Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஷேக் உஸைமீன் அவர்கள் ஜஸ்ஸாஸா தொடர்பான ஹதீஸை (பீஜே மறுத்தது போன்று) மறுத்தார்களா?

ஷேக் உஸைமீன் அவர்கள் ஜஸ்ஸாஸா தொடர்பான ஹதீஸை (பீஜே மறுத்தது போன்று) மறுத்தார்களா?

ஷேக் உஸைமீன் அவர்கள் தஜ்ஜால் உயிரோடு உள்ளான் என்ற செய்தியை மறுத்துள்ளார் பீஜே யை விமர்சனம் செய்வது போல் ஷேக் உஸைமீன் அவர்களை ஸலபிகள் விமர்சனம் செய்வார்களா? என்ற கேள்வியுடன் பீஜேயின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கையை நேர்வழியாக ஏற்றுள்ள சகோதரர்கள் பல இருட்டடிப்புக்களுடன் எழுதப்பட்டுள்ள ஆக்கம் ஒன்றை share பண்ணி தங்களின் பிழையான கொள்கைக்கு வலுச்சேர்க்க முனைந்துள்ளனர். அதன் உண்மை தன்மை பற்றி ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஷேக் உஸைமீன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்

கேள்வி: முன்னைய பத்வா ஒன்றில் நீங்கள் தஜ்ஜால் தற்போது இல்லை என்று கூறி உள்ளீர்கள். ஆனால் அது பாதிமா பின்த் கைஸ் அறிவிக்கும் தமீம் அத்தாரி பற்றிய ஹதீஸுக்கு முரணாக உள்ளதே. அதை தெளிவுபடுத்த முடியுமா?

இமாம் அவர்களின் பதில்: இந்த கருத்தை நாம் கூறியது நபி ஸல் அவர்கள் கூறிய “இன்று இந்த பூமியில் இருக்கும் எவரும் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இருக்க மாட்டார்கள்” என்ற ஹதீஸை ஆதாரமாக கொண்டே. இந்த ஹதீஸை தமீம் அத்தாரியின் (முஸ்லிமில் வரும் ஜஸ்ஸாஸா) ஹதீஸுடன் நடைமுறைப்படுத்தி பார்த்தோம் என்றால் அதற்கு முரண்படுகிறது. தமீம் அத்தாரியின் ஹதீஸில் தஜ்ஜால் வெளியாகும்வரை (இப்போதும்) இருந்துகொண்டு இருப்பதாக கூறுகிறது. எனவே புகாரி முஸ்லிமில் உள்ள இந்த உறுதியான ஹதீஸுக்கு அது முரண்படுகிறது. மேலும் தமீம் அத்தாரி விபரிக்கும் அந்த ஹதீஸ் நபியவர்கள் சொல்லி இருப்பார்களா இல்லையா என்ற சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.

இந்த ஹதீஸின் “மத்னில்”(உள்ளடக்கத்தில்) “நகாரத்”(மறுக்கத்தக்க குறை) இருப்பதன் காரணமாக இதை நபியவர்களிடம் இருந்து வந்த ஸஹீஹான செய்தியாக ஏற்பதற்கு உள்ளம் இடம்கொடுக்கவில்லை.இந்த ஹதீஸை ஷைக் ரஷீத் ரிழா அவர்கள் தனது தப்ஸீரில் மிகவும் கடுமையாக மறுத்து எழுதியுள்ளார்கள்.ஏனெனில் இந்த ஹதீஸின் உள்ளடக்கம் நபியவர்களின் பேச்சு ஒழுங்கிலிருந்து மிகவும் தூரமான ஒன்றாகும்.

ஷைக் ரஷீத் ரிழாவுக்கு முன்பு வேறு ஸலபு அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனரா? என்று ஷைக் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஷைய்க் உதைமீன் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: (அவ்வாறு கூறியதுபற்றி ) எனக்கு தெரியாது. ஏனெனில் அது நிபந்தனை அல்ல. நான் இவ்விடையத்தில் உலமாக்களின் கூற்றுக்களை தேடிப்பார்க்க வில்லை அதில் எனக்கு சந்தேகம் உண்டு.

: ! فقد سئل فضيلته: ذكرتم في الفتوى السابقة أن الدجال غير موجود الآن، وهذا الكلام ظاهره يتعارض مع حديث فاطمة بنت قيس في الصحيح عن قصة تميم الداري، فنرجو من فضيلتكم التكرم بتوضيح ذلك؟
فأجاب بقوله: ذكرنا هذا مستدلين بما ثبت في الصحيحين عن النبي صلى الله عليه وآله وسلم قال: “إنه على رأس مائة سنة لا يبقى على وجه الأرض ممن هو عليها اليوم أحد”. فإذا طبقنا هذا الحديث على حديث تميم الداري صار معارضاً له؛ لأن ظاهر حديث تميم الداري أن هذا الدجال يبقى حتى يخرج، فيكون معارضاً لهذا الحديث الثابت في الصحيحين. وأيضاً فإن سياق حديث تميم الداري في ذكر الجساسة في نفسي منه شيء، هل هو من تعبير الرسول صلى الله عليه وسلم أو لا. اهـ.
وقال في موضع آخر: حديث الجساسة يخالف ما ورد في صفة الدجال في الصحيحين أنه رجلٌ قصير، قَطط، جعد الرأس أشبه ما يكون بعبد العزى بن قطن، رجل من قحطان. والجساسة ليس على هذا السياق. اهـ.
وقال أيضا: أن النفس لا تطمئن إلى صحته عن النبي صلى الله عليه وسلم؛ لما في سياق متنه من النكارة، وقد أنكره الشيخ محمد رشيد رضا في تفسيره إنكاراً عظيماً؛ لأن سياقه يبعد أن يكون من كلام النبي صلى الله عليه وسلم.
فسئل: هل قال به أحد من السلف قبل محمد رشيد رضا ؟ فقال الشيخ: لا أعلم، لكن لا يشترط، وأنا لم أتتبع أقوال العلماء فيه؛ لكن في نفسي منه شيء

(அவர்களின் மொழிபெயர்ப்பு சிறு மாற்றத்துடன்)

1: ஷேக் உஸைமீன் ரஹ் அவர்கள் ஜஸ்ஸாஸாவின் ஹதீஸை மறுக்க வில்லை மாறாக இந்த செய்தி இன்ன செய்திக்கு முரணாக தெரிகிறது எனவே இதை நபி ஸல் அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்று சந்தேகிக்குறேன் என்றே கேள்வி பதிலில் குறிப்பிடுகின்றார்.

கவனிக்கப்பட வேண்டியவை

? இங்கே ஷேக் உஸைமீன் அவர்கள் அவரின் எந்தவொரு ஆய்வையும் முன்வைக்க வில்லை மாறாக இது நபி ஸல் அவர்களின் கூற்றா? இல்லையா? என நான் சந்தேகித்தில் உள்ளேன் என்றே கூறுகின்றார்.

?ஷேக் அவர்களின் இந்த கூற்றில் அவர்கள் ஹதீஸை மறுத்தமைக்கு எந்த சான்றும் கிடையாது என்பது தெளிவான விடயம். அவர் ஹதீஸை இட்டுக்கட்டபட்டது என்றோ பலஹீனம், என்றோ மறுக்கப்பட வேண்டியவை என்றோ கூறவில்லை

?அடுத்து ஷேக் அவர்கள் ஜஸ்ஸாஸா தொடர்பான நபி மொழியை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்பது அவரின் பின்வரும்

“, என் உள்ளம் இதை ஸஹீஹ் என ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்க வில்லை”

இது நபி ஸல் அவர்களின் கூற்றா? இல்லையா? என சந்தேகிக்குறேன்

“நான் இது தொடர்பில் அறிஞர்களின் கருத்துக்களை தேடிப்பார்க்க வில்லை,”

எனக்கு அதில் சிறு சந்தேகம் உண்டு

என்ற இந்த கூற்றுக்களின் மூலம் தெளிவாகிறது.

காரணம் ஆய்வு எண்பது குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வரும் அல் குர்ஆன் வசனங்கள் , ஹதீஸ்கள் , அனைத்தையும் ஒன்று திரட்டி முன்னைய அறிஞர்களின் கூற்றுக்களில் உள்ள வாத பிரதிவாதங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தான் சந்தேகம் அற்ற ஒரு முடிவுக்கு வருவதாகும்.

அது மற்றுமின்றி ஷேக் அவர்கள் மத்னை மாத்திரம் பார்த்து விட்டு ஹதீஸை சந்தேகம் கொள்ள வில்லை இச்னாதையும் வைத்தே தனக்கு சந்தேகம் உள்ளது என்பதை கூறுகின்றார்..

இதற்கான சான்று :
https://m.facebook.com/story.php?story_fbid=241466929672313&id=100014270226982

எனவே கேள்வி பதிலில் ஷேக் அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் அவரின் ஆய்வின் முடிவு கிடையாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

2: தெளிவாக சந்தேகம் கொள்ளாமல் ஹதீஸை மறுக்கும் பீஜே அவர்களின் நிலைப்பாடுகளையும், இன்ன செய்தியில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறுகின்ற ஷேக் உதைமீன் அவர்களின் நிலைப்பாட்டையும் ஒன்று என ஒப்பீடு செய்வோர் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகும்.

காரணம் இது நபி ஸல் அவர்களின் கூற்றா? இல்லையா? என்ற சந்தேகத்தில் உள்ள ஷேக் உஸைமீன் அவர்கள் ஆய்வு செய்து தனது சந்தேகம் தவறா? அல்லது ஹதீஸ் தவறானதா? என்ற சந்தேகம் அற்ற ஒரு முடிவுக்கு வரவேண்டியவராகும்.

ஹதீஸை இட்டுக்கட்டபட்ட பொய்யான செய்தி, தூக்கி எறியப்பட வேண்டிய கப்ஸா என்று விமர்சனம் செய்கின்றவர் (பீஜே) தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்தவராகும்.

தெளிவாக தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்துள்ள பீஜே அவர்கள் சந்தேகத்தில் உள்ள ஷேக் உஸைமீன் அவர்களை தனது வழி கெட்ட கொள்கைக்கு பக்க சார்பாக காட்ட முனைவது தவறாகும் இதை அவர் சார்ந்தோர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

3:ஷேக் ரஷீத் ரிழா என்பவர் ஜஸ்ஸாஸாவின் செய்தியை கடுமையான முறையில் மறுத்துள்ளதாக ஷேக் உஸைமீன் அவர்கள் கூறியுள்ளமை எமக்கு ஆதாரம் கிடையாது ஷேக் உதைமீன் அவர்கள் உண்மையில் அந்த ஹதீஸை மறுத்திருந்தால் கூட அதை நாம் தவறு என்றே கூறுவோம் காரணம் யாருடைய தவறான கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ரஷீத் ரிழா என்பவர் ஷீஆயிசம், மற்றும் போலி பகுத்தறிவு வாதம் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதை அவரின் வரலாற்றை பாடிப்போர் அறிந்துகொள்ள முடியும் அவர் இது மற்றுமின்றி பல ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண் என்று மறுத்துள்ளார்.

4: ஜஸ்ஸாஸாவின் செய்தியில் சந்தேகம் கொள்ளும் ஷேக் உஸைமீன் அவர்கள் TNTJ ஹதீஸை மறுக்க முன்வைக்கும் வாதங்கள் எதையும் முன்வைக்க வில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

5: TNTJ யின் ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு முற்றிலும் ஷேக் உஸைமீன் அவர்கள் எதிரானவர்கள் என்பதை அவரின் நூற்களை புரட்டிப்படித்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும் TNTJ மறுக்கும் எந்த ஒரு ஹதீஸையும் அவர் மறுத்தது கிடையாது.

6: PJ, TNTJ, SLTJ யின் ஹதீஸ்கலை விதி முறைப்படி பார்த்தால் உண்மையில் அவர்கள் அந்த விதிகளை நடைமுறைப்படுத்துவோர் எனில் ஜஸ்ஸாஸாவின் செய்தி மட்டுமில்லை தஜ்ஜால் பற்றிய முழு செய்திகளையும் மறுக்க வேண்டும்.

ஒரு ஹதீஸை எந்த விதிமுறைகளை கொண்டு நீங்கள் மறுக்கின்றீர்களோ அதே காரணிகள் மற்ற ஹதீஸ்களில் இருந்தால் அவைகளும் மறுக்கப்பட வேண்டியவையாகும்.. ஒன்றை மறுத்து ஒன்றை ஏற்பது ஹதீஸ்கலை விதிமுறை கிடையாது

குறிப்பு:
இது பொது மக்களில் இயக்க வெறியின்றி நடுநிலை கொண்டு சிந்திப்போருரின் தெளிவுக்காக எழுதபட்ட ஆக்கமாகும் நீ எதை சொன்னாலும் நான் மறுத்துக்காட்டுவேன் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு விதன்டா வாதம் புரிவோருக்கு அல்ல. தேவையான பதிவுகளுக்கு பின்னூட்டங்களில் இன்றி பொது பதிவுகளின் மூலம் பதில் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்..

தொடரும்…

✍இவன்
இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *