் போதனைக்கு மாற்றமாக இருந்தாலும் என்பது பொருள் அல்ல.

அப்படி பார்க்கின்ற போது பீ.ஜே என்பவரின் போதனைகள் பல பிற்பட்ட காலங்களில் குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானதாக இருப்பதை நாம் அறிவோம்.

பீ.ஜேவைப் கண்மூடிப் பின்பற்றுவோர் நிர்வாக நெருக்கடிகாரணமாகவே அவரை தமது அமைப்பில் இருந்து விலக்குவதாக அறிவித்தனர், ஆனால் அவர்கள் இன்றுவரை அவரது ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் பற்றிப் பிடித்தவர்களாகவே வாழ்கின்றனர்.

பதிவு ரிஸ்வான் மதனி
19/04/2018

4 comments

  1. 1). பாக்கர், அப்பாஸ் அலி, அல்தாபி இவர்களை அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கிய இவர்கள் தான், ஜெயினை பதவியில் இருந்து விலக்கி இருக்கிறார்கள், இதிலிருந்தே இவர்களின் நேர்மை விளங்கும்.
    2). பொதுப்பணத்தில் இயங்கும் இணையதளத்தின் பெயர் onlinepj, இதுதான் இவர்களின் யோக்கியதை,
    3). நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களை விமர்சித்த போது, மார்க்கத்தை சொல்கிறார் என்று மந்தை கூட்டம் கேட்டதோ அன்றே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டது.

  2. நண்பர் ரிஸ்வான் மதனி அவர்களுக்கு,

    நீங்கள் மற்றும் ஸலபி இமாம்கள், சகோதரர் PJ அவர்களை தனிப்பட்ட விதத்தில் தாக்கி எழுதுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் அவர்களுடைய பல வருட பிரச்சாரங்களினால் அக்கொள்கையானது மக்களுடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டது. தமிழ்நாட்டுலயும், சிறிலங்காவிலும் இஸ்லாம் சமுதாயத்தில் அதிகமான நபர்கள் தௌஹீத் கொள்கையால் கவரப்படுள்ளார்கள். நீங்கள் நிரூபிக்க வேண்டியது அவர் கூறிய விளக்கங்கள் எவ்வாறு தவறு என்று மக்கள் ஏற்று கொள்ளும் விதத்தில் குரான், ஹதீஸ் அடிப்படையில் எடுத்து கூறுவதாகும். வாதத்திற்கு அவர் பொய்யராக அல்லது விபச்சார குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களாக இருந்தாலும் அவர் வாதங்களை அனைத்தயும் குரான் மற்றும் ஹதீஸ்களை மேற்க்கோள் காட்டி நிறுவியுள்ளதாகவே அனேகர் கருதுகிறார்கள். மேலும் அதிகமான ஸலபி இமாம்கள் பிஜே யை தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பதலினால் அவர்களுடைய குற்றச்சாட்டு PJ என்ற தனி மனிதர் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது மறுபுறம் அவர்கள் குரான், ஹதீஸ்கள், அடிப்படையில் கூறும் விளக்கங்கள் மக்களிடம் போய் சேர்வதில்லை. நீங்கள் தாக்க வேண்டியது அவர்கள் கொள்கைகளை தான் PJ அல்ல.

  3. அபூ சுஹைல்

    பீஜேவின் சொந்த வாழ்க்கையை அலசுவது குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில்தான். பார்க்க கீழ்கண்ட குர்ஆன் வசனம்

    49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

    ததஜவின் கொள்கை மற்றும் அடித்தளம் பீஜே போட்டது. பீஜேயை அப்படியே தக்லீத் செய்பவர்கள் ததஜவின் பக்தர்கள். கொள்கையின் சூத்திரத்தாரி பொய்யன் விபச்சாரகன் என்பதாக நாங்கள் சொல்லவில்லை. ததஜவின் நிர்வாகக்குழு சொல்கிறது. அதனால்தான் அவரை வெளியேற்றிய நடவடிக்கை.

    அப்படியிருக்க, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் தீயவனின் கொள்கையை
    ததஜ மறுபரிசீலனை செய்யட்டும். பெரும்பாவம் ஒன்றை செய்த காலத்தில் தோற்றுவித்த கொள்கைதான் ததஜவின் தலைவன். அதாவது இவர்கள் சொல்லும் “கொள்கையே தலைவன்”.

    மேலும், பீஜே மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை அலசியதும் இந்த அடிப்படையில்தான்.

  4. Shiek Mohamed

    சகோதரா, ஒருவருடத்திற்கு முன்பில் இருந்து ஆடியோ விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது இது என் குரல் இல்லை என்று சொன்னவர், கையும் களவுமாக மாட்டிக்கொண்டபின் ஒத்துக்கொண்டார், இதிலிருந்து நாம் விளங்க வேண்டியது அவர் பொய்யர் என்று, பொய்யரின் இஸ்லாமிய விளக்கங்களை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும், மேலும் இஸ்லாம்கல்வியில் அவரின் கொள்கை பற்றிய மறுப்பு தனிப்பகுதியாக உள்ளது அதில் அவரின் இஸ்லாமிய அறிவை பற்றி அறிந்துகொள்ளலாம், பீ சே வை தனிப்பட்ட முறையில் காக்கவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை , அனுமதியும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *