Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பிழையாக புரியப்பட்டுள்ள சத்தியத்தின் அளவுகோல்கள்

பிழையாக புரியப்பட்டுள்ள சத்தியத்தின் அளவுகோல்கள்

1: சத்தியம் அசத்திய வாதிகளின் எதிர்ப்பை சந்திக்கும் ஆனால் எதிர்க்கப்படுகின்ற குழுக்கள் அனைத்தும் சத்தியவாதிகள் கிடையாது.

ஷீஆக்கள் எதிர்க்கப்படுகின்றனர் அதனால் அவர்கள் எப்படி சத்தியவான்கள் ஆக முடியாதோ அதே போல் எதிர்க்கப்படுகின்றோம் என்பதற்காக PJ கொள்கையுடைய TNTJ -SLTJ சத்தியவாதிகள் ஆகிவிட முடியாது.

2: குறைந்த எண்ணிக்கை கொண்டோர் தான் சுவனம் நுழைவார்கள் என்பதற்காக குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்கள் அனைத்தும் அதை விளக்கம் இன்றி அளவுகோலாகக் கொண்டு தங்களை சத்தியவான்கள் என்று கூறிக்கொள்வது தவறாகும்.

குறைந்த எண்ணிக்கை கொண்ட காதியானிகள் எப்படி சத்தியவாதிகள் கிடையாதோ அதே போல் PJ கொள்கை உடைய TNTJ- SLTJ யினர் சத்தியவாதிகள் கிடையாது.

3: குர்ஆன் சுன்னாவே எமது மூலாதாரம் என்று ஒரு குழு கூறுவதனால் அவர்கள் சத்தியவாதிகள் ஆகிவிட முடியாது குர்ஆன் சுன்னாவை அவர்கள் எப்படி புரிந்துள்ளார்கள் என்பதை வைத்தே சத்தியவாதிகள் யார் என்று தீர்மானிக்கப்பட வேண்டும்.

குர்ஆன் சுன்னாவே எமது மூலாதாரம் என்று கூறிய முஃதஸிலாக்கள் எப்படி சத்தியவாதிகள் கிடையாதோ அதே போல் PJ கொள்கை உடைய TNTJ- SLTJ யினர் சத்தியவாதிகள் கிடையாது.

அல்குர்ஆன் சுன்னாவே எமது மூலாதரம் என்ற கொள்கையோடு நமக்கு முன்னர் வாழ்ந்து மரணித்த ஸபுஸ் ஸாலிஹீங்கள் வஹியின் நிழலில் எக்கொள்கையை முஃமீன்களின் கொள்கையாக தேர்ந்தெடுத்தார்களோ அக்கொள்கையில் தடம்புறலாமல் சிறு குழுக்களாக பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொறுமையுடன் மறுமையை இலக்காக கொண்டு வாழ்வோரே சத்தியவாதிகள்

✍இவன்
அல் ஹாபிழ் இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *